
விடியலுக்கு
மிக அருகில்தான்
ஓர் இரவும் இருந்தது.
*
வெறுமையைத் துழாவித் துழாவி
ஓர் உருவம் சமைத்தேன்
அது அருவமாய் உருவாகி
வெறுமையினும் வெறுமையாய்
என்னை வாட்டுகிறது.
*
நீரைத்
தேக்கித் தேக்கி
சிறு பள்ளம்
குளமாக முயற்சிக்கிறது
குளமோ
பள்ளங்களில் தேங்கி
பந்தாடும் மைதானமாகிறது.
*
பிய்ந்து போன செருப்புகளைத்
தூக்கி எறியாதிரு
தைத்து தைத்தாவது
வாழட்டும்
செருப்பும்
செருப்பு தைப்பவரும்.
*
சரசரவெனப் புரள்கின்றன
சருகுகள்
மலமலவென
வளர்ந்ததைப் போலவே!
*



