பேய் படம் எடுப்பது எப்படி ?

பேய் படம் எடுப்பது எப்படி ?

கட்டுரை:- ஷாரா சித்தாரா

* exorsist,evildead,conjuring,insidious தவிர மற்ற ஆங்கில,கொரியன் பேய் பட டீவிடிகளை வாங்கி தினமும் மூன்றுவேளை பார்க்கவும்.

* பேய் படம் என்பது பீஸ் இல்லாத பிரியாணி சாப்பிடுவது போல..இது குஸ்கா இல்ல பிரியாணிதான் என்று நம்மளை நாமளே நம்ப வைப்பது போல நாம எடுப்பது பேய் படம் தான் என்று முதலில் நாம் நம்ப வேண்டும்.

* பேயாக நடிப்பதற்கு ஆர்டிஸ்டுகள் ஈசியாக கிடைத்துவிடுவார்கள்..மற்ற காஸ்டிங்கில் மனோதத்துவராக மனோபாலாவும் பேய் ஓட்டுபவராக மொட்டை ராஜேந்திரனும் தமிழ்சினிமாவில் ஆல்ரெடி புக் ஆனவர்கள்.

* பேயாக கண்டிப்பாக 25 வயதிற்கு உட்பட்ட வடநாட்டு பெண்கள் தான் செட் ஆவார்கள்..பாஜ்வா பூஜ்வா என்ற surname களை sort செய்து பார்த்தால் சிறப்பு.

* ஒரே சீனில் ஹார்னியாகவும் ஹாரராகவும் மாறும் சீன்கள் தான் பேய் படத்திற்கான மூலதனம்..குறைந்தபட்சம் போட்ட காசை எடுக்கலாம்.

* பேய்கள் பஞ்ச் டயலாக் பேசும்..மொக்கை ஜோக் அடிக்கும்..ஆனா முழுமுட்டாளாக இருக்கும்..இதுதான் பேய்களின் குணாதிசயம்..இன்னொசன்ட்டான பேய்களை இன்டர்வெல்க்கு மேல் நம்மாளு ரசிக்கதொடங்கி பரிதாப்பட்டுவிடுமாறு ஒரு ப்ளாஷ்பேக்கில் அவளை பாவாடைதாவணி பாவப்பட்ட அசமந்தம் பெண்ணாக காட்டவேண்டும்.

* பேய்க்கு வாக்கப்படறதுக்கு முக்கிய தகுதி சிலபல பேக்ஸ்கள் இருக்கவேண்டும்..குறிப்பாக சிக்ஸ்பேக் டீசர்ட்டை தாண்டி தெரியவேண்டும்.

* பேய்க்கு பிடித்திருக்கும் ச்சே..பேய் பிடித்திருக்கும் பெண்ணாக நடிக்கனும் என்றால் மேக்அப் போட்டுவிட்டு ஹீரோயினாகவும்.மேக்அப் களைத்துவிட்டு பேயாகவும் நடித்தால் ப்ரொடியுசரையும் சற்று சிக்கனசிங்கியில் திருப்திப்படுத்தலாம்.

*முக்கியமாக ஒரு மூங்கில்காடு சீன்இருக்கும்..அங்கே அட்டைப்பூச்சிகள் நிறைய உலாவும் எனவே கையில் கைவசம் சிலபல பாக்கெட் கல்உப்புகளை தயாரிப்பாளர் செலவிலே வாங்கிவிடவேண்டும்..

*தோட்டா இல்லாத துப்பாக்கி சுடுவது..வில்லன் தம்பியை பறக்கவிட்டு பாதிகட்டப்பட்ட பெரியபில்டிங் உச்சியில் இருந்து தவறி விழுவது போல் கொல்ல வேண்டு்ம்..

*குறிப்பாக முட்டு்க்காடு பகுதியில் நடக்கும் சண்டையின் கன்டினியூஷன் எப்படி கிண்டி ஃப்ளைஓவர் தாண்டி வேளச்சேரி பில்டிங்கில் முடியும்னோ..தனியே ஒருத்தன் ஏன் மாடியில் ஏறி தவறி விழறான்னோ போலீஸோ ஆடியன்ஸோ கேள்விகேட்க கூடாது..
ஏன்னா நம்ம பேய் கொஞ்சம் நிறைய முட்டாள்..லாஜிக்கலி..

