பதிப்பகம்

நாடற்றவனின் முகவரியிலிருந்து

  1. வாசுகி பாஸ்கர்

//லைக்ஸ் சூழ் உலகில் லைக்குகளை அதிகம் பெறுபவனை பெரிய இவனை போல பார்க்கும் துரதஷ்டமான நிலையில் இருந்து யதார்த்தத்தை, உண்மையை சொல்லும் போது, அதையும் “பெருந்தன்மை, தன்னடக்கம்” போன்ற வார்த்தைகளில் அடைப்பது அதனினும் கொடுமை.

என் சமூக அரசியல் பதிவுகளை காட்டிலும், நையாண்டி, சர்காஸ்டிக் போஸ்ட் தான் பெரும்பாலும் நேரத்தை கடத்த இணையத்திற்குள் வருகிறவர்களுக்கு மத்தியில் அங்கீகரிக்கப்படுகிறது. இதற்கிடையில் புத்தகம் எழுத கிடைத்த வாய்ப்பில் விழுந்த இணைய வெளிச்சம் அக்மார்க் கமர்ஷியல் தனம் தான்.

நண்பர், தோழர் மகிழ்நன் பா.ம என் வகையறாவில் சேர மாட்டார். அம்பேத்கரை அபகரிக்க அரங்கேறிக்கொண்டிருக்கும் அயோக்கிய காலச்சூழலில், அவரை இடது சாரி அரசியலில் இருந்து வேறுபடுத்திக் காட்ட முனையும் சூழலில், நானும் கூட நுனிப்புல் மேய்வதை போல “புத்தர் விஷுணுவானது இப்படித்தான்” என்று ஒரு கட்டுரையை புத்தகத்தில் எழுதி இருக்கிறேன். அம்பேத்கர் பற்றிய எந்த புரிதலுமற்ற புதுவரவு இளைஞர்கள், அம்பேத்கர் புகைப்படத்தை பார்த்தவுடனேயே அது அம்பேத்கர் புத்தகம் என்று இந்துத்துவாக்களின் புத்தகங்களை அறியாமையால் வாங்கிச் செல்கிற கூட்டத்திற்கு வேண்டுமானால் அந்த கட்டுரை உதவலாம்.

ஆனால் மகிழ்நன் எழுதிய நாடற்றவனின் முகவரியிலிருந்து புத்தகம் நான் சொல்வது இதைத்தான் என்று நேரடியாக சொல்லாமல் போனாலும், முழுக்க முழுக்க அதைத்தான் பேசுகிறது. இப்போதுதான் வாசித்து முடித்தேன்.

விருப்பமானவர்களை நட்பு பட்டியலில் சேர்த்து உறவு கொண்டாடுவது, சேர்ந்து இயங்குவது, செல்பி எடுத்துக்கொள்வது, சேர்ந்து சுத்துவது போல நெருக்கமாக்கி கொள்ள வேண்டுமென்று நான் ஒரு போதும் நினைப்பதில்லை, தூரத்தில் இருந்தாலும் அப்படியே வைத்து சமூக அரசியல் பார்வையால் நட்பு பாராட்டும் மனம் எனக்குண்டு. அப்படியொரு அழகான, நேர்த்தியான, இணக்கமான நண்பர், தோழர் மகிழ்நன்❤️

இன்னும் நேரம் ஒதுக்கி, இந்த கட்டுரைகளோடு சேர்த்து, பெரிய தொகுப்பொன்று வெளிவர வேண்டுமென்பது என் ஆசை, நண்பர் செய்யணும். தனிப்பட்ட முறையில் இதை சொல்லலாம், ஆனால் இங்கே பதிவதின் மூலம் ஏதோ என்னால் சிலருக்கு அவர் அடையாளம் காட்டப்படலாம் என்று நம்புகிறேன்.

என்னைப்போல அவர் facebook material இல்லை, நிச்சயம் அவர் வேற லெவல்ல வர வேண்டிய, பேசப்பட வேண்டிய அரசியல் பார்வை உடையவர். அவரை தெரிந்த நிறைய பேருக்கு இது தெரியும், அதிலும் நான் ரொம்ப லேட் என்பதால் என் பங்குக்கு சொல்லி வைக்கிறேன்🙏🏿//

