சிறுகதை

  • இணைய இதழ் 125

    ‘வித்-இன் த பிரேம்’ – அ.ஜீனா கிறிஸ்டி

    1 அன்று அவனது கல்லூரி நண்பன் வீட்டுப் புதுமனை புகுவிழா. ஒரு கூட்டுக் கிளிகள் பல மரங்களுக்குப் பறந்த பின்னரும்‌ வலையின் துணையால், அவ்வப்போது அலைகளின் அணுக்கத்தால் அருகருகே ஒருங்கமைவதுண்டு. நண்பன் புலனத்தில் ஒரு பட அழைப்பைவிட, அதனை ஏற்றுக்கொண்டு புறப்படத் தயாராயினர் அவனும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    ஆயிரம் டாலர் – ஓ ஹென்றி;

    தமிழில்: கோ.புண்ணியவான் வழக்கறிஞர் தோல்மன் தீவிரமாகவும் கம்பீரத் தொனியுடனும் சொன்னார், “ஆயிரம் டாலர், இந்தா பணத்தைப் பெற்றுக்கொள்.” பணம் கைக்கு வந்த மகிழ்ச்சியில் மலர்ந்த புன்னகையுடனும், பதற்றத்துடனும் தன் விரல்களால் அந்த ஐம்பது டாலர் கட்டுப் பணத்தைப் பெற்றுக்கொண்டபோது யாங் கில்லியனின் விழிகள் ஒளிகொண்டன. “எப்படிச் சமாளிப்பது என்று குழம்பும் அளவுக்குப் பெரிய தொகைதான் இது!”…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    ஷலோஷ் அரிமில் எய்த அம்பு – நிர்மல்

    இருக்கிறேன். இருக்கிறேன் என்று தெரிகிறது. நான். நான் என்று தெரிந்த நொடியில் நகர வேண்டும் என்று தோன்றுகிறது. முடியவில்லை. என்னைத் தடுத்தது எது? அது என்னைத் தவிர வேறொன்றோ? என்னால் அதைக் கடக்க முடியவில்லை. நான் அல்லாத அது என்ன? பயம். …

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    தீபாவளி பரிசு – கலித்தேவன்

    ஆடி மாதச் சூரியன் தன் திறன்களை இழந்து, வெளிர் மஞ்சளாக, கடும் மஞ்சளாக மாறி, சிவப்பேறி சிறுத்துத் தேய்ந்து மறையும் நேரம். கடைகளில் மின் விளக்குகள் ஏற்றும் தருணம். திடீரென மாயவனின் கைகளில் கிடைத்த அடர்த்தியான வண்ணங்களின் தீற்றலில் தெற்கு வீதியின் நிறங்கள் மாறி…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    அந்தப் பத்து நிமிடங்கள் – காந்தி முருகன்

    இந்த உடல்‌ அருவருக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. உயிர் தன்னை நிலைநாட்டிக் கொள்ள இந்த உடலின் இருப்பு அவசியமாகிறது. என்ன வடிவமான உடலிது? தசைகள் என்ன கலவையில் ஆனதோ? உடலை உருவாக்கியவன் ஏன் அதில் உணர்வை வைத்தான்? உடலுக்கான தேவை நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இந்தத் தேவையைத் தீர்க்கப் பல கட்டுப்பாடுகள், பல கட்டமைப்புகள் உடனிருந்து ஆட்டிப் படைக்கின்றன. இருநாள்கள் ஓய்வின்றி உழைத்தாகிவிட்டது. இந்த உடலுக்குக் கொஞ்சம் ஓய்வு தேவைப்படுகிறது. சதைகள் இறுக்கிக்கொண்டிருக்கின்றன. அவை தளர்ந்திட வேண்டும். எலும்புகள் உடைபடுவதைப் போல ஒலியை எழுப்பிக்கொண்டிருக்கின்றன. அவை எதிர்பார்க்கும் தனிமையை உண்டாக்கவில்லையெனில் என்னை நிரந்தரமாகப் பணி செய்திட விடாது. வயிற்றில் புகுந்துகொண்டு அங்குமிங்குமாக நடமாடி என் சிந்தனையைச் சீரழிக்கிறது காற்று. ஒரு ரொட்டித் துண்டையாவது வயிற்றில் இறக்கிக்கொண்டால் குறைந்தபட்சம் ஒன்று இரண்டு மணி நேரத்திற்காவது தாக்குப்பிடித்துக்கொள்வேன். உணவு வாங்கச் சென்றவனை ஆளையே  காணவில்லை. இப்படியாக அந்த அறையைவிட்டு வெளியேற முடியாமல் மூன்று மணி நேரமாக மனதளவில்  புலம்பிக்கொண்டிருந்த மைதிலி அறைக் கதவு தட்டும் ஓசைக் கேட்டு வயிற்றுக்கு ஓர் அன்பான அரவணைப்பைக் கொடுத்துவிட்டு ஓடோடிச் சென்று கதவைத் திறந்தாள். கையில்  இரு பீர்  போட்டல்களுடன்  அருகில் நின்றவனைக் கண் ஜாடைக் காட்டி புன்னகைத்து  நின்றான் தரகர்.

