பதிப்பகம்

சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது

  1. மண்வாசனை புவியரசன்

பெரிய பிளாஸ்டிக் கவர்களில் உதிரிப்பூக்களை மூட்டையாக கட்டிக்கொண்டு வரும்போது முன்பெல்லாம் மலைத்துப்போய் உட்கார்ந்து விடுவாள் ஒன்னால எல்லாம் முடியும் டீ,… நாங்க கட்ட. ஊக்கமாக பேசுவாள் தமிழரசியக்கா மென்மையாக எடுத்து நோகாமல் தலையில் வைத்துக்கொள்ளும் #பூக்கள் தமிழரசியக்கா சொல்வதுபோல அத்தனை மென்மையானவையல்ல எனப் போகப்போகா புரிந்தது அவளுக்கு நகக் கண்கள் வலியெடுத்துவிடும் விரல்கள் விரைத்து நின்றுவிடும் உள்ளங்கைகள் வலியால் அதிர்ந்து போகும் சோறு  குழம்பு எதிலும் பூ வாசம்தான் குமட்டிக்கொண்டு வரும் சவுந்தரிக்கு…

எழுத்தாளர் கலைச்செல்வி அவர்களின் சிறுகதைத் தொகுப்பான சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாதுவாசித்துக் கொண்டிருக்கின்றேன்

சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது – கலைச்செல்வி

சராசரி நபர்கள், சமுதாயத்தின் விதிமுறை இலக்கணத்திற்குள்ளும் வரையறைக்குள்ளும் வராத மனிதர்கள், விளிம்பு நிலை மக்கள், அழுத்தத்திற்கு ஆளாகும் பலநிலைப்பட்ட பெண்கள் என இவர்களின் வாழ்வையும் உணர்வையும் ஆழ்ந்த நுணுகிய மொழியில் பேசுகின்றன கலைச்செல்வியின் கதைகள். எதிர்பாராது ஏற்படும் சூழல்களில் சிக்குண்டு அவை தீர்மானிக்க, நடத்தையையும் வாழ்வையும் வடிவமைத்துக் கொள்ளும் இம்மாந்தர்களை உயிர்ப்புடன் நடமாட விடுகின்றார். கசடுகள் நிரம்பிய மனம், மென்மையும் பேரன்புமே வன்மையாக வருத்தும் சூழல்கள், தடுமாற்றமும் ஊசலாட்டமுமாகக் கைமீறிச் செல்லும் உணர்வுகள் தரும் குற்றவுணர்ச்சி, மெய்ஞ்ஞான விசாரணை, மானுடத்தின் பரிணாமமும் பலவிதமான பரிமாணமும் என இவற்றினூடாக வாழும் மனிதர்கள் யதார்த்தத்தின் ஒரு கதுப்பினைச் சுவைக்கக் கொடுக்கின்றனர்.

 

மேலும் வாசிக்க

வாசகசாலை

வணக்கம், எங்கள் அனைவருக்கும் முதன் முதலில் முகநூல் வாயிலாகத்தான் இறுக்கமான, இணக்கமான நட்பு உண்டானது.இலக்கிய வாசிப்பை பொதுப்பண்பாகக் கொண்டு அமைந்த ஒரு குழுமத்தின் மூலமே இத்தகைய நட்புகள் கிட்டப்பெற்றன.காலம் சென்றுக்கொண்டே இருக்க, வெறுமனே பேச்சு, பதிவு, அரட்டை என்பதோடு நம் இலக்கிய ஆர்வம் தேங்கிப் போக வேண்டுமா ? என எங்களுக்குள் அடிக்கடி கேள்விகள் ஒவ்வொரு நண்பர்களிடமிருந்தும் வந்த வண்ணமிருந்தது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

Close

மேலே
Close