Revelations
Revelations

சேத்தனும், லட்சுமிப்ரியாவும், திவ்யாவும், சேகரும் துணிச்சலாக, இயல்பாக முடிவெடுக்கத் தயங்குவதற்குப் பின்னால் பழமைக்குள் உழலும் மனநிலை போக்கே காரணமாக இருந்துவிடுகிறதாய் எடுத்துக் கொள்ளலாம்.

LEARN MORE
தமிழ் சினிமாவில் அழகியல் – 4
தமிழ் சினிமாவில் அழகியல் – 4

கருவிகளின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக கலையைத்தான் படைத்துக்கொண்டு இருக்கிறோம் என்ற உணர்வில் நாம் எப்போதும் ஒன்றி இருக்க முடியாது. இயந்திரத்தனமாக வேலை செய்து கொண்டே ஒரு கலையையும் படைப்பது என்பது மிகப்பெரிய சவால்.

LEARN MORE

எழுத்தாளர் பெரியார் ! இராஜா ராஜேந்திரன் பெரியாரின் பிறந்த நாளை இந்த வருடம் விமரிசையாகக் கொண்டாடி, சூழ்நிலையை ரம்மியப்படுத்தியதுவாசகசாலை. இந்த முழுநாள் நிகழ்வை, வாசகசாலைக்கு புதிதான ஓர் அரங்கில் நடத்தியதை மேலும் மெச்சலாம், காரணம்விசாலமான அரங்கு. நிறைவான ஒலி அமைப்பு. நிறைய சொகுசு மூங்கில் நாற்காலிகள். திருச்சி கூட்டம் போலல்லாமல் நாற்காலிகள் அனைத்தும் நிரம்பி, வாசகர்கள் நின்றபடியும், தரையில் அமர்ந்தும் முழு நிகழ்வை ரசித்தது கண்கொள்ளாக் காட்சி. மொத்தம் நான்கு அமர்வுகள். முதல் மற்றும் கடைசி அமர்வுகளைத் தவறவிட்டேன். இரண்டாம் மற்றும் மூன்றாம்அமர்வுகள் முழுவதையும் நன்கு ரசித்து அனுபவித்தேன். மிகச் சுருக்கமான உரைகள் மட்டும் : இரண்டாம் நிகழ்வான பெரியார் பார்வையில் பெண்ணியம் நிகழ்ச்சியில் இறுதியாக பேச வந்தார் சூரியமூர்த்தி.அடிக்கடி அண்ணன் மதிமாறன் சொன்னது என்றபோதே அவர் பேச்சின் வீரியம் எப்படி இருந்திருக்கும் எனப்புரிந்து விட்டது. அவர் பேசி முடித்ததும் நீண்ட கரவொலி. இனி அந்தப் பேச்சின் சுருக்கம். இன்றையத் தேதியில் பெண்ணிய இலக்கை முழுமையாக அடைந்துவிட்டோம் என நம்புவது நம்மை நாமேஏமாற்றிக் கொள்வதுதான். பெண்ணியத்தை எதிர்க்கும் பிற்போக்குவாதிகளை ஒடுக்க நமக்கு என்றென்றும்பெரியார் எனும் ஆயுதம் தேவை. பெரியாரின் பெண்ணியக் கருத்துக்களைக் கொண்டுதான் அவர்களை மேலும்பேசவிடாது செய்ய முடியும். ஆதிக்கம் எந்த வடிவில் இருந்தாலும் அதைப் பெரியார் எதிர்த்தார். பார்ப்பனியம் மட்டுமன்றி வல்லாதிக்கம்எதுவென்றாலும் அதை எதிர்க்கும் மையப்புள்ளியாக இருந்தவர் பெரியார். தான் அறிமுகப்படுத்தி வளர்த்த சுய மரியாதை திருமணத்தையே ஒரு கட்டத்தில், பழசாகிப் போச்சே இன்னுமாஇதையே தொடர்ந்துக்கிட்டு இருக்கறது ? என்று விமர்சித்தவர். பெண்கள் திருமணம் செய்துக் கொள்ளத் தேவையில்லை, குழந்தைகள் பெற்றுப் போடும் இயந்திரமாக இருக்கத்தேவையுமில்லை. கருப்பையை அகற்றிவிடுங்கள், என்றெல்லாம் அறிவுரை சொல்லிக் கொண்டே, விதவைகள்மறுமணம் செய்துக் கொள்ள ஆதரவும், அதை எதிர்ப்பவர்களைக் கடுமையாகச் சாடிய வண்ணமுமாக இருந்தார்.நிச்சயம் இந்த நிலை அவருடைய எதிரிகள் வாயில் கொட்டிய அவலாகத்தான் இருந்திருக்கும். ஆனால் பெரியார்அதுபற்றி எந்தக் கவலையும் கொண்டதில்லை. அவருடைய ஒரே நோக்கம், ஆணாதிக்கத்தால அல்லலுறுபவர்கள்துன்பம் அகலவேண்டும், அவ்வளவுதான் ! திருவள்ளுவரை மிகவும் போற்றியவர் பெரியார். அதே பெரியார், திருக்குறளில் சில அதிகாரங்களிலிருந்தகுறள்களை குறைகூறி, வள்ளுவர் ஒரு பெண்ணாயிருந்தால் இப்படி நிச்சயம் இப்படி எழுதியிருந்திருக்க