கவிதைகள்

மையுண்ட விழிகள்

சிவநிறைச்செல்வி

காணாத தூரத்து

கானல் நீர் திவலைகளில்

முகவரியற்ற குமிழிகளின் மூர்ச்சை கீதங்கள்….

சஞ்சாரம் கொண்ட ஓயா நதிகளின்

சந்தேக வளைவுகளில் ஒடிந்த நீரலைகள்…

காற்றின் சரமாரி கிழிசல்களில் அவிழ்ந்து மாய்ந்த காய்ந்த சருகுகள்…

காக்கை கூட்டினிலே யக்னமிட்டு மிளிர்ந்த

குயிலின் பொன் குஞ்சுகள்….

கைவிடப்பட்ட சிக்கிமுக்கி கற்கள்.,

தீக்குச்சிகளிடம் மண்டியிட்டு வாசித்த மயான மடல்கள்….

நயந்து வந்து நன்றியுரையை

மூங்கில் காடுகளுக்காய் சமர்ப்பித்த ராகங்கள்….

என்றேனும் பருவமடைவேனென

கூவித்திரிந்த பச்சிலைகளின் அம்மிடையிடைப்பட்ட முராரிகள்…

இவ்வாறான பிரகதியின் பிரசுரங்கள் காலத்தின் அசரீரிகளுக்கு

செவிமடுத்து செயல்பட்டிருக்க….

அத்துனையும் கண்காணித்து

அடிநுனியை வெவ்வேறாய் முடிந்துவிட்டு

களிக்கும் பிரபஞ்சத்தின்

மையுண்ட விழிகள்….!

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

பதில் அனுப்பவும்

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.  * குறியிட்ட இடங்களில் கேட்கப்படும் விபரங்களை கட்டாயம் அளிக்க வேண்டும்


மேலே
Close