இணைய இதழ் 124
-
Apr- 2026 -13 April
மவுஸ் – கே.எஸ்.சுதாகர்
காலாண்டிற்கு ஒரு தடவை ஜப்பானில் இருந்து எமது தொழிற்சாலைக்கு வரும் ‘வர்ணமும் கடதாசியும்’ (Paint & Paper) என்ற துண்டுப்பிரசுரத்தில் இருந்த அந்தச் செய்தி என்னைத் திகைப்படையச் செய்தது. செய்தி இதுதான். |காரின் உதிரிப்பாகங்களுக்கு மாத்திரம், வர்ணம் அடிக்கும் நவீன முறை…
மேலும் வாசிக்க -
13 April
நீராட்டம் – கெளதம் நாராயணன்
பேராத்துச் செல்வியம்மன் கோவில் அருகே சுழித்தோடும் நதியை வெறித்தாற்போல் அமர்ந்திருந்த அந்தக் கல் மண்டபத்திற்கு சுப்பையாவின் வாழ்வில் பெரிய பங்கேதும் இருந்திருக்கவில்லை. ஓட்டிவரும் ஹெர்குலஸ் சைக்கிளைச் சரித்து வைக்கவும், குளியல் முடித்து உடைமாற்றி, உள்ளாடை உலர்த்தவும், பள்ளம் விழுந்திருந்த அதன் விளிம்புகளில் கட்டைவிரல் பதித்து ஊன்றி ஏறி, அதன் உச்சியில் புத்தனைப்போல் அமர்ந்துகொண்டு, நீந்தி விளையாடும்…
மேலும் வாசிக்க -
13 April
நிழல் சுமக்கும் நதி – சாந்தி மாரியப்பன்
கார்த்திக்கின் மனதுக்குள் ஒரு பெரும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. செம்பூர் ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் அவன் நின்றிருந்தபோது, அந்த இடமே ஒரு மாபெரும் இயந்திரத்தின் இரைச்சல் மிகுந்த உதிரிப்பாகமாகத் தெரிந்தது. கன்னியாகுமரியின் எங்கோ ஒரு கோடியில், வாகனப்புகை அண்டாத ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்திருந்த அவனுக்கு இந்த நகரத்தின் பரபரப்பும் தூசியும் வாகனப் புகையும் ஓர் ஒவ்வாமையைத் தந்திருந்தது. அதிகாலையில் கேட்கும் குயிலோசையும், ஊரைச்சுற்றியிருக்கும் தென்னந்தோப்புகளும் அவனது நினைவுகளில் நிழலாடின. அவற்றையே நினைத்து நினைத்து ஏங்கினான்,; குடும்பச்சூழல் காரணமாக மும்பையில் கொண்டு வந்து தூக்கிப்போட்ட விதியைச் சபித்தான்.…
மேலும் வாசிக்க -
13 April
உணவுப் பொதி சுமக்கும் கடவுளின் தூதுவர்கள் – இலட்சுமணப் பிரகாசம்
வீட்டுப் படிப்பறையில் அலுவலக அதிகாரி நடத்திக்கொண்டிருந்த கூகுள் மீட்டிங்கில் இருந்த வேளையில் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தவள், “உங்களுக்குச் சாப்பிட என்ன வேணும்?“ என்றாள். கூகுள் மீட்டிங் போய்க்கொண்டு இருப்பதாகவும் இன்னும் கொஞ்ச நேரத்தில் முடியும் தறுவாயில் இருப்பதையும் சைகையால் காட்டி மீண்டும் கவனத்தை அலுவலக அதிகாரியின் கட்டளையைச் செவிமடுக்கத் தொடங்கினேன். அடுத்த சில நிமிடங்களில் இணைய வழியிலான கூகுள் மீட்டிங் முடிந்தது. அதுவரை ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காதுகளில் மாட்டியிருந்த கருவிகள் காதை சூடாக்கி