குறுங்கதைகள்
-
Aug- 2026 -26 August
குறுங்கதை- இத்ரீஸ் யாக்கூப்
அவர் என் அப்பா அந்திக் குன்றாய் அவள் உடலிலும் உடையிலும் செம்மை அப்பியிருந்தது. இந்த வீட்டிற்கு மாறிய பின்னும் புதிதாக எதுவும் உண்டா என்ன? மாடி விளக்கைப் போட வந்தவள் அங்கேயே காற்றுக்கு விடை கொடுத்த மரமாய் நின்றுவிட்டாள். “என்ன ரேகா உங்க வீட்டுக்கு இன்னைக்கு விருந்தாடி யாரோ வந்திருந்தாங்க போல?” காணும்…
மேலும் வாசிக்க -
26 August
குறுங்கதை – காந்தி முருகன்
நொறுங்குண்ட சதை அகலம் குறைவில் நீளமான கண்ணாடியது. இந்த உயர் ரகக் குடியிருப்பில் மிகச் சிறிய அறையில் கண்ணாடியும் ஒரு மேஜையும் மட்டுமே உள்ளன. மேஜையில் கூர்மையான ஒரு பொருள், முனை மட்டும் துணியால் சுற்றப்பட்டுக் கிடந்தது. கண்ணாடி முன் நிற்கிறாள் அர்ஷா, நிர்வாணமாக. சில நிமிடங்கள் அல்ல. சில மணி நேரங்கள். அவளது முகத்தில் சோர்வுக்கான தடயங்கள் இல்லை. தன் வெற்றுடலை வெறிச்சோடிப் பார்க்கிறாள். இந்த உடல் அருவருக்கத்தக்க ஒன்றாக இருப்பதாக உணர்கிறாள். நாற்பத்து ஐந்திலும் கட்டுக்கோப்பான உடலது. கூடுதலற்ற சதைகள் இல்லை. வயிறு தட்டையாகக் கொழுப்பின்றி உள்ளது. தோள் பட்டை கம்பீரமாக உள்ளது. தன்னை முழுவதுமாகப் பார்க்கிறாள், பல கோணங்களில். அவளுக்குச் சலிப்பு ஏற்படவே இல்லை. கண்களில் ஓரம் வழிந்த நீர்த்துளிகளைத் துடைத்திட முனையவில்லை. அவை சிறு கோடுகளாய் மார்பைக் கடந்து போய்க்கொண்டிருந்தன. அழகான இந்த உடலை எதனோடு ஒப்பிட்டு வர்ணித்தாலும் அனைத்துக் காட்சிப் பிழைகளாகவே கடந்து விடுகின்றன. கூர்மையான அந்தப் பொருளைக் கையில் எடுக்கிறாள். இந்த உடலுக்கான தேவை நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அத்தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளத் திருமணப் பந்தத்தில் இணைய வாய்ப்பில்லாமல் போகும் வேளையில் உடலுக்கான பந்தத்தை மட்டும் நிகழ்த்திக்கொள்ள உறவுகளின் பெயரில் உரிமைகள் நிகழ்கின்றன. சில உரிமைகள் தடுக்கப்பட முடிகின்றன. சில உரிமைகள் தவிர்த்தல் என்பதனை சாகடித்துவிடுகின்றன. உடலுக்கான தேவை நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இந்தத் தேவையைத் தீர்க்கப் பல கட்டுப்பாடுகள், பல கட்டமைப்புகள் உடனிருந்து வளர்ந்துவிட்டன. எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும் என்கிறபோது உடலுக்கான தேவையை மட்டும் எளிதில் பூர்த்தி செய்ய முடிவதில்லை, தனிமையில்.
மேலும் வாசிக்க -
Jul- 2026 -7 July
குறுங்கதை – ஹிதாயத்
திட்பம் அவளுடைய அழுகையும் கோபமும் துளியளவுகூட அவனை அசைத்ததாகத் தெரியவில்லை. அழுத்தம் நிறைந்த அந்தத் தருணத்தை வெகு சாதாரணமாக அவன் கையாண்டுகொண்டிருந்தான். பொங்கி எழுந்த ஆத்திரத்தில், அவனை வாய்க்கு வந்தபடி பேசிச் சபித்துக் கொண்டிருந்தாள் அவள். அவன் மேல் அவள் கொண்ட…
மேலும் வாசிக்க -
Apr- 2026 -13 April
குறுங்கதை – காந்தி முருகன்
சுவருக்கப்பால் நான் இங்கமர்ந்து சில மணி நேரங்கள் ஆகின்றன. என் கைகளும் கால்களும் சங்கிலியால் கட்டப்பட்டுள்ளன. என் சிந்தனைகள் எங்குதான் இருக்கின்றன என்பதைத் தேடிக்கொண்டிருக்கிறேன். இந்த நான்கு சுவர்களையே சுற்றிமுற்றிப் பார்க்கிறேன். அவை வெறுமையான சுவர்கள் அல்ல; நகரக் கூடியவை. ஐந்து நிமிடங்களுக்கொரு முறை அவை இருக்கும் இடத்தை விட்டு ஓரடி நகரும். இதில் வேடிக்கை என்னவென்றால் எல்லாப் பக்கச் சுவர்களும் ஒரே நேரத்தில்தான் நகரும். என் பின் பக்கச் சுவர் சிக்கல்களால் ஆனவை. என்னைப் பின்னிருந்து அதிவேகமாகத் தள்ளிவிடும் ஆற்றல்மிக்கது. என் முதுகைக் கொண்டு நகரவிடாமல் ஓரளவுதான் முயல முடிகிறது. முன் பக்கச் சுவர் “அருகில் வா” என்று அழைத்துக்கொண்டே மெதுவாகத்தான் நகர்கிறது. நான்தான் செல்ல மறுப்பு தெரிவிக்கிறேன். வலது இடது பக்கச் சுவர்கள் என்னை நசுக்கிவிடவே துடிக்கின்றன. சுவர்கள் நகர நகர இருள் சூழ ஆரம்பிக்கின்றன. நீண்டிருந்த என் கால்களின் பாதங்களைச் சுவர்கள் நகர்த்திக் கொண்டு வருகின்றன. யார்தான் இந்தச் சுவர்களை இயக்குகின்றனரோ. சங்கிலிகளின் பூட்டை இவ்வளவு நேரம் நான் தேடவே இல்லை. நசுங்கிவிடுவேன் என்கிற பயவுணர்வில் தேடுகிறேன். கையில் சிக்கவில்லை. கால்களை மடக்கி அமர வேண்டிய நிலை உருவாகிவிட்டது. உடல் இறுகத் தொடங்குகின்றது. விரிந்திருந்த தேகம் வளையத் தொடங்குகிறது. என் தோள் பட்டைகள் கன்னங்களை உரச ஆரம்பித்துள்ளன. சதைகள் பிதுங்கி கண்கள் மயங்குகின்றன. இப்போதுதான் உணர்கிறேன், என் கைகள் எந்த இரும்புகளாலும் கட்டப்படவேயில்லை.
