எழுத்தாளர் பெரியார் !

இராஜா ராஜேந்திரன்

பெரியாரின் பிறந்த நாளை இந்த வருடம் விமரிசையாகக் கொண்டாடிசூழ்நிலையை ரம்மியப்படுத்தியதுவாசகசாலை.

இந்த முழுநாள் நிகழ்வைவாசகசாலைக்கு புதிதான ஓர் அரங்கில் நடத்தியதை மேலும் மெச்சலாம்காரணம்விசாலமான அரங்குநிறைவான ஒலி அமைப்பு.

நிறைய சொகுசு மூங்கில் நாற்காலிகள். திருச்சி கூட்டம் போலல்லாமல் நாற்காலிகள் அனைத்தும் நிரம்பிவாசகர்கள் நின்றபடியும்தரையில் அமர்ந்தும் முழு நிகழ்வை ரசித்தது கண்கொள்ளாக் காட்சி.

மொத்தம் நான்கு அமர்வுகள்முதல் மற்றும் கடைசி அமர்வுகளைத் தவறவிட்டேன்இரண்டாம் மற்றும் மூன்றாம்அமர்வுகள் முழுவதையும் நன்கு ரசித்து அனுபவித்தேன்.

மிகச் சுருக்கமான உரைகள் மட்டும் :

இரண்டாம் நிகழ்வான பெரியார் பார்வையில் பெண்ணியம் நிகழ்ச்சியில் இறுதியாக பேச வந்தார் சூரியமூர்த்தி.அடிக்கடி அண்ணன் மதிமாறன் சொன்னது என்றபோதே அவர் பேச்சின் வீரியம் எப்படி இருந்திருக்கும் எனப்புரிந்து விட்டதுஅவர் பேசி முடித்ததும் நீண்ட கரவொலிஇனி அந்தப் பேச்சின் சுருக்கம்.

இன்றையத் தேதியில் பெண்ணிய இலக்கை முழுமையாக அடைந்துவிட்டோம் என நம்புவது நம்மை நாமேஏமாற்றிக் கொள்வதுதான்பெண்ணியத்தை எதிர்க்கும் பிற்போக்குவாதிகளை ஒடுக்க நமக்கு என்றென்றும்பெரியார் எனும் ஆயுதம் தேவைபெரியாரின் பெண்ணியக் கருத்துக்களைக் கொண்டுதான் அவர்களை மேலும்பேசவிடாது செய்ய முடியும்.

ஆதிக்கம் எந்த வடிவில் இருந்தாலும் அதைப் பெரியார் எதிர்த்தார்பார்ப்பனியம் மட்டுமன்றி வல்லாதிக்கம்எதுவென்றாலும் அதை எதிர்க்கும் மையப்புள்ளியாக இருந்தவர் பெரியார்.

தான் அறிமுகப்படுத்தி வளர்த்த சுய மரியாதை திருமணத்தையே ஒரு கட்டத்தில்பழசாகிப் போச்சே இன்னுமாஇதையே தொடர்ந்துக்கிட்டு இருக்கறது என்று விமர்சித்தவர்.

பெண்கள் திருமணம் செய்துக் கொள்ளத் தேவையில்லைகுழந்தைகள் பெற்றுப் போடும் இயந்திரமாக இருக்கத்தேவையுமில்லைகருப்பையை அகற்றிவிடுங்கள்என்றெல்லாம் அறிவுரை சொல்லிக் கொண்டேவிதவைகள்மறுமணம் செய்துக் கொள்ள ஆதரவும்அதை எதிர்ப்பவர்களைக் கடுமையாகச் சாடிய வண்ணமுமாக இருந்தார்.நிச்சயம் இந்த நிலை அவருடைய எதிரிகள் வாயில் கொட்டிய அவலாகத்தான் இருந்திருக்கும்ஆனால் பெரியார்அதுபற்றி எந்தக் கவலையும் கொண்டதில்லைஅவருடைய ஒரே நோக்கம்ஆணாதிக்கத்தால அல்லலுறுபவர்கள்துன்பம் அகலவேண்டும்அவ்வளவுதான் !

திருவள்ளுவரை மிகவும் போற்றியவர் பெரியார்அதே பெரியார்திருக்குறளில் சில அதிகாரங்களிலிருந்தகுறள்களை குறைகூறிவள்ளுவர் ஒரு பெண்ணாயிருந்தால் இப்படி நிச்சயம் இப்படி எழுதியிருந்திருக்க மாட்டார்என்று.

இதைப் பகடி செய்து பெரியாரின் விமர்சகர் ஒருவர்ஏன் ஒளவையார் கூடத்தான் பெண்கள் பேச்சைக் கேட்கவேண்டாம் என்றிருக்கிறார்அவர் பெண்தானே எனக் கேள்வி கேட்கஅதையும் குடி அரசு இதழில் பிரசுரித்துஒளவையாரே எழுதியிருந்தாலும் குற்றம் குற்றம்தான்பெண்ணே பெண்ணைத் தாழ்த்தி எழுதி இருந்தாலும் அதுபிற்போக்குத்தனம்தான்அதை நான் புறக்கணிக்கிறேன் என்றிருக்கிறார்எதிரி எந்த வடிவில் வந்தாலும்பச்சாதாபம் பார்க்காமல் அடித்து உடைத்தவர்தான் பெரியார்அதுதான் பெரியார்.

பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதை பெரியார் அடிமைத்தனம் என்றே சொன்னார்உனக்கு தங்கத்தில்கம்மலையும்மூக்குத்தியும் போட்டு அழகுப் படுத்துகிறானே உன்னைப் பெருமைப் படுத்தவா அவனுக்கு கோபம்வரும்போது அந்த இடத்தில் அடித்தால் காது பிய்ந்து ரத்தம் கொட்டும்உன்னை அது பயமுறுத்தி அவனுக்குஎப்போதும் அது அடங்கிப் போகச் செய்யும்உன் நீள கூந்தலை ரசிக்கிறான் என அதை மெருகேற்றிவளர்க்கிறாயே…….. அதைப் பற்றி இழுத்து உன்னை அடிக்க அதுதானே வாகு ?

இவருடைய பேச்சின் வீடியோ வந்ததும் அவசியம் பார்க்கவும்நல்ல உரை வீச்சு.

நீண்ட வரிசையில் நின்றுஎளிய ஆனால் சுவையான மதிய உணவை உண்ட பின்உடனடியாகத் தொடங்கியதுமூன்றாம் அமர்வுபத்திரிக்கையாளராக பெரியார்.

பள்ளி ஆசிரியர் தமிழாசான் பேச்சு சுகமான தூக்கத்தை வரவழைத்ததால் சரியான நோட்ஸ் எடுக்க முடியவில்லை.இவருக்கு அடுத்துப் பேசிய கோவை இளைஞர் ரூபன் பிரகாஷ் பட்டையைக் கிளப்பினார்.

பக்தி இலக்கியங்களும்பெண்கள் கற்புக்கரசிகளாக வாழ்ந்துகுடும்பப் பொறுப்பை சுமப்பதெப்படி என்கிறஅறிவுரைகளை எழுதும் பத்திரிக்கைகளும் மட்டுமே வந்துக் கொண்டிருந்த ஒரு சூழலில்தான், குடிஅரசு இதழ்மக்களுக்கு இப்போது மிக அவசியம் என்பதை பெரியார் உணர்கிறார்.

இந்த அமர்வில் இறுதியாகப் பேச வந்த விகடனின் பிரபல கட்டுரையாளர் .திருமாவேலன் அவர்களுடையஉரைதான் மகுடத்தின் கோமேதகம்.

திருமாவேலனின் பல எழுத்துக்களை வாசித்திருந்தும் இன்றுதான் முதன்முறையாக அவர் உரையைக் கேட்டேன்.மெய் சிலிர்க்கவைத்த பேச்சு.

தன் உரையில், பெரியாரை எட்டிக்காயெனக் கருதும் தமிழ் தேசியவாதிகளுக்கும்தலித்தியவாதிகளுக்கும் பலவிளக்கங்களை அளித்தவண்ணமிருந்தார்.

வாசகசாலை பற்றியப் பரிச்சயம் பெரியாருக்கு நிரம்ப உண்டுஈரோட்டில் வாசகசாலை என்கிற நூலகத்தை நடத்திவந்த தங்கப் பெருமாள் பிள்ளை பெரியாரின் மிக நெருங்கிய நண்பர்அந்த நூலகத்தில் அப்போதே பல அரியநூல்கள் இருந்தன.

பெரியார் எனும் ஆபாசப் பத்திரிக்கையாளர்.

இதைத்தான் இந்த அமர்வுக்கு தலைப்பாக இட வேண்டும் என வாசகசாலையிடம் கோரிக்கை வைக்க விரும்பினேன்.பிறகு அது வேறு மாதிரி திரிக்கப்பட்டு பெரும் சர்ச்சையை கிளப்பிவிடக் கூடும் என பத்திரிக்கையாளர்பெரியாரோடு நிற்க வேண்டியதாய்ப் போயிற்று.

ஆமாம்சமூகத்தின் ஆபாசத்தை பத்திரிக்கையில் வெளிச்சம் போட்டுக் காட்டியவர் பெரியார்கொடிய சமூகஅவலங்களை நிர்வாணப்படுத்தி பத்திரிக்கையில் எழுதினால் அருவருப்பாகத்தானே இருக்கும் ?

அத்தகையச் சமூக அவலங்களை ஆதரித்து வந்தவர்கள், பெரியாரின் இந்த ஆபாச எழுத்துக்களைப் பார்த்து கூசிஉமிழ்ந்தனர்இன்றுவரை அவர்களால் உமிழ்தலை நிறுத்த முடியாதளவுக்கு ஆபாச எழுத்து 😉