மாட்டார்என்று. இதைப் பகடி செய்து பெரியாரின் விமர்சகர் ஒருவர், ஏன் ஒளவையார் கூடத்தான் பெண்கள் பேச்சைக் கேட்கவேண்டாம் என்றிருக்கிறார். அவர் பெண்தானே ? எனக் கேள்வி கேட்க, அதையும் குடி அரசு இதழில் பிரசுரித்து, ஒளவையாரே எழுதியிருந்தாலும் குற்றம் குற்றம்தான். பெண்ணே பெண்ணைத் தாழ்த்தி எழுதி இருந்தாலும் அதுபிற்போக்குத்தனம்தான், அதை நான் புறக்கணிக்கிறேன் என்றிருக்கிறார். எதிரி எந்த வடிவில் வந்தாலும்பச்சாதாபம் பார்க்காமல் அடித்து உடைத்தவர்தான் பெரியார். அதுதான் பெரியார். பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதை பெரியார் அடிமைத்தனம் என்றே சொன்னார். உனக்கு தங்கத்தில்கம்மலையும், மூக்குத்தியும் போட்டு அழகுப் படுத்துகிறானே ? உன்னைப் பெருமைப் படுத்தவா ? அவனுக்கு கோபம்வரும்போது அந்த இடத்தில் அடித்தால் காது பிய்ந்து ரத்தம் கொட்டும். உன்னை அது பயமுறுத்தி அவனுக்குஎப்போதும் அது அடங்கிப் போகச் செய்யும். உன் நீள கூந்தலை ரசிக்கிறான் என அதை மெருகேற்றிவளர்க்கிறாயே…….. அதைப் பற்றி இழுத்து உன்னை அடிக்க அதுதானே வாகு ? இவருடைய பேச்சின் வீடியோ வந்ததும் அவசியம் பார்க்கவும். நல்ல உரை வீச்சு. நீண்ட வரிசையில் நின்று, எளிய ஆனால் சுவையான மதிய உணவை உண்ட பின், உடனடியாகத் தொடங்கியதுமூன்றாம் அமர்வு. பத்திரிக்கையாளராக பெரியார். பள்ளி ஆசிரியர் தமிழாசான் பேச்சு சுகமான தூக்கத்தை வரவழைத்ததால் சரியான நோட்ஸ் எடுக்க முடியவில்லை.இவருக்கு அடுத்துப் பேசிய கோவை இளைஞர் ரூபன் பிரகாஷ் பட்டையைக் கிளப்பினார். பக்தி இலக்கியங்களும், பெண்கள் கற்புக்கரசிகளாக வாழ்ந்து, குடும்பப் பொறுப்பை சுமப்பதெப்படி என்கிறஅறிவுரைகளை எழுதும் பத்திரிக்கைகளும் மட்டுமே வந்துக் கொண்டிருந்த ஒரு சூழலில்தான், குடிஅரசு இதழ்மக்களுக்கு இப்போது மிக அவசியம் என்பதை பெரியார் உணர்கிறார். இந்த அமர்வில் இறுதியாகப் பேச வந்த விகடனின் பிரபல கட்டுரையாளர் ப.திருமாவேலன் அவர்களுடையஉரைதான் மகுடத்தின் கோமேதகம். திருமாவேலனின் பல எழுத்துக்களை வாசித்திருந்தும் இன்றுதான் முதன்முறையாக அவர் உரையைக் கேட்டேன்.மெய் சிலிர்க்கவைத்த பேச்சு. தன் உரையில், பெரியாரை எட்டிக்காயெனக் கருதும் தமிழ் தேசியவாதிகளுக்கும், தலித்தியவாதிகளுக்கும் பலவிளக்கங்களை அளித்தவண்ணமிருந்தார். வாசகசாலை பற்றியப் பரிச்சயம் பெரியாருக்கு நிரம்ப உண்டு. ஈரோட்டில் வாசகசாலை என்கிற நூலகத்தை நடத்திவந்த தங்கப் பெருமாள் பிள்ளை பெரியாரின் மிக நெருங்கிய நண்பர். அந்த நூலகத்தில் அப்போதே பல அரியநூல்கள் இருந்தன. பெரியார் எனும் ஆபாசப் பத்திரிக்கையாளர். இதைத்தான் இந்த அமர்வுக்கு தலைப்பாக இட வேண்டும் என வாசகசாலையிடம் கோரிக்கை வைக்க விரும்பினேன்.பிறகு அது வேறு மாதிரி திரிக்கப்பட்டு பெரும் சர்ச்சையை கிளப்பிவிடக் கூடும் என பத்திரிக்கையாளர்பெரியாரோடு நிற்க வேண்டியதாய்ப் போயிற்று. ஆமாம். சமூகத்தின் ஆபாசத்தை பத்திரிக்கையில் வெளிச்சம் போட்டுக் காட்டியவர் பெரியார். கொடிய சமூகஅவலங்களை நிர்வாணப்படுத்தி பத்திரிக்கையில் எழுதினால் அருவருப்பாகத்தானே இருக்கும் ? அத்தகையச் சமூக அவலங்களை ஆதரித்து வந்தவர்கள், பெரியாரின் இந்த ஆபாச எழுத்துக்களைப் பார்த்து கூசிஉமிழ்ந்தனர். இன்றுவரை அவர்களால் உமிழ்தலை நிறுத்த முடியாதளவுக்கு ஆபாச எழுத்து 😉  

