கவிதைகள்

திசையழிந்த சொற்கள்

செளம்யா.என்

நீங்களான வாழ்வின்
மிக மெல்லிய நேசத்தை அணைத்தவாறு கரை திரும்புகிறேன்.
நீங்கள் வீசிய கசையில் விநோத வடிவங்களாக
கூறுபட்டுக்கிடக்கும்
உள்ளுறை புலன்கள் அலை விளையாட்டென அமிழ்ந்து ஆழ்த்துகின்றன.
இலகுவில் கூடி திசையழிந்து போன சொற்கள் யாவும் உங்களது உபயம்.
எனது உதிரந்தோய்ந்த அவை
குற்றுயிரென பாதியில் திரும்பி ஸ்தூல சூட்சுமமாகக் கூடும்.
எனது கவலையெல்லாம்,
நீர் குமிழியென நிறைந்து கணிந்து கிடக்கும் இத்யாதிகள் உடைந்து விடாதிருக்க
பெருங்கடலாய் என் மனதிருக்க வேண்டும்
அவ்வளவே..
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

பதில் அனுப்பவும்

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.  * குறியிட்ட இடங்களில் கேட்கப்படும் விபரங்களை கட்டாயம் அளிக்க வேண்டும்


மேலே
Close