கட்டுரை

  • இணைய இதழ் 126

    போர், அமைதி & சந்தை நூல் அறிமுகம் – ஹரிகிருஷ்ணன் வானமாமலை

    கார்ப்பரேட் குருஷேத்திரத்தின் ஒரு கூர்மையான பார்வை    2025 கோவை புத்தகத் திருவிழாவில் யாவரும் பப்ளிஷர்ஸ் ஜீவ கரிகாலனிடம், “ஏதாவது துறை சார்ந்த புத்தகங்கள் இருந்தா சொல்லுங்க, அதை வாசிக்கணும்” என்று கூறினேன். அப்பொழுது அவர் பரிந்துரைத்த புத்தகம்தான், ‘போர் அமைதி & சந்தை’. எப்பொழுதும் கிராமியக் கதைகள், ஒரு குடும்பத்தை பற்றிய கதை, ஒரு தனி மனிதனின் வாழ்க்கைப் பயணம் அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கதை என்று படித்துச் சலித்த எனக்குப் பெருநிறுவனத்தைப் பற்றிய கதை என்றதும் ஓர் ஆர்வம் வந்தது. அப்படித்தான் இந்தப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன்.  மணி ராமலிங்கம் எழுதிய, ‘போர் அமைதி & சந்தை’ என்ற நாவல், 90களில் இந்தியப் பொருளாதாரத் தாராளமயமாக்கல் மற்றும் கணினிப் புரட்சியின் பின்னணியில் மும்பை மாநகரத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஓர் அழுத்தமான படைப்பாகும். இந்நூல் வெறும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் வீழ்ச்சியையும் எழுச்சியையும் மட்டும் பேசாமல், அந்தச் சந்தை அமைப்பிற்குள் சிக்கித் தவிக்கும் மனிதர்களின் அகப் போராட்டங்களையும், வடுக்களையும், உளவியல் ரீதியான மாற்றங்களையும் மிக நுட்பமாக விவரிக்கிறது. 1960களில் தொழிற்சங்கப் போராட்டங்களால் ஏற்பட்ட ‘லாக் அவுட்’ சூழலையும், 90களில் மூளையை மூலதனமாகக் கொண்டு உருவான புதிய தொழில் சந்தையின் ‘லாக் அவுட்’ சூழலையும் ஒப்பிட்டு, ‘இடம்தான் வேறே ஒழிய அதே குருஷேத்திரம்தான்’ என்ற தத்துவார்த்தப் புரிதலுடன் நாவலை ஆசிரியர் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.   நாவலின் மிக முக்கியமான பலம் அதன் பின்னணியாக விளங்கும் பம்பாய் (மும்பை) மாநகரமாகும். விக்டோரியா டெர்மினஸ் (வீ டி) ரயில் நிலையம், உதிரும் காய்கறிகள் போலப் பிளாட்பாரத்தில் இறங்கும் மனிதர்கள், மீன் வாசம், மனித வியர்வை மற்றும் பொதுக் கழிப்பறையின் நெடி என பம்பாயின் அசல் முகத்தை ஆசிரியர் வாசகர்களின் நாசிக்குக் கடத்துகிறார். குறிப்பாக, டி.என். ரோடு (DN Road) பிளாட்பாரக் கடைகள், அங்கு விற்கப்படும் செண்டுகள், புத்தகங்கள் மற்றும் உலகத்தின் அத்தனை உணவுகளும் கிடைக்கும் தெருவோர உணவகங்கள் என அந்த மாநகரத்தின் பரபரப்பான நுகர்வோர் கலாச்சாரம் மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதால் நாவலின் ஆரம்பம் முதல் முடிவு வரை பம்பாயின் கூட்ட நெரிசலில் மூச்சு விட முடியாமல் சிக்கிக் கொண்டுள்ள ஓர் உணர்வை வாசிப்பவருக்கு எழுத்தாளர் மிகச் சுலபமாகக் கடத்துகிறார்.  இந்தத் துடிப்பான நகரத்தில் இயங்கி வரும் அனந்தராமனின் மென்பொருள் மற்றும் விளம்பர விற்பனைத் துறை அலுவலகம்தான் கதையின் மையம். ஒரு சிறு விடுப்பு முடிந்து தமிழகத்தில் இருந்து திரும்பும் ரமணி என்ற இளைஞன், திங்கட்கிழமை காலையில் அலுவலக வாசலில் தொங்கும் பூட்டையும், கம்பெனி ‘லாக் அவுட்’ செய்யப்பட்ட அதிர்ச்சிச் செய்தியையும் எதிர்கொள்வதில் இருந்து நாவலின் முதன்மைக் கதை நகர்கிறது. ஆசிரியர் இந்த நாவலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிக ஆழமான உளவியல் பின்னணியுடன் வடிவமைத்துள்ளார். ரமணி வேக வேகமாகப் பேசும், மெல்லிய நறுமணங்களை விரும்பும் ஒரு நடுத்தர வர்க்க இளைஞன். அவனது நண்பன் சுந்தர், எதையும் நிதானமாகப் பேசும், முகபாவனைகளைக் காட்டாத ஒரு சாதுரியமான விற்பனையாளன். கம்பெனி மூடப்பட்டவுடன் ரமணி எதிர்கொள்ளும் பசியும், வேலை இழப்பு குறித்த பயமும், அவனுக்குள் ஏற்படும் இரத்த அழுத்த நோயின் தொடக்கமும் ஒரு சராசரி நடுத்தர வர்க்க இளைஞனின் பாதுகாப்பின்மையை அப்படியே பிரதிபலிக்கிறது.    ஐஐஎம் (IIM) பட்டதாரியான அனந்தராமன், வெறும் எண்களை மட்டும் நிறுவனமாகக் கருதாமல், மனிதர்களின் கனவுகளுக்கு மதிப்புக் கொடுக்கும் ஒரு லட்சியவாதத் தொழில்முனைவோர். தனது மென்பொருள் நிறுவனத்தை உருவாக்க அவர் மேற்கொண்ட போராட்டங்களும், அவரது வழிகாட்டியான ஜம்னலால் கூறிய ‘வியாபாரம் என்பது மாபெரும் மனப்போர்’ என்ற தத்துவமும் அவரது கதாபாத்திரத்திற்குப் பெருமை சேர்க்கின்றன. ஜம்னலாலும் அனந்தராமனும் பேசிக் கொள்ளும் இடம் வாசிக்கும் நமக்கு மிகப்பெரிய உந்துதலைக் கொடுக்கும். விஷ்ணு சேனா அரசியல்வாதி ரானேவின் துப்பாக்கி மிரட்டலுக்குப் பணிய மறுத்து, நிறுவனத்தையே தற்காலிகமாக மூடத் துணியும் துணிச்சல் மிக்கவராக அவர் காட்டப்படுகிறார்.   