LEARN MORE
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் – 3
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் – 3

இதில் குறைந்த பட்சமாக ரூபாய் ஐந்தாயிரத்திலிருந்து முதலீட்டைத் துவங்கலாம். எஸ்ஐபி முறையில் சேமிக்க மாதம் குறைந்தது ஆயிரம் ரூபாயிலிருந்து ஆரம்பிக்கலாம். குறைந்தது ஆறு மாதத்திற்காகவது செலுத்த வேண்டும்.

LEARN MORE
பூபாலன் கவிதைகள்
பூபாலன் கவிதைகள்

பூபாலன் கவிதைகள் இரா.பூபாலன் 1) புகை வண்டியை விடவும் மிகத் தாமதமாய் வந்து சேர்ந்தேன் புகைவண்டி நிலையத்துக்கு. நான் செல்ல வேண்டிய வண்டியின் கூவொலி மட்டும் தூரத்தில் தேய்ந்தபடியிருக்க தண்டவாளங்களை வெறித்துப் பார்க்கிறேன். நானற்ற அந்த வண்டியில் எனது இருக்கை நிரப்பப் படாமலேயோ அல்லது தாமதமாகவோ நிரப்பப் படக்கூடும். எனது திட்டமிட்ட பணிகள் தள்ளிப் போகின்றன. அடுத்த வண்டிக்கான காத்திருப்பிலிருப்பவர்கள் ஆயத்தமாகிறார்கள். தண்டவாளங்களுக்கு நடுவில் மனிதக் கழிவுகளைக் கழுவிக்கொண்டும் கூட்டிக் கொண்டும் இருக்கும் ஒரு அழுக்கு மனிதனின்