  1. த.ஜீவலட்சுமி

ஆண்டாளை சொந்தம் கொண்டாடுவதன் மூலம் விமர்சனமாக முன் வைக்க வேண்டிய கருத்தை கலவரமாக மாற்ற முயலும் இந்துத்துவ அரசியல்தான் அம்பேத்கரை தொழுது வழிபட வேண்டியவராக மாற்றி அவரின் விடுதலைக் கருத்தாக்கங்களை அழிக்க முயற்சிக்கிறது . அவர்களுடைய திட்டத்தின் செயல் வடிவம் தான் நம் சேரிகளில் முளைத்திருக்கும் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட்டங்கள் . இங்கே பெரியாரா? அம்பேத்கரா ? என்று நாம் விவாதித்துக் கொண்டிருக்கையில் பார்ப்பனியம் எப்படி தன்னை நிலைநிறுத்த முயன்று கொண்டிருக்கிறது என்பதையும் அம்பேத்கர் பற்றி இந்துத்துவா கும்பல் பரப்புகிற அவதூறுகளுக்கு அம்பேத்கர் அவர்களின் விளக்கங்களையும் ‘நாடற்றவனின் முகவரியிலிருந்து’ கட்டுரைத் தொகுப்பில் பேசியிருக்கிறார் தோழர் .மகிழ்நன் .
மேலும் சீமான் என்கிற தமிழ்தேசிய அரசியல் தலைவர் பற்றிய அருமையான கட்டுரை ஒன்றும் இருக்கிறது. பேச்சு நடையில் எளிய மக்கள் வாழ்வில் சாதிய கட்டமைப்பும் அரசு எந்திரமும் நடத்தும் தாக்குதல்கள் பற்றியும், மார்க்ஸை பெரியாரை அம்பேத்கரை வாசிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் அமைந்துள்ள இந்தப் புத்தகம் அனைவரும் வாசித்து விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று .

  1. கருஞ்சட்டைதமிழன்.

மகிழ்நன் பற்றி முதலில் அறிந்ததும், அவரைப்பார்த்ததும் அவரது புத்தக வெளியீட்டில் தான். நான் முதன்முதலாக புத்தகத்தில் கையெழுத்து வாங்கியது இவரிடம் என்பதால் இனி எப்போதும் மறக்க இயலாதவர். முதல் கட்டுரையே அம்பேத்கரை இந்துத்துவத்திற்கு கடத்தும் முயற்சியைபற்றி விளக்கியுள்ளார். இதில் அவர் அண்ணலின் ஏராளமான வாக்கியங்களை கோடிட்டுள்ளார். மேலும் பக்தாளுக்கு கால இடைவெளியில்லாமல் ஒரே பைத்தியக்காரத்தனம் இருப்பதை வீர் சாவர்கர் என்று அன்போடு அழைக்கப்படும் டர்ர் சாவர்கரின் பொன்மொழியான . ” அம்பேத்கர் இந்து மதத்தை மட்டுமே விமர்சிக்கிறார், மற்ற மதங்களை விமர்சிக்க பயம். ” என்பதில் விளக்குகிறார்.இது ஆய்வுக்கட்டுரையோ என்பதுபோல சிறப்பான அரசியல் செருப்படி.

அடுத்தது சீமானின் take diversion சாதித்தலைவர்களின் சாதி புகழ்ச்சி,மணியரசனின் இந்துத்துவம், ஆதலால் காதல் செய்வீர் படத்தின் காண்டம் விளம்பரம், சேரிகளின் அவசியத்தை பற்றிய இந்தியா டுடே வின் கட்டுரை மற்றும் பெரியாரின் கிராமங்களின் பார்வை ஆகியவற்றில் இவரின் வாழ்வியல் சிந்தனையை நமக்கு கடத்துகிறார்.

பாலியல் தொழிலாளியின் தமிழ் முத்தத்தில் மும்பை சிவப்பு விளக்கு பகுதிகளின் கருப்பு பக்கங்களை நமது எண்ணங்களில் பச்சையாக பதியவைக்கிறார். துப்புவதால் வீழப்போகும் மா(மோ)டிகளையும், கழிவறை பரிதாபங்களும் சமூகத்தின் உண்மைநிலையை உள்ளபடியே சொல்கிறது.

கிறிஸ்தவத்தில், பிரார்த்தனை செய்வதால் புற்று நோய் குணமாகுமா என்று கேள்வியோடு பரிசோதிக்க சொல்லி இயேசப்பா பிள்ளைகளை டரியல் ஆக்குகிறார். அடுத்து கட்டுரையிலேயே மூன்று மதங்களும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பதை மனு, பைபிள், குர்ஆன் வாசகங்களோடு அப்பட்டம்மாக்குகிறார்.

பள்ளர்களின் தற்போதைய கோரிக்கை, கீதை புனிதநூலா? பற்றிய தமது கருத்துகளை தெளிவான பார்வையில் வைக்கிறார். கடவுள்களின் இறப்பு, அவர்களை replace செய்த கடவுள்கள், அதன் காரணங்கள் பலரும் அறிய வேண்டியவை. புத்தகம் முழுக்க கடவுள்களின் நிலையை பரிதாபத்துக்கு உள்ளாக்கியிருக்கிறார்.