இருந்தன. அதிகாரியின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதில் இருந்த வேளையில் தாகம் எடுத்தால் தண்ணீர் குடிப்பதற்கும் தோன்றாது. இப்போதோ தொண்டை வறண்டிருந்தது. காதுகளில் பரவியிருந்த சூடு உடல் முழுவதும் பரவி கொதிநிலைக்குச் செல்வது போலிருந்தது. எத்தனை மணி நேரம் உழைத்தாலும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் தங்களுடைய ஊழியர்கள் மீது கருணையே வராது. கார்ப்பரேட் கம்பெனியில் பணிக்குச் சேர்கிற நாள்முதல் அவர்களுடைய விதிகளுக்கு நாம் கட்டுப்பட்டாக வேண்டும். கார்ப்பரேட் கம்பெனியின் ஊழியர்கள் நவீன யுகத்தில் எளிதில் கிடைக்கிற அடிமைகள், சாசுவதமான சாசனம் எழுதிக் கொடுத்துவிட்ட பலியாடுகள் என்ற எண்ணம் ஐ.டி ஊழியர்களுக்குக் கல்வெட்டு போலப் பதிந்தாலும் நாளுக்கு நாள் அன்றாடப் பொருட்களின் விலைவாசி ஏறுகின்றன. மாதாமாதம் வங்கிக் கணக்கிலிருந்து பிடித்துக்கொள்கிற வீடு கட்டுவதற்காக வாங்கியிருந்த…
மேலும் வாசிக்க -
13 April
இடைப்பட்ட வாழ்க்கை – பாலமுருகன். லோ
“சார், உங்க கருத்தைச் சொல்ல முடியுமா?” “ஏம்ப்பா… கேள்வி கேக்குறீங்க? எதைப் பத்தி, இல்ல, யாரைப் பத்தின்னு தெரிஞ்சாதானே பதில் சொல்லச் சௌகரியமா இருக்கும்.” “அதான், தாதா சாகேப் பால்கே விருது மத்திய அரசால் கொடுக்கப்பட்டதே! உங்களைப் போல அவரும் ஒரு நடிகர்தானே.” இந்தக் கேள்வியைக் கேட்டவுடன், முகம் முழுக்கக் கோபம் பொங்க, ஏதோ ஒரு நாகம் அவரைத் தீண்டியதுபோல ஒரு படபடப்பு…
மேலும் வாசிக்க -
13 April
பெரியது – மழைக்குருவி
மாலை நான்கு மணிக்கு வர வேண்டிய பேருந்து இன்னமும் வரவில்லை. தட்டாம்பட்டியில் இருந்து ஏழு பேர் கொண்ட குழு கிளம்பி அரசமரம் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தாயிற்று. முருகராசு, தன் சட்டைப்பையிலிருந்து நைந்து போன நெகிழியில் வதங்கிப் போயிருந்த வெற்றிலையை எடுத்து சுண்ணாம்பு தடவ ஆரம்பித்தார். பேச்சி…
மேலும் வாசிக்க -
13 April
பரந்து கெடுக – பாக்கியராஜ் கோதை
“எழுத்தாளரா மட்டும் ஆயிடாத, கிறுக்குப் புடிச்சிடும்” “ஏன்?” “உலகத்துல பாக்குறதெல்லாம் கதையாத் தெரிய ஆரம்பிச்சு, சாதாரண வாழ்க்கை வாழ முடியாம போய்டும். ஒருத்தன் செத்தாலும், ஒருத்தன் என்ன ஒருத்தன், உன்னப் பெத்த அம்மாவே செத்தாலும் அதுவே கதையாத்தான் தெரியும். வர்ற கண்ணீருக்கு முன்னாடி இது கதையா மாறுனா எப்படியிருக்கும்னுதான் தோணும், அம்மா செத்ததுக்கு அழுவாம அதுல கதையத் தேடுறவன் கிறுக்கனாத்தான இருக்க முடியும்” கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்ட அந்த எழுத்தாளருடனான இந்த உரையாடலை என்னால் …
மேலும் வாசிக்க