இணைய இதழ் 124
-
Apr- 2026 -13 April
அருண் கொலட்கரின் கவிதைகள்
தமிழில் ஆர் சீனிவாசன் ஆடு புலி ஆட்டம் யார் ஆடு யார் புலிஅது முக்கியமல்ல – என்றும்தவறாமல் ஒரே முடிவுதான்அவள் வெல்வாள்நான் தோற்பேன் ஆனால் சில சமயம்வேட்டை உச்சத்தில்மந்தை பாதியானபோதுஎதிர்பாரா இடத்திலிருந்துஉதவும் கரங்கள் வரும் –மேலிருந்து பெரும் போர்களைப் பார்த்த பெரியவன்எங்கள்…
மேலும் வாசிக்க -
13 April
கோபி சேகுவேரா கவிதைகள்
வாம் – மனிதர்கள் மட்ட மதியானத்தில்ஒரு மரத்தடியில்நிகழ்த்தப்படும் ஒன்றுகூடலுக்குஉங்கள் பெருவாழ்வின்இரண்டு மணி நேரங்களையாவதுகொடுத்துவிடுங்கள்.சில நேரங்களில் நம்மைப் பற்றியோ,சில நேரங்களில் வருத்தங்கள் பற்றியோ,சில நேரங்களில் ப்ரியங்களைப் பற்றியோ,சில நேரங்களில் தவறிய முடிவுகள் பற்றியோ,சில நேரங்களில் அரசியல் பற்றியோ,இப்படி எதையாவது பேச, கேட்கநம்மிடம் இருக்கும்…
மேலும் வாசிக்க -
13 April
வளவ.துரையன் கவிதைகள்
செம்போத்து எதிர்வீட்டுப் பலாமரத்தைஎதிர்நோக்கி இருந்தேன் ஆயுத எழுத்து போல்அதில் மூன்று காய்கள் எங்கிருந்தோ வந்தஒரு செம்போத்துஒரு காயில் உட்கார்ந்ததுஅத்தி பூத்தாற்போலகோடையின் பெருமழையாய்செம்போத்து இங்கு தோன்றும் உட்கார்ந்த அது இப்போதுஎன்னையே பார்த்தது அதன் முறைப்புமிகவும் பயமாயிருந்தது அதை நானும் கவனமாய்பார்க்காதது போலப்பார்க்கத் தொடங்கினேன்…
மேலும் வாசிக்க -
13 April
ரேகா வசந்த் கவிதைகள்
சிலுவை! சுமக்கப் பணிக்கப்பட்டவனின்சிலுவையின் பாரம்அவன் பிள்ளையின் மீதும்சற்று அழுந்துகிறது!பொம்மைகளும் மிட்டாய்களும்பிடுங்கப்பட்ட பின்பு,பாரம் சுமப்பதுபிள்ளைக்குவாடிக்கையாகிறது!“அய்யோ பாவம்”என்ற ஒன்றைஉதிர்த்துவிட்டு,நடுக்கத்துடன் நகர்கிறார்கள்வேடிக்கை பார்ப்பவர்கள்!பால்யம் என்ற ஒன்றையேபழகாத,பாலகனின் கனவில்வந்து வந்து போகின்றனபறக்காத பட்டங்களும்!நனையாத காகிதக் கப்பல்களும்! கூண்டுப்பறவை! கூண்டில் பிறந்த பறவைக்குவானம்பாடியின் இசைக்கோர்வைகள்அந்நியம்!தொட்டுவிட முடியாஅதீத தூரத்தில்வானம்!இறகுபெரும் பாரம்!காற்றின்…
மேலும் வாசிக்க -
13 April
ப.மதியழகன் கவிதைகள்
உயிரின் நிழல் 1எனக்கு இன்றுமரணத்தின் அறிமுகம் கிடைத்ததுஅது முகவரியற்ற கடிதம் போலஇன்று என்னை வந்தடைந்ததுஅது இரவு வானவில்லைப் போலகாணக்கூடியதாக இல்லைஅது இத்தனை ஆண்டுகள்பால்வீதியில் தொலைந்து போயிருந்ததுஅது சற்றுமுன் இதழ் விரித்தமலரை விட மென்மையானதாக இருந்ததுஅது மேரியின் கற்பை விடபரிசுத்தமானதாக இருந்ததுஇதுநாள் வரை…