* பேய்கள் பாவப்பட்டவை..ரொம்ப டெஸ்ப்பரேட்டாக சட்டென்று காதல்வயப்பட்டுவிடும்..எனவே பேய்களிடம் சற்று கடுமையாக நடக்குமாறு நாயகன் பாத்திரம் அமைக்க வேண்டும்.

* காதலி/மனைவி பேய்பிடித்து அல்லோலப்பட்டு இருக்கும்போது சோகத்தில் நாயகன் சுண்டகஞ்சி குடித்துவிட்டு குத்துப்பாட்டு ஆடவேண்டும்..அது மரபு.

* என்னை ஏன் இப்படி பண்ற என்று நாயகி கேட்கும்போதும்..நாயகன் வெடித்து அழும்போதும் பேயும் கண்ணீரை துடைத்தபடியே..” நான் ஏன் பேயானேன் தெர்யுமா என்று கதை சொல்ல வேண்டும்.

* முக்கியமாக பேய் படங்களின் பின்னணி இசை..டமார் டுமில் என்று செவுள்லே அறைய வேண்டும்..டிடிஎஸ் இல் கேட்பவனுக்கு வீடுபோற வரை இதயம் படபடவென அடிக்கவேண்டும்.
நரிஊளை நாய் குரைத்தல் கருப்பு பூனை அலறல் மாதிரியான அனிமல்ஸ் அடிஷினல் எஃபெக்ட்ஸ்..

* பேய்படங்களில் முக்கியமான ப்ராப்பர்டி ஒரு வெளுத்த தலை கிழவி..தோல் சுருங்கி காது தொங்கி பாதி ஆல்ரெடி அப்பிட்டான கெட்டப்போட அப்ப அப்ப சைலன்டாக வைலன்ட் சீன்களில் க்ளோஸ்அப் ஷாட்களில் காட்ட வேண்டும்..
உன் பொண்டாட்டி தான் பேய்னு சொல்ல வேண்டும்..
இதை ஹீரோ சொல்ல முடியாது..பொண்டாட்டி பேய் என்றால் பெண்ணியவாதிகள் செவுள்ல அடிப்பார்கள்..சோ இந்த இத்த கிழவிகளை இதற்கு பயன்படுத்திக்கலாம்.

* பேய்படத்தில் பத்து சதவீதம் கூட பயம் வரக்கூடாது..ஏனென்றால் வயசானவர்கள் கர்ப்பிணி பெண்கள் இதய நோயாளிகள் நீரழிவு நோயாளிகள் ஆங் அப்புறம் சிறார்கள் பார்ப்பதால் நிறைய மென்மையாக லவ்லியாக அந்த பேயை ப்ரொஜக்ட் பண்ண வேண்டும்..

* நிறைய ஜிம்மிஜிப் எல்லாம் உபயோகப்படுத்தி டைனிங் டேபிள் மேல பேய் பறப்பது போலவும் சீலிங்கில் நடப்பது போலவும்..பீரோக்கள் மேலயே இரவுவரும்வரை குப்புறப்படுத்து காத்திருப்பது போலவும் காட்டவேண்டும்.

*நிறைய காமெடி செய்கிறோம் என்று சூரமொக்கை போட்டு சாவடிக்க வேண்டும்..இது மற்றவர்களை ஒதுக்கி பேயே தேவல..அதை வர சொல்லுங்க என்பது ரீதியான ஆவலை தூண்டும்..எனவே மொக்கை அவசியம்..

*பிரியாணியில் தேங்காய்சட்டினி ஊற்றி அதில் கொஞ்சம் கேரட் அல்வாவை கலந்து சாப்பிட்டது போல ஒரு பேய் படம் வரவேண்டும்..
ஏனென்றால் இது காமெடி கமர்ஷியல் பேய்