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    ஆசான் – உதயா சக்கரவர்த்தி

    “ரவி மாஸ்டருக்குப் பத்திரிக்கை வச்சுட்டு போயிடலாமா?” கார் வெண்ணமலை அருகே வந்தபோது அப்பா கேட்டார். கார் ஓட்டிக்கொண்டிருந்த தயா, “இப்போ எங்க யூனிட் வச்சிருக்காருன்னு தெரியுமா?” “VVG நகர் பின்னாடிதான் வச்சிருக்காரு. போன தடவ வந்தப்போ பாத்தேன். பத்திரிக்கையோட வரேன்னு சொல்லிட்டு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    தலைமுறை மாற்றங்கள் – உஷாதீபன்

    எந்தக் காரியத்தையும் சுறுசுறுப்பாகவும் திருத்தமாகவும் செய்யத் தெரியாத ஒரு ஜீவன் வாய் கிழியப் பேசுவதுதான் எரிச்சலை ஏற்படுத்தியது லோகநாதனுக்கு. எதையும் எடுத்துச் செய்யும் திறனில்லாத பெண்ணுக்கு என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது என்று நினைக்கத் தலைப்பட்டார். எந்த வீட்டு வேலைக்கும் பழக்காம, காரியார்த்தமாக…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    இது கூடத் தெரியாதா? – கமலா முரளி

    இருப்பே கொள்ளவில்லை வேங்கட ராஜூவுக்கு! தன் அறைக்கும் வாசல் புறத்துக்கும் நடையாய் நடந்துகொண்டிருந்தார். இந்தக் கால ஆண்களின் அடையாள உடையான அரைக்கால் ட்ரவுசர்; அந்தக்கால நடுத்தர வயதுக்காரர்களின் கை இல்லாத முண்டா பனியன்; ஆங்காங்கே நடனமாடும் தொங்கும் தோட்டங்களாக உடற்பயிற்சி மறந்த தேகத்தின் கூறுகளோடு அவர், பரபரப்புடனும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    12A வைத் தேடி வரும் அனுஷா – கே.ரவிஷங்கர்

    மதுரவாயல் பைபாசிலிருந்து கடைசியில் மல்லிகை நகர் உள்ளே செல்லும் கரடுமுரடான சாலை. நகரின் முடிவில் வறண்டு போன கிணறுகளும் வயல்களும் சில வருடங்களுக்கு முன் கைவிடப்பட்ட பெரிய சுடுகாடும் கொண்டது. நடுவில் நெருப்பில் கருகிய சுடுகாட்டு மேடையும் அதில் மக்கிப் போன சாம்பல் குப்பல்களும் எலும்புத் துண்டுகளும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    ஒளி பொருந்தியவன் – மழைக்குருவி

    வானத்தில் சூரியன் உக்கிரமாய் இருப்பதுபோல் தெரியவில்லை, கொக்கரிப்பது போல இருந்தது. இன்னும் சற்றைக்கெல்லாம் வானம் தீப்பிடித்து எறிந்துவிடும் என்கிற அளவுக்கு வெப்பம் வியாபித்திருந்தது. ஆனால் அந்த வெப்பம் துளியும் தெரியாத அளவிற்குச் சாலையோரத்துப் புங்கை மரம் ஒன்றில் கீழ் இருபது நபர்களுக்கு…

    மேலும் வாசிக்க
Back to top button