ஒவ்வொரு கட்டுரையும் தனி புத்தகமாய் போடும் அளவிற்கு கருத்து செறிவு உள்ளது. பல மேற்கோள்களால் இவர் கருத்தின் உறுதி உயர்ந்து நிற்கிறது. இந்த புத்தகம் ஆரம்பநிலை பகுத்தறிவில் நிற்பவர்கள் எதிர் கருத்துகளோடு விவாதிக்க கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்றாய் இருக்கும்.எளிய நடையில் பாசிஸ்டுகளை தோலுறித்து தொங்கவிடுகிறார். மாறுபட்ட சிந்தனை உள்ளவர்கள் கூட ஏற்றுகொள்ளும் வகையில் உள்ளது இந்த தொகுப்பு.

நக்கீரர் வழியில் சொல்வதென்றால் ஆதலால் காதல் செய்வீர் பற்றிய கட்டுரை இந்த தொகுப்பில் அவசியமில்லாததுபோல் தோன்றுகிறது.ஒரு வரியில் வரும் கருஞ்சட்டைகாரன் எனும் வார்த்தைக்காக குமுதா happy .

இந்த புத்தகத்தில் பலமுறை இவர் பயன்படுத்தும் வார்த்தை “டவுசர்”. எந்த மொழியிலும் அவருக்கு புடிக்காத இந்த வார்த்தைக்கு உரியவர்களின் டவுசர்களை அவுத்துதான் விட்டிருக்கிறார். மகிழ்ச்சி.

  1. SAKTHI

சமூக செயல்பாட்டாளர், சமூகத்தை சீர்திருத்தக்கூடிய வல்லமை கொண்ட ஒரு மனிதர் எழுதிய புத்தகம் தான் நாடற்றவனின் முகவரியிலிருந்து.. மகிழ்நன் அவர்கள் அறிமுகமானது @வாசகசாலை பக்கத்தில் பெரியார் பற்றி அவர் உரை கேட்டதில் இருந்து தான்.
அவருடைய வரிகள் தொடர்ந்து ஒலித்து கொண்டே இருக்கிறது, இப்பவும் அந்த வரிகள்…

“எனக்கு எங்க அப்பாவை விட பெரியார் தான் பிடிக்கும். எங்க அப்பா நா பிறந்த பிறகு தான் எனக்காக உழைக்க ஆரம்பித்தார்.. ஆனால் பெரியார் நா பிறப்பதற்கு முன்னே எனக்காக உழைக்க ஆரம்பிச்சுட்டார். என் அப்பாவை விட ஒரு நெருக்கமான மனிதரா தான் நா feel பண்றேன் ”

“ஒரு பெண் நினச்சா தான் ஒரு ஆணை விடுவிக்க முடியும் அது போல் தான் இந்தியாவில்…” இதில் வரும் முதல் வரிக்கும் அடுத்த வரிக்கும் தொடர்பு இல்லை. ஆனால் இரண்டும் உண்மை.

பொதுவா ஒரு புத்தகம் எழுதறதால என்ன பண்ணிட முடியும் ? புத்தகம் விளம்பரம் ஆகி அதை 4 பேர் படிச்சாங்க என்றால் ஒரு வேலை யோசிக்கிறதுக்கான வாய்ப்பு இருக்கு. ஆனால் புத்தகம் இயக்கம் லட்சியகண்ணோட்டத்தோடு, இயக்கத்தோடு வேலை பார்த்தா தான் அந்த புத்தகம் அசலான அதற்கான அரசியல் தேவையை செய்ய முடியும்.

மகிழ்நன் அவர்கள் அவரின் நாடவற்றனின் முகவரியிலிருந்து புத்தகத்தை போல் மனசுக்கு பட்டத்தை மனசுக்கும் உதட்டுக்கும் இடைவெளி இல்லாமல் மாரி போல் பொழிந்துஇருக்கிறார்.. – உமா மகேஸ்வரன்.

மேலும் வாசிக்க

வாசகசாலை

வணக்கம், எங்கள் அனைவருக்கும் முதன் முதலில் முகநூல் வாயிலாகத்தான் இறுக்கமான, இணக்கமான நட்பு உண்டானது.இலக்கிய வாசிப்பை பொதுப்பண்பாகக் கொண்டு அமைந்த ஒரு குழுமத்தின் மூலமே இத்தகைய நட்புகள் கிட்டப்பெற்றன.காலம் சென்றுக்கொண்டே இருக்க, வெறுமனே பேச்சு, பதிவு, அரட்டை என்பதோடு நம் இலக்கிய ஆர்வம் தேங்கிப் போக வேண்டுமா ? என எங்களுக்குள் அடிக்கடி கேள்விகள் ஒவ்வொரு நண்பர்களிடமிருந்தும் வந்த வண்ணமிருந்தது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

Close

மேலே
Close