மேலும் வாசிக்க -
13 April
வரலாற்றுத் தடத்தில் காக்கைச் சிறகினிலே இருக்கும் – ஆசிரியர் வி.முத்தையா
‘காக்கைச் சிறகினிலே’ 15 ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருக்கும் மாத இதழாகும். கலை, இலக்கியம், சமூகம் தொடர்பாக அதில் வரும் கருத்துகள் முற்போக்கானவை. அதன் ஆசிரியர் வி. முத்தையா கூட்டுறவுத் துறையில் பணியாற்றியவர்; தொழிற்சங்கவாதி. மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட அனைத்துச் சமூக உணர்வாளர்களும், இதனைத் தமது பத்திரிகையாகக் கருதுகிறார்கள். காக்கைச் சிறகினிலே இதழின் வெற்றிக்குக் காரணம் என்ன என்ன! சென்னை, பல்லாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில், பீட்டர் துரைராஜ் நடத்திய, இந்த நேர்காணலின்போது மொழிபெயர்ப்பாளர் அக்களூர் இரவியும் உடன் இருந்து, இந்தச் சந்திப்பைச் செழுமைப்படுத்தினார். கே : காக்கைச் சிறகினிலே என்ற பெயரை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்? ப : 2010ஆம் ஆண்டு கூட்டுறவுத்துறையில் இருந்து நான் ஓய்வு பெற்றேன். ஏஐடியுசி சங்கத்தில் இருந்தேன். ஒரு தொழிற்சங்கவாதி என்ற வகையில், எப்பொழுதுமே தொழிலாளர்கள், நண்பர்கள் சூழ இருந்திருக்கிறேன். ஓய்வுபெற்ற பின்பு, நண்பர்களோடு பேச, ஓர் அறையை வாடகைக்கு எடுக்கலாம் என யோசித்து வந்தேன். அப்போது பத்திரிகையாளர் தமிழன்பன், ‘காக்கைச் சிறகினிலே’ என்ற பெயரில் ஒரு தலைப்பு இருக்கிறது என்று சொன்னதாக வைகறை சொன்னார். அதே பெயரில் பத்திரிகை நடத்தலாம் என முடிவெடுத்தோம். ஆனால், அலுவலகத்தில் விசாரித்தபோது, புதுப்பிக்கப்படாமல் அதன் பதிவு காலாவதி ஆகிவிட்டது என்று கூறிவிட்டார்கள். அதே பெயரில் புதிதாக இதழ் ஆரம்பிக்க விண்ணப்பித்தோம்; பதிவும் கிடைத்துவிட்டது. நான் ஓய்வுபெற்றுவிட்டதால், ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் என்று என் பெயரிலே பதிவு செய்துகொண்டேன். கே : பொதுவாகச் சிறு பத்திரிகைகளின் நடை கரடு முரடாக இருக்கும். ஆனால் காக்கை மாறுபட்டு இருக்கிறதே! ப : இதில் எழுதுகிற பலரும் சமூகத்தை முன்னேற்ற வேண்டும் எனும் அக்கறை கொண்டவர்கள். ஆகையால் அவர்களுடைய எழுத்துக்கள் மக்களைச் சென்றடையும் விதமாக எளிமையாக இருக்கின்றது. அச்சுக் கட்டணம், அஞ்சல் கட்டணத்தை ஈடுகட்டும் வகையில் சந்தா வருகிறது. மக்களுடைய நம்பிக்கையைப் பெற்றுவிட்டதால், இதழ் தொடர்ந்து வருகிறது