LEARN MORE
சூனியக்காரன்களின் கதை
சூனியக்காரன்களின் கதை

நான் ஒரு பெண்ணாக இளமையிலிருந்தே பலவற்றிலிருந்து மீறி வந்துள்ளேன். ஒருவேளை என் முதல் காதல் வெற்றி பெற்றிருந்தால் உன் பார்வையில் நான் வெற்றி பெற்றவளாகவே இருந்திருப்பேன்

LEARN MORE
அனிதாக்களைக் கொல்லும் அரசியலைச் சொன்ன அசோகமித்திரனின் ‘காந்தி’
அனிதாக்களைக் கொல்லும் அரசியலைச் சொன்ன அசோகமித்திரனின் ‘காந்தி’

அனிதாக்களை கொல்லும் அரசியலைச் சொன்ன அசோகமித்திரனின் ‘காந்தி’ முத்துராசா குமார் உண்மைகள் கசப்பானவை, உண்மைகளைச் சொன்னால் கசக்கத்தான் செய்யும் என்ற சொல்லாடல்கள் காலம்காலமாக நாம் சொல்லிவருவதுதான். இந்த  வாழ்வில் நம்மில் எல்லோரிடமும் மறைக்கப்பட்ட அல்லது எந்த சூழ்நிலையிலும் சொல்லிவிடவே கூடாதென்று அமுக்கப்பட்ட பல உண்மைகள் இக்கணம் வரை நமது மனதிற்குள் இருக்கும். சிலர் அதைக் கடைசிவரை சொல்லாமலே செத்தும் போயிருக்கிறார்கள். அந்த உண்மைகளுக்கு ஒரு வடிவத்தை, வண்ணத்தை, ருசியை அதுவும் கசப்பான ருசியை ஒரு குவளையில் அடைத்து

LEARN MORE
நிரந்தர நட்சத்திரம்
நிரந்தர நட்சத்திரம்

அவளுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம் உதிர்ந்து போனதற்காக அவள் யாருக்கும் எந்தக் கடிதமும் கையெழுத்தின்றி அனுப்பப் போவதில்லை, எந்த ஒரு சொல்லையும் சொல்லப் போவதுமில்லை.

LEARN MORE
தாமோதர ரெட்டித் தெரு
தாமோதர ரெட்டித் தெரு

ஐராவதத்திற்கு சைக்கிள் ஓட்ட வராது. டூவீலர் வராது. .கார் ஓட்டவும் தெரியாது. ஆனால் ஒரு புதிய காரை விலை கொடுத்து வாங்கிவிட்டார். பின் டிரைவரை வைத்துக்கொண்டு அவர் சுற்றாத இடம் இல்லை. டிரைவர் ஐராவதம் காரை மட்டுமல்ல, அவரையும் ஓட்டினான்.

LEARN MORE
அசோகமித்திரனின்‘மஞ்சள் கயிறு’
அசோகமித்திரனின்‘மஞ்சள் கயிறு’

ஒரு திருப்பம் வேண்டும், ஒரு தீர்வு வேண்டும் கதையின் முடிவில்தான் க்ளைமாக்ஸ் வரவேண்டும் என்கிற எழுதப்படாத அக்காலச் சட்டங்களை மீறி சுப்புவின் கையாலாகத்தனமும், இயலாமையும் நம்மைத் தாக்கும் ஒரு அற்புதமான சிறுகதை இது.

LEARN MORE
மேலும் பார்க்கLoading ...