மேலும் வாசிக்க -
Feb- 2026 -10 February
குறுங்கதைகள் – காந்தி முருகன்
அவள் கவனிக்கப்படுகிறாள் தொடர் வண்டியில் ஏறி அமர்ந்தவள் இன்னுமும் நூலை எடுத்து வாசிக்கவில்லை. மனம் அவளை விட்டு வெகுதூரம் சென்று கொண்டிருப்பதாக உணர்ந்தாள். தொடர் வண்டி பயணத்தில் அவளுக்கு விருப்பமான ஒன்று வாசிப்புதான். அமைதியான சூழலில் எந்தவொரு தொந்தரவுமின்றி வாசிக்கத் துவங்கிவிடுவாள்.…
மேலும் வாசிக்க -
Jan- 2026 -9 January
நல்வாழ்வுக்கு 10 புதிய ஃபெங்சூயி பொருட்கள் – ஷாராஜ்
1. ‘பண மழை’ கல்: பெயர்: டாலர் டொர்னாடோ (Dollar Tornado) பலன்: இதை உங்கள் பர்ஸ் அல்லது பணப்பெட்டியில் வைத்தால் அடுத்த நொடியே அந்தரத்திலிருந்து பணமழை கொட்டும். பயன்படுத்தும் முறை: தினமும் சூர்யோதயத்திற்கு முன் இதை உங்கள் வலது கையில்…
மேலும் வாசிக்க -
Sep- 2025 -19 September
இரு குறுங்கதைகள் – மணி ராமு – மலேசியா
அதீதம் இருட்டுவதற்குள் வீட்டில் விளக்கேற்றி விடுவார் வைதேகி. பூஜை மேடையில் பூச்சரங்கள் சருகாவதற்குள் மாற்றி விடுவார். அகர்பத்தியின் நறுமணமும் சாம்பிராணியின் வெண்புகையும் வீட்டைக் கடந்து வீதிவரை தத்தம் இருப்பை நிலைநாட்ட மறவாது. வைதேகியின் வீட்டைக் கடந்து போவது ஆலயத்தை கடந்து போகும்…
மேலும் வாசிக்க -
19 September
அவளின் அவன் – ஹிதாயத்
மெய்யழகிக்கு கனலியின் இந்த இறுக்கம் பழகிப் போனதுதான். ஆனாலும் வெகு சமீபமாய் கனத்த வலி ஒன்றை கனலியின் செயல்பாடுகளில் மெய்யழகியால் காண முடிந்தது. கனலி அப்படியானவளல்ல. மத்தாப்பு பொறியும் புன்னகைக்குச் சொந்தக்காரி. அவள் இருக்குமிடம் அத்தனை கலகலப்பாய் இருக்கும். சிரித்த முகத்தோடு…
மேலும் வாசிக்க -
Aug- 2025 -22 August
மழைக்கதைகள் – நிஜந்தன் தோழன்
1 மழை பேஞ்சு ஓஞ்ச இரவில் வழக்கத்திற்கு முன்னரே இருட்டிவிட்டதால் இனிமேலா வந்து இந்த பின்னூசிகள வாங்கப் போறாங்க என்ற நினைப்பில் மொத்தமாக அனைத்தையும் வாரி சுருட்டிக்கொண்டு பஸ் ஸ்டேண்ட்லருந்து ஜி.எச்ச நோக்கி மெல்லமா நடக்க ஆரம்பித்தான். இந்த மேம்பாலங்கள இந்த…
மேலும் வாசிக்க -
Jul- 2025 -17 July
குறுங்கதைகள் – தயாஜி
பொம்மியும் பொம்மையும் சில நாட்களாகவே ஒற்றைத்தலைவலி. மைக்ரீன்தான். என்னைச் சந்திப்பவர்களின் இவர்தான் முதன்மையானவர். மாதம் ஒரு முறை வந்துவிட்டு போவார். சில சமங்களில் ஒரே நாளில் கிளம்பிவிடுவார்; சில சமயங்களில் ஒருவாரம்வரை இருந்துவிட்டு, என்னைப் படுத்தியெடுத்துவிட்டு போவார். ரொம்பவும் பழகிவிட்டதால், அவர்…
மேலும் வாசிக்க