பதிப்பகம்

இசைக்கச் செய்யும் இசை கருஞ்சட்டை தமிழன்

கருஞ்சட்டை தமிழன்

  1. கருஞ்சட்டை தமிழன்

கொஞ்சம் தடிபுக்காக இருப்பதால் கைவலிக்கிறது. முதலிலேயே ஆஸ்கார் நாயகன் வரவேற்கிறார் அதுமட்டுமில்லாமல் ஆறு ரகுமானின் சூபி இசை பற்றிய கட்டுரைகள். ராஜேஷ் மொறட்டு ரகுமான் ரசிகர் போல. பீசா படத்தை ஆங்கிலத்தில் தேட அந்த படம் வராமல் pizza என்று வர, பிறகு fiza என்று கண்டுபிடித்து haja ali பாட்டைக்கேட்டது அருமை. இந்தி படப் பெயரை ஆங்கிலத்தில் போடவும். முடியல. பல பாடல்கள் சூபி இசையில் இருப்பதை இவர் மூலமே அறிந்தேன், ஆச்சரியம்.

நம்மஊர் பெரியவர்கள் பலரை பதிவுசெய்தது சிறப்பு. AM.ராஜா, மெல்லிசை மன்னர் என்று ஒருவரையும் விடவில்லை பாகவதர் உட்பட. எப்படி எழுத்தாளர் அந்த காலத்து பாடல்களை எல்லாம் கேட்டாரோ என்று தெரியவில்லை.

இந்திகாரர்கள் பற்றி ஏழு கட்டுரை கஸல் பற்றியதையும் சேர்த்து. பாடல்களும், படத்தின் பெயர்களும் வாயில் கூலாங்கற்கள் போட்டது போல் படிப்பதற்கே மென்று துப்ப வேண்டியதாக உள்ளது. (ஹிந்தி எதிர்ப்பு இல்லைனா நானும் சுலபமா படிச்சிருப்பேனோ என்னவோ). எல்லாப்பாடல்களையும் தேடமுடியவில்லை என்றாலும் ஜானே ஜானே என்ற யேசுதாஸ் பாட்டை கேட்டேன். அருமை.இந்தி பாட்டை போட்டவர்களில் மூன்று பேர் வங்காளிகள் என்பது சிறப்பு.ராஜேஷ் குல்ஸார் கவிதைகளை மொழிபெயர்த்தால் இங்கே பலர் கமிட் ஆக வாய்ப்புள்ளது. ஆவணம் செய்யவும்.

மொஸார்ட் பற்றிய கட்டுரை அருமை. Amadeus படம் பார்க்கவேண்டும். Titan வாட்ச் இசையை சின்ன பகுதியாக நம்ம ஆட்கள் யாரோ போட்டார்கள் என்றே இதுவரை நம்பியிருந்தேன். என்னைப்போல் நூறுகோடிபேர் இது மொஸார்ட் இசைத்தது என்று தெரியாமல் இருக்கிறார்கள். கட்டுரையில் இதை கேளுங்கள் என்று கூறி 1.50 to 2.20 நேரத்தை போட்டீர்களே அந்த இசையை போடவில்லையே!எப்படி ஐயா கேட்பது?

ஜிப்ரான் பற்றிய என்னுடைய எண்ணமும் அவருக்கான வாய்ப்பு சரியாக கூடிவரவில்லை என்பதே. அநிருத், ஹாரிஸ், ரமேஷ் விநாயகம்,தேவா, இமான், சந்தோஷ் நாராயணன் பற்றிய குறிப்புகள் அட்டகாசம். விஜய் ஆன்டனி, ஸ்ரீகாந்த் தேவா, டி.ராஜேந்தர் பற்றியும் எழுதியிருக்கலாம். அதேபோல் யுவன் சங்கர் செல்வராகவன் கூட்டனியை பற்றிய கட்டுரையே உள்ளது ,தனி கட்டுரை இல்லை.சோகங்கள்.

இளையராஜா பற்றி ஒரு கட்டுரை, ராஜாவுடன் கமலின் இரு பாடல்கள் பற்றி ஒரு கட்டுரை. ஒன்று விருமாண்டி கிளைமாக்ஸ் பாட்டு மற்றொன்று ஹேராம்மில் இசையில் தொடங்குதம்மா. எழுத்தாளர் கூறும் ஐந்து டக் சத்தத்தை கேட்பதே சுகானுபவம். அந்த பாட்டில் எனக்கு ஜெய் ஸ்ரீராம் என்று பின்புலத்தில் கத்துவது கொஞ்சம் காண்டானாலும் பாட்டு பயங்கரம்.

ராஜேஷ் இசைஞானி பற்றி சிறிதளவே எழுதியுள்ளதற்கு பிராயசித்தமாக முழு புத்தகம் ஒன்றை எழுத வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம். இசையின் ராகம், தாளம் பற்றி போடவில்லை என்று யோசிக்கும்போதுதான் எழுத்தாளர் தனக்கு இசை பற்றி தெரியாதென கூறுகிறார். ஒரு ரசிகரின் பார்வையில் இது அற்புத உழைப்பின் தொகுப்பு.

நண்பர்கள் வழக்கம்போல் ராஜேஷின் நட்பு வட்டத்தில் நான் இல்லாததால் கொண்டு சேர்க்கவும். வாழ்த்துக்கள்.”

மேலும் வாசிக்க

வாசகசாலை

வணக்கம், எங்கள் அனைவருக்கும் முதன் முதலில் முகநூல் வாயிலாகத்தான் இறுக்கமான, இணக்கமான நட்பு உண்டானது.இலக்கிய வாசிப்பை பொதுப்பண்பாகக் கொண்டு அமைந்த ஒரு குழுமத்தின் மூலமே இத்தகைய நட்புகள் கிட்டப்பெற்றன.காலம் சென்றுக்கொண்டே இருக்க, வெறுமனே பேச்சு, பதிவு, அரட்டை என்பதோடு நம் இலக்கிய ஆர்வம் தேங்கிப் போக வேண்டுமா ? என எங்களுக்குள் அடிக்கடி கேள்விகள் ஒவ்வொரு நண்பர்களிடமிருந்தும் வந்த வண்ணமிருந்தது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

Close

மேலே
Close