மற்றமையை உற்றமையாக்கிட
- கருஞ்சட்டைதமிழன்
மிக சமீபமாகவே இவரைத் தொடர்ந்தாலும் எனக்கு இவருடைய எள்ளல் நடை பிடித்திருக்கிகிறது. இவரது புத்தக வெளியீட்டுக்கு சென்றாலும் இவரை சந்திக்கமுடியவில்லை என்பதில் எனக்கு மிகுந்த வருத்தம்.
சுஜாதா படத்தை எப்படி வைத்தார் என்று தெரியவில்லை, ஆனால் சுஜாதாவைப்போல் அனைத்து ஏரியாவிலும் மனிதர் பூந்து வந்திருக்கிறார். அனைத்து கட்டுரைகளையும் படித்தவரையில் அண்ணல் அம்பேத்கர் எழுதிய புத்தகமோ, அம்பேத்கர் பற்றிய புத்தகமோ எதையும் விட்டுவைக்காமல் கரைத்திருக்கிறார்.
பலரும் பேசாத திரைப்படங்களின் தாக்கத்தை் Bela balazs இன் வார்த்தைகளில் மேற்கோளிட்டு காட்டியது அபாரம். அம்பேத்கரைப் போலவே பாஸ்கர் மேற்கோள்களைக் காட்டியபடியே இருக்கிறார். அதைப்போல் பலரும் கேட்கும்” நீங்கள் ஏன் இந்து மதத்தை மட்டும் சாடுகிறீர்கள், மற்றவற்றை பேச பயமா?” என்கிற கேள்விக்கு ரிச்சர்டு டாக்கினிஸியின் The Gods delusion எனும் புத்தகத்தில் “எல்லா மதங்களும் சம அளவில் எதிர்க்கப்பட வேண்டியதுதான் ,மாற்றுக்கருத்தில்லை. ஆனால், எது பெரும்பான்மை மதமோ, அதை அதிகம் விமர்சிக்க வேண்டிய கட்டாயம் உருவாகிறது, அதன்படி நான் கிறிஸ்துவத்தை விமர்சிப்பதே நியாயம்” என்கிற பதிலை நமக்கு தருகிறார்.
கருப்பின மக்களுக்கு மிதக்க வராது என்பதை நம்ம ஊருல ” நோக்கு வராதுடா ” என்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம். முன்னனியானவர்களை மட்டுமே பேச இங்கு ஆட்கள் இருக்கையில் மலேசியா வாசுதேவனின் கட்டுரை புதிய பார்வை. நடுநிலை இந்தியன் ரேஷனலிஸ்ட் முகமூடியாகட்டும், எல்லா வகையிலும் தாங்களே முன்னோடி எனும் கட்டம் கட்டுகிறதும், புத்தரை விஷ்னுவாக மாற்றும் வித்தையையும் சொல்கிறார்.
பணக்காரன், ஏழையிடம் பணத்தினால் எந்த பயனும் இல்லை என்று சொல்வான், ஆனால் அதை இந்த ஏழை பணம் இல்லாத போது எப்படி ஏற்பான்? இதற்கும் காக்கா முட்டையை உடைக்கிறார்.
சுஜாதா இவரைப்போல, இந்த கருத்துக்களை கூறியிருந்தால் ஒருவேளை சமுதாயம் மாறியிருக்கலாம் அல்லது இந்த சாதிய சமூகத்தில் அவர் கேட்பாரற்றும் போயிருக்கலாம்.
குற்றம் கண்டுபிடித்தே பட்டம் வாங்கிய பரம்பரை என்பதால் இந்த கற்கண்டு குவியலில் எனக்கு தென்பட்டது எழுத்தாளர் வாசுகி பாஸ்கரே தவிர முகநூல் பிரபலம், நையாண்டி பாஸ்கர் மிஸ்ஸிங்.
இந்த பதிவை பாஸ்கர் பார்க்க எழுதவில்லை, இந்த பதிவை பார்க்கும் மற்றவர்கள் பாஸ்கரின் பக்கத்தை பார்க்கவும், புத்தகத்தை வாங்கவுமே எழுதியிருக்கிறேன்.
“ஒரு மனிதன், சக மனிதனை அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவன்”. “மற்றவர்களுக்கு ஊறு விளைவிக்காமல் மனசாட்சிப்படியும் மனிதத்தின் அடிப்படையிலும் பிறரை அனுகவேண்டும்”. ” பிறப்பால் யாரும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லை” என்கிற கோட்பாடுகளை அப்படியே என்னை நானே கேள்விக்கு உட்படுத்தி உள்வாங்கி வளர்ந்து வரும் போது..
வாசுகி பாஸ்கர் அவர்களை முகப்புத்தகத்தில் பின் தொடற ஆரம்பித்தேன். அவரின் பதிவுகள் அனைத்தும் , நாம் இதுவரை நம் வாழ்க்கையில் ஒவ்வொரு சித்தாந்தத்தை புரிந்து வைத்துள்ள விதம், ஒன்று போதாது அள்ளது வேறானது என்பதை கன்னத்தில் அறைந்தார்ப்போல் மறு பரிசீலனை செய்ய வைத்திருக்கிறார். அதை படித்தே பக்குவப்பட்டு வந்திருக்கிறேன் கடந்த ஓராண்டாக..
இதுவரை நான் எந்த புத்தகத்தையும் எனக்கென்று வாங்கியது இல்லை. முதன் முறையாக Shankar அவர்களின் “ஊழ்ல் உளவு அரசியல்” மற்றும், இவரின் “மற்றமையை உற்றமையாக்கிட” புத்தகத்தையும் , கூடவே “பெரியார் இன்றும் என்றும் ” ஆகிய புத்தகங்களை வாங்கினேன்.
வாசுகி பாஸ்கரின், ஒவ்வொரு கட்டுரையையும் படித்து உள்வாங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அரை வாங்கிய எனக்கு, மொத்தமாக படிக்க டப்பு டப்பு என மாற்றி மாற்றி அடிக்கும் Feel. அனைத்தும் அற்புதம். ஆனால் ஒரு கட்டுரையை படித்துவிட்டு அடுத்த கட்டுரைக்கு போவதற்கு வேறொரு Fresh Mindset தேவைப்படுகிறது. ஒவ்வொரு நாள் office முடித்து வந்ததும் ஒரு கட்டுரை.. மாத்திரை போடுவது போல் படித்து முடித்தேன் (வேண்டிய இடைவெளி).
அவற்றில் முக்கியமான ஒரு கட்டுரை “நூற்றாண்டு கண்ணீர்” சத்தியமாக அழ வைத்துவிட்டது.
இவரின் பதிவுகளுக்கு Comment கொடுத்து உரையாடலாம் என்று நினைத்தால் இன்னும் Friend Request accept செய்யாமல் இருக்கிறார். ஆதலால் நேரடியாக போய் பேசிவிட்டு ஒரு கையெழுத்தும் வாங்கிவிட்டேன்.
தாராளமாக 160 கொடுத்து வாங்கலாம். வாழ்வை, வரலாற்றை புரிந்து கொள்ளுங்கள்.