விளம்பரத் துறையின் தலைவியான ரூபி, அடங்காப் பெண்மையும் ஆளுமையும் நிறைந்த ஒரு நவீனக் கதாபாத்திரம். தன்னுடைய தேவைகளையும் வாழ்க்கையையும் தானே தீர்மானிக்கும் அவளது போக்கு, கார்ப்பரேட் உலகில் அவள் தன் இடத்தை எவ்வாறு தக்க வைத்துக் கொள்கிறாள் என்பதைக் காட்டுகிறது. அனந்தராமனுடனான அவளது நெருக்கமான உறவும், நிறுவனத்தின் ரகசியச் செயல்பாடுகளும் கதையின் சுவாரசியத்தைக் கூட்டுகின்றன.   மென்பொருள் பிரிவின் தலைவனான கார்த்திக்கும், அவனுடன் பணிபுரியும் சித்ராவும் நாவலின் மற்றொரு முக்கியப் பரிமாணம். கார்த்திக்கின் அர்ப்பணிப்பும், நிறுவனத்தின் மீதான அவனது ராஜவிசுவாசமும் லாக் அவுட் காலத்திலும் ரகசியமாக ஹோட்டல் அறைகளில் இருந்து நிறுவனத்தை இயக்க உதவுகிறது. சித்ரா அவனோடு நெருக்கமாக இருந்தாலும், ‘லாக் அவுட் முடிவதற்குள் எனக்கு அமெரிக்கப் பையனுடன் கல்யாணம் ஆகிவிடும்’ என்று எதார்த்தத்தைப் பேசும் தற்காலப் பெண்ணாக விளங்குகிறாள்.     கணக்காளரான சுப்பிரமணியன் என்கிற சுப்பு சார், தீபா பாரில் அமர்ந்து கொண்டு சமூக நீதியைப் பற்றியும், தனது கடந்த கால ஜாதி வடுக்களைப் பற்றியும், கார்ப்பரேட் அரசியலைப் பற்றியும், வேலை இழப்பு பயம் பற்றியும் பேசும் ஒரு விரக்தியடைந்த கதாபாத்திரம். அவருடைய புலம்பல்கள் மூலமாக நடுத்தர வயது மனிதர்களின் வேலைவாய்ப்புப் பயமும், எதிர்காலக் கவலையும் வெளிப்படுகின்றன.     நாவல் பேசும் முக்கியக் கருப்பொருள்களில் ஒன்று சந்தையும் அதிகார அரசியல் மிரட்டல்களும். நாவல் 90களின் பம்பாயில் நிலவிய பிராந்தியவாத அரசியலையும், அதன் மூலமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் எதிர்கொண்ட அச்சுறுத்தல்களையும் அப்பட்டமாகப் பேசுகிறது. விஷ்ணு சேனாவின் தலைவரான ரானே, அனந்தராமனின் கேபினுக்குள் புகுந்து, துப்பாக்கியால் சுட்டு, மராட்டியர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்றும், கருப்புப் பணப் பங்கைக் கேட்கும் காட்சியும் அன்றைய மும்பையின் நிழல் உலக அரசியலைக் காட்டுகிறது. இரண்டாவது கார்ப்பரேட் நிறுவனங்களின் உயிர்வாழும் தந்திரங்கள். கம்பெனி கதவடைப்புச் செய்யப்பட்டாலும், வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் இருக்க, ஹோட்டல் அறைகளைத் தற்காலிக அலுவலகங்களாக மாற்றி (அறை எண் 108), ரகசியமாகச் சேவைகளைத் தொடர்வது, பத்திரிக்கைத் துறையைத் தற்காலிகமாகக் குஜராத்திற்கு மாற்றுவது போன்ற கார்ப்பரேட் தந்திரங்களை ஆசிரியர் மிகத் துல்லியமாக விவரித்துள்ளார்.   மூன்றாவதாக, கதாபாத்திரங்களின் அக அமைதியும் புறப் போரும். நாவலின் தலைப்பிற்கு ஏற்ப, ஜம்னலால் அனந்தராமனுக்குக் கூறும் அறிவுரை மிக முக்கியமானது: “வெளியே போரிட உள்ளே நீ மிகப்பெரிய அமைதியாயிருக்க வேண்டும். உள்ளே புத்தனாகவும், வெளியே அலெக்சாண்டராகவும் இருக்க வேண்டும்”. இந்தத் தத்துவமே நாவலின் அடித்தளமாக விளங்குகிறது. ரமணி தன் பயத்தைப் போக்க அவனது ரவி அண்ணாவை நாடுவதும் இந்த அமைதிக்கான தேடலின் ஒரு பகுதிதான்.    அலுவலகத்தில் ரூபி தனது அதிகாரத்தை நிலை நாட்ட கார்த்திக்கை நடத்தும் விதமும் பதிலுக்கு கார்த்திக் செய்யும் மறைமுக வேலைகளும் இதனால் பாதிக்கப்படும் ரூபி கார்த்திகையும் அவனது குழுவில் இருக்கும் அனைவரையும் அவள் பழி வாங்கும் விதமும் ஆபீஸ் பாலிடிக்ஸ் என்றால் எப்படி இருக்கும் என்பதை நமக்குக் காட்டுகிறது. எப்படி அனந்த ராமனுக்கு ஒரு ஜமன்லால் கிடைத்தாரோ அதுபோல் கார்த்திக்கு ஒரு மோதிலால் இருக்கிறார். அனந்தராமனும் கார்த்திக்கும் வேறு வேறு இல்லை. இருவரும் வாழ்க்கை என்னும் கடல் கொண்டு செல்லும் இடத்திற்குப் போகாமல் தாங்கள் விரும்பும் இடத்திற்கு எதிர்நீச்சல் போட்டுச் செல்லும் மன பலம் கொண்டவர்கள்.   மணி ராமலிங்கத்தின் எழுத்து நடை மிக எதார்த்தமானது. பம்பாயின் தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் கலந்த பேச்சு வழக்கு (எ.கா: ‘மங்கிலம்’, ‘தந்தி’) நாவலுக்கு ஒரு தனித்துவமான வாழ்வியல் தன்மையைத் தருகிறது. கார்ப்பரேட் வார்த்தைகளான ‘ரிட்டர்ன் ஆன் இன்வெஸ்ட்மெண்ட்’…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 126

    ஜனநாயகன் பிம்பச்சிறை 2.0 – ர. முகமது இல்யாஸ் ; நூல் அறிமுகம்: பீட்டர் துரைராஜ்

    நடிகர் விஜய், அரசியல்வாதியாகி இருக்கிறார். தமிழ்நாட்டில்  எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற திரைநட்சத்திரங்கள் முதலமைச்சர்களாக அதிகாரத்திற்கு வந்துள்ளனர். விஜயும் முதலமைச்சர் ஆசையில்  இருக்கிறார். கரூரில், கடந்த செப்டம்பரில் ஏழு குழந்தைகள் உட்பட 41  பேர், அவரைக் காண வந்த நெரிசலில் மரித்துப் போனார்கள். விஜயைச் சுற்றி எத்தகைய பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது, அதன் அரசியல் என்ன என்று இந்த நூலில் விவாதிக்கிறார் திரை ஆய்வாளரான ர. முகமது இல்யாஸ்.  விகடனில் பத்திரிகையாளராக இருந்த ர.முகமது இல்யாஸ் ஓர் ஆய்வு மாணவர். பெயரை மாற்றி கட்டுரை எழுத மறுத்து குரல் எழுப்பியவர். அவர் எழுதிய ‘ஜனநாயகன் பிம்பச்சிறை 2.0’ என்ற  நூல் புத்தகக் கண்காட்சியின் போது வெளிவந்துள்ளது. உடனே வாசித்தும் விட்டேன். சுவாரசியமாக உள்ளது. உணர்ச்சி கடந்து, அறிவுத்தளத்தில்  விவாதிக்க வேண்டிய பல புள்ளிகளை இந்த நூல் காட்டுகிறது.  மறைந்த ஆய்வாளரான எம்.எஸ்.எஸ்.பாண்டியன், ‘ பிம்பச்சிறை எம்.ஜி.ஆர். திரையிலும், அரசியலிலும்’ என்ற நூலை எழுதியிருக்கிறார். அதன் தாக்கத்தில், இந்த நூலுக்கான  பெயர் வைக்கப்பட்டுள்ளது. திரை நட்சத்திரங்களோடு, தொடர்புள்ள பல சம்பவங்களுக்குத் தத்துவ விளக்கம் கொடுக்கிறார் இல்யாஸ். நமக்கு வரும் செய்திகளை ஒரு குடிமகனாக எப்படிப் பார்க்க வேண்டும் என்று குறிப்புகளைத் தருகிறார். புகழ்பெற்ற ஒருவரின் நடவடிக்கைகளில் மறைபொருளாக இருக்கும் செய்திகளை நமது கவனத்திற்குக் கொண்டுவருகிறார். விஜய் நடித்த படங்கள், ரஜினி, அமிதாப், ஜெயலலிதா, விஜயகாந்த் போன்ற நட்சத்திரங்கள் ஊடாக தன்னுடைய வாதங்களை நம் முன்  வைக்கிறார்.  இந்த நூல் விஜயை நடிகராகவும் அரசியல்வாதியாகவும் ஊடகப் பிரதியாகவும் அணுகுகிறது.  ‘எம்ஜி.ஆரின் ஆட்சிக்காலம் ஓர் இருண்டகாலம்’ என்பதை நினைவுபடுத்தும் இந்த நூல், விஜயிடமும் இத்தகைய கூறுகள் உள்ளன என்று  சொல்லுகிறது. ‘விஜயிடம் எந்த விவகாரம் குறித்தும் தெளிவாக வெளிப்படாத நிலைப்பாடுகளின் வழியாக, தொண்டர்கள் அவர்மீதான கற்பனையைத் தங்கள் உணர்ச்சியின் வழியாக தாங்களே கட்டமைத்துக்கொள்கின்றனர்’, என்கிறார். ‘குடிமக்களின் இறையாண்மை மக்களின் கனவாகவே இருந்துவிட்ட நிலையில், மொழி, அடையாளம், அதிகாரம் முதலானவற்றின் ஊடாக தென்னிந்தியாவில் நடிகர்கள் அரசியலுக்கு வருவதும், அதில் வெற்றிபெறுவதும் இயல்பானது’ என்று திரை ஆய்வாளர் மாதவ பிரசாத் சொல்வதைச் சுட்டிக்காட்டுகிறார்.  நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த விஜயை, சென்னை வரவழைத்து 24 மணிநேரம் வருமானவரித்துறை விசாரணை நடத்தியபிறகு, அவர் வெளியிட்ட செல்ஃபி அந்த ஆண்டில் ட்விட்டரில் அதிகமாகப் பகிரப்பட்ட படமாகும். எனவே விஜயைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.  ஊழலை எதிர்ப்பதைத் தவிர அரசியல் நிலைப்பாடுகள் என்று ஒன்றில்லை என்பதை ரஜினியின் திரைப்படங்கள் முன்வைத்தன. வெகுமக்களிடம் ரஜினியின் இந்து தேசிய ஆதரவு செல்லுபடியாகவில்லை. திராவிட அரசியலை ‘அம்மா’ என்ற உருவகத்தால் நீர்த்துப்போகச் செய்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னரும் அவரைப்பற்றி வெகுமக்களிடம் உருவாகியுள்ள ‘அனுதாபமான’  பிம்பத்தை விமர்சனம் செய்யாமல் திமுக இருக்கிறது என்கிறார் இல்யாஸ்.  எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ரஜினி போன்றோர் பயணித்தவாறே விஜயின் பயணமும் உள்ளது என்கிறார் ஆசிரியர். விஜயின் பிம்பம் கட்டமைக்கப்பட்ட ஒன்று. ‘பாதுகாவலன், சகோதரன், தலைவன்’  முதலான பிம்பங்கள் ஒரே நாளில் உருவானவை அல்ல. இந்திப்படங்களில் கோபக்கார இளைஞனாக ‘விஜய்’  என்ற பாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்திருந்தார். இந்தப் பெயரையே,  அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் அவருக்குச்  சூட்டியிருக்கக்கூடும். நடிகர் விஜயகாந்தின் படங்களில் அவரது தம்பியாக, சிறுவயது விஜயகாந்தாக நடித்தார். ஊடகங்கள் செய்தியைத் தருவதைத் தாண்டி, அவற்றை உருவாக்கவும் செய்கின்றன.டேனியல் டயான் சொல்லும் News Event  என்பதை, கரூர் சம்பவங்களைக் கொண்டு விவரிக்கிறார். 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு விஜய் பொதுவெளியில் தலைகாட்டுவதைக் குறைத்துக்கொண்டார். டிஜிட்டல்  வெளியில் இருந்து விலக்கிக் கொண்டார். அவரைப் பார்க்க வேண்டும் என்றால்  அவருடைய திரைப்படங்களைப் பார்க்க வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டது. இல்யாஸ் விஜயை, அனுதாபத்தோடு பார்க்கிறார். ‘தமிழ்ச் சமூகத்தின் கடந்த காலப் பெருமிதம், சமகால நெருக்கடி, எதிர்காலக் கனவு, பதற்றம் முதலானவற்றை வெளிப்படுத்தும் தொன்மமாக விஜய் இயங்குகிறார்’ என்கிறார் ஆசிரியர். ‘வெகுமக்களின் அன்றாடப் பிரச்சனைகளைப் பொறுப்போடு உரையாடத் தொடங்க வேண்டும். தானம் செய்வது அரசியல் செயல்பாடு அல்ல என்பதைத் தொண்டர்களுக்கு உணர்த்த வேண்டும்’ என்கிறார். இந்த நூலை ‘சீர்மைப் பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. 180 பக்கம். விலை ரூ. 240. ஆழமான அணிந்துரையும் உள்ளது. (சமீபத்திய திருப்பரங்குன்றம்  விஷயத்தில்கூட அவர் கருத்து சொல்லவில்லை). உதயநிதி ஸ்டாலினும் விஜயும் ‘பெரியாரின் பேரனாக’ பேசப்படுவது கண்டு மகிழ்கிறார் ஆசிரியர். இருவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என்கிறார். இளைஞர்களையும் குடும்ப ரசிகர்களையும் ஒருங்கிணைத்த விஜயின் படங்கள், கில்லி, திருப்பாச்சி, சிவகாசி, மதுர போன்ற படங்களின் மூலம் கிராமங்களையும் நகரங்களையும்  ஒருசேர ஈர்க்கும் கதைக்களங்களைக் கொண்டவை. நவதாராளவாத உலகத்தின் இளைஞனாக வலம் வரும் விஜய் காதல், பெண்கள், கற்பு என்ற முதலான பழமைவாத சிந்தனைகள் மூலமாக முரண்பட்ட நாயகனாகவும் உள்ளார். அவருடைய திரைப்படங்கள் அவரை கலகக்காரனாகவோ, சமூகப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வையோ முன்வைக்கவில்லை.  இந்த நிலையில் திராவிட அரசியலும் இந்த நூலில் விமர்சிக்கப்படுகிறது. உதயநிதி, ஆ.ராசா, பொன்முடி ஆகியோர்மீது திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல்களை எதிர்கொள்ளும் செயற்திட்டம் இன்றைய திமுகவில் இல்லை. இசுலாமியச் சமூகத்தினருக்கும் அந்தக் கட்சிக்கும் இடையிலான பாலமாக திமுகவில் இன்று யாரும் இல்லை. இசுலாமிய வெறுப்பை வைத்து அரசியல் செய்யும் இந்தச் சூழலில் தவெகவிற்கும் திமுகவிற்கும் இடையில் உள்ள முரண்களை நட்பு முரண்களாகக் கருத வேண்டும் என்கிறார்.  வெகுமக்களின் வேலை  வாக்கு அளிப்பதோடு முடிவடைந்து விடுவதில்லை. சாதி ஒழிப்புக்கும் பதிலாகச் சாதி மேலாண்மை, நாயக வழிபாடு போன்றவை குறித்து விழிப்பாக இருக்க வேண்டும் என்கிறார். ர.முகமது இல்யாஸ், ‘இந்துத் தேசியம் இந்தியச் சினிமா’ என்ற காத்திரமான நூலை எழுதியவர். Read between lines என்ற இணையத்தையும் நடத்தி வருகிறார். நூலின் முதல் பக்கத்தில் மேற்கோளாக உள்ள, அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் பேசிய வசனத்தோடு,  இதனை முடிக்கத் தோன்றுகிறது. “அரசியலில் நாயக வழிபாடும் பக்தியும் நிச்சயமாகச் சீரழிவுக்கான பாதையாகவும், தொடர்ந்து சர்வாதிகாரத்திற்கான பாதையாகவும் இருக்கின்றன” பிகு: விஜயின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கிய தஞ்சாவூர் விக்னேஷ், உயிருக்குப் போராடி மரணமடைந்த நாளன்று எழுதியது. 

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 126

    லோக் நாயக்’ ஜெயபிரகாஷ் நாராயண் – ஆர் பட்டாபிராமன்; நூலறிமுகம்: அக்களூர் இரவி

    ஜெயபிரகாஷ் நாராயண் குறித்த  முழுமையான வாழ்க்கை வரலாற்று நூல் தமிழில் ஒன்றிரண்டுதான். இல்லை எனவும் கூறலாம். தமிழறிஞர், காந்தியவாதி தமிழருவி மணியன் ‘மனிதப் புனிதர் ஜெயபிரகாஷ் நாராயண்’ என்றொரு குறுநூலை ஆக்கியுள்ளார்.  பெரும் வாசிப்பாளரும், இந்தியச் சிந்தனை மரபு குறித்தும், மார்க்ஸ், காந்தி,…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    ஹொய்சாளக் கலைப்பயணம்; 1 – செந்தில் ஆர் அமுதன்

    அறிமுகம்  வாழ்வின் ஆகப்பெரிய மற்றும் சிறந்த திருப்புமுனை என்பது எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் உலகத்தில் நுழைந்தது. தற்செயலாக நிகழ்ந்ததுதான் எனினும் அது இறைவன் என்னைத் தக்க தருணத்தில் ஆற்றுப்படுத்தி அருளியது என்றே நினைக்கிறேன். தமிழகத்தின் பொதுப் போற்றுதலுக்குரிய சட்டகமான, “பள்ளிக்கல்வி, கல்லூரி,…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    நான்-ஒரு போஹேமியன் பயணி; 12 – காயத்ரி சுவாமிநாதன்

    மகாபோதியின் ஆலயத்தை நோக்கி நான் எடுத்த அந்த முதல் நடைபாதை, என் வாழ்க்கையின் வழக்கமான ஒரு பயணமாகத் தோன்றவில்லை. அது ஒரு அழைப்பாக இருந்தது. எங்கேயோ தொலைவில் இருந்து, ஆனால் என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுந்த ஒரு மௌன அழைப்பு. அந்த…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    கே.பாலமுருகனின் தலேஜூ : மொழியின் களியாட்டம் – தமிழ் ஐயப்பன், சிங்கப்பூர்

    முதல் காதலைத் தொலைத்துவிட்டுத் தேடுபவர்களுக்குச் சமர்ப்பணம் என நாவல் தொடங்குகிறது. மிக எளிதான கட்டமைப்பு கொண்ட அழகியல் நாவல் என்பதை முதல் அத்தியாயம் தகர்த்து எறிகிறது. எழுத்தை இவ்வளவு வளைக்க முடியுமா என ஒவ்வொரு அத்தியாயமும் மூச்சடைக்க வைக்கின்றது. இந்த நாவலை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    புத்தகக் குவியலில் புயலின் தாக்கம் – இளையவன் சிவா

    இலக்கியத்தின் மேன்மை என்பது வாசிப்போரை மட்டுமல்லாது பிறரையும் வாசிக்கத் தூண்டும் எழுத்துக்களில் வாழ்வதாகும். ஆயிரக்கணக்கான பக்கங்களில் எழுதப்பட்ட எத்தனையோ வரலாறுகளை அவை வெளிப்படுத்தும் மனித உணர்வுகளை முழுமையாக உள்வாங்கி இரத்தினச் சுருக்கமாக நூல்களின் வாசிப்பை அவை தரும் கருத்தாழமிக்க செயல்பாடுகளை நவில்தொறும் நூல் நயம் நூலின் வழியே நமக்குக் கடத்துகிறார் ஆசிரியர். இலக்கியக் கடலுக்குள் தன்னை முழுமையாக மூழ்கடித்துக் கொண்டு அதிலிருந்து சிறந்த முத்துக்களை நமக்காக எடுத்துத் தரும் பாங்கு ஆசிரியரின் தொடர் வாசிப்பை எடுத்துக்காட்டுகிறது. இந்த நூலின் வழியே 15 நாவல்களையும் இரண்டு சிறுகதைகளையும் ஒரு மனிதனின் வாழ்வையும் நமக்கு அறிமுகம் செய்கிறார் .வெறுமனே புத்தக அறிமுகத்தோடு நின்றுவிடாமல் புத்தகம் எழுதப்பட்ட காலச் சூழலையும் அந்த ஆசிரியர்களின் வாழ்வுச் செயல்பாடுகளையும் கட்டுரைகளுக்குள் புகுத்தி நூல் எழுதப்பட்டதன் அவசியத்தை நமக்கு உணர்த்துவதில் ஆசிரியரின் மெனக்கெடல் அபாரமானது. உலக நாடுகளின் வரலாறு என்பதை வாசிக்கும் ஒவ்வொருவரும் அதைக் கூறுபவரின் பக்கம் இருந்தும் உணர்ந்து கொள்ள முடியும். தாம் கண்டறிந்த செய்திகளைக் கொண்டும் அறிந்து கொள்ள முடியும். நூல் வடிவிலான வரலாறுகள் பேசும் இலக்கியத்தைவிட வாய்வழியாகப் பேசப்படும் இலக்கியங்களைக் கண்டறிந்து அவற்றை ஆவணப்படுத்தும் செயல்பாடுகளையும் இந்த நூலில் படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர் பிறமொழி நூல்களை மொழிபெயர்த்து தமிழுக்குக் கொணர வேண்டியதன் அவசியத்தை பாரதி தொடங்கி எத்தனையோ எழுத்தாளர்கள் வலியுறுத்தி வரும் சூழலில் இந்த நூல் மிக அருமையாக அதைச் செய்து காண்பித்திருக்கிறது.  அறிமுகம் செய்யப்பட்ட பல நூல்கள் இன்னும் தமிழில் மொழிபெயர்க்கப்படவே இல்லை அந்த வகையில் இவற்றைத் தமிழில் கொண்டு வர வேண்டும் என்கின்ற உந்துதலையும் இந்த நூல் நமக்குள் ஏற்படுத்துகிறது நூலில் இடம்பெறும் பெரும்பாலான நூல்கள் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் கொடூரத்தையும் அதன் விளைவுகளையும் மனிதத் தன்மையும் கருணையும் இரக்கமும் தொலைந்து போய் மக்கள் விலங்குகளாக மாறிநின்ற அவலத்தையும் விளக்குபவையாக அமைகின்றன சமூகத்தின் மீது பேரன்பும் அக்கறையும் வைத்திருக்கும் ஒவ்வொரு உள்ளத்திற்குள்ளும் யான் பெற்ற இன்பத்தை எல்லோரும் பெற வேண்டும் என்ற ஒற்றைக் கனவே ஒலித்துக் கொண்டிருக்கும். அப்படி. தான் தேடித் தேடி வாசித்த நூல்களையும் அதில் கொட்டிக் கிடக்கும் உண்மைகளையும் சுருக்கமாகச் சொல்லி நூலின் வழியே பல எழுத்தாளர்களின் அனுபவங்களை நமக்கு எளிமையாக கற்றுத் தருகிறார் ஆசிரியர் இந்தியப் பிரிவினை வட மாநில மக்களுக்கு எவ்வளவு துன்பகரமான வாழ்வியலை அறிமுகம் செய்தது என்பதை நூலில் உள்ள பல கதைகள் வெளிப்படுத்துகின்றன. பாகிஸ்தான் செல்லும் ரயில் நள்ளிரவில் சுதந்திரம் அதன் வழியே இந்திய முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்ட கலவரச் சூழல் என ஒவ்வொரு கதையும் அன்றைய காலகட்டத்தை நம் முன்னே காட்சியாக விவரிக்கின்றன.. இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் கனடாவுக்கு மேற்கொண்ட சோகமான பயணத்தின் வரலாறு சொல்லும்  கோல்கட்டா மாரு எனும் நாவல் பிஷம் சஹனியின் இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக் காலக் கொடூரங்களையும் மதவெறியையும் சித்தரிக்கும் வரலாற்று நாவலான தமஸ் எனும் நாவல் இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக் காலக் கொடூரங்களைச் சித்தரிக்கும் பாப்சி சித்வா எழுதிய ஐஸ் கேண்டி மேன் என்னும் நாவல் மனோகர் மல்கோத்தர் எழுதிய இந்தியப் பிரிவினையின் பல பரிமாணங்களைக் குறிக்கும் எ பெண்டு இன் தி கேன் ஐஸ் என்னும் நாவல் ஆர்வெல்லின் பகடிகள் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கில எழுத்தாளர் ஜொனாதன் ஸ்விப்ட் எழுதிய பகடிகளுக்கு இணையாகப் போற்றப்படும் அனிமல் ஃபார்ம் ஓர் அரசியல் பகடி என்னும் நாவல் குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் பாதிக்கப்படும் இஸ்லாமிய மக்களின் துயர் மிகு வாழ்வைச் சித்தரிக்கும் வழக்கறிஞர் கரீம் எழுதிய முகாம் எனும் நாவல் இந்திய விடுதலைப் போராட்டத்தின் மிக உயர்ந்த தியாகத்தைச் சித்தரிக்கும்  தத்தா எழுதிய வரலாற்று நூல் ஜாலியன் வாலாபாக்  ஊர்வசி பட்டாலியா எழுதிய இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்காலக் கொடுமைகள் பற்றிய வரலாறாக தி அதர் சைட் ஆஃப் சைலன்ஸ் குரல் வளமிக்க பெண்மணி தனது பேசும் திறனைத் திடீரென இழந்த அவலத்தைச் சித்தரிக்கும் கேரளச் சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சந்தோஷ் குமார் எழுதிய வார்த்தைகள் எனும் நாவல் தாமஸ் ஹார்டி எழுதிய நிறைவேறக் காதலின் வலியைச் சொல்லும் தி ரிட்டர்ன் ஆப் தி நேட்டிவ எனப் பதினைந்து நாவல்களையும் இரண்டு சிறுகதைகளையும் பற்றி பேராசிரியர் விஜயகுமார் ஆராய்ந்து சிறப்பாக மதிப்பீடு செய்துள்ளார் இந்திய விடுதலையின் கடைசி காலகட்டத்தில் நடைபெற்ற பிரிவினையின் காரணமாக மக்கள் எப்படி எல்லாம் அவதிப்பட்டனர் என்பதை நிறைய நூல்கள் வெளிப்படுத்தி இருக்கின்றனர் அவற்றில் உள்ள வலிகளையும் வேதனைகளையும் இன்றைய தலைமுறையினருக்கு எளிதில் புரியும் படியாக இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. நூலின் ஒவ்வொரு அத்தியாயமும் வாசிக்கும் நமக்குப் புதுப்புது புதையல்களை அறிமுகம் செய்கின்றன ஒவ்வொரு செய்திகளிலிருந்தும் தொடர்ச்சியான வரலாற்றின் தேடல்களையும் இன்றைய காலச் சூழலில் போராட்டத்தின் மீது மனிதர்கள் வைத்திருக்கும் சிந்தனைகளையும் உணர்ந்து கொள்ளவும் வாய்ப்பாக அமைகின்றன. நவில்தொறும் நூல் நயம் – விஜயகுமார் கட்டுரைத் தொகுப்பு பட்டறிவு பதிப்பகம் மதுரை முதல் பதிப்பு ஜனவரி 2026 பக்கம் 130 விலை ரூபாய் 120

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    என். ஸ்ரீராம் கதைகளின் மாயாதீதம் – ராணி கணேஷ்

    நதிப்பிரவாகம் அமராவதியின் பெருஞ்சீற்றத்தை அருகிருந்து கண்ணுற வைக்கும் கதை. என்.ஸ்ரீராம் அவர்கள் எந்தக் கதைக் கருவாய் இருந்தாலும் அதில் தரவுகளைக் கண்டறிந்து தெளிவாக எழுதிச் செல்கிறார். இந்தக்கதையில்தான் எத்தனை வகையான சேவல்களின் பெயரை அடுக்கியுள்ளார். அவரின் கதைகளில் பூவாகட்டும், புல்லாகட்டும், பறவைகளாகட்டும்,…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    புதைமணல் : பெருநகர மனங்களின் அலைவுறும் கணத் திரட்சி – ஞா.குருசாமி

    எழுத்தாளர் அரவிந்தனின் ‘புதைமணல்’ நடப்புலகின் பெருநகர வெளிகளைக் களமாகக் கொண்ட வித்தியாசமான கதைகளின் தொகுப்பு. இதில் உள்ள பத்துக் கதைகளிலும் ‘அலைவுறும் மனித மனங்கள்’ பொதுவான அம்சமாக இருந்தாலும் ஒவ்வொரு மனங்களும் வாசகனைப் பார்த்து ‘நீதான் நான்’ என்று சொல்லும் படியான தொனியைச் சுமந்துகொண்டிருக்கின்றன. கதையில் வரும் பாத்திரங்கள் வாசகனை எதாவது ஓர்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    நுணுகிப் பார்த்தல் – மணி மீனாட்சிசுந்தரம்

    “பார்க்கப்படும் நிலவைப் போன்றதல்ல    சொல்லப்படும் நிலவு” பா.வெங்கடேசன் நுணுகிப் பார்த்தல் என்பது எப்போதும் ஒரு சிறந்த கவிதையின் சிறந்த பண்பாக இருக்கிறது. நுணுகிப் பார்த்தல் என்பதில் யாரும் காணாததைக் கவிஞன் காண்பதும், யாரும் கண்டவற்றுள் கவிஞன் கண்டடையும் தனித்த ஒன்றும்…

    மேலும் வாசிக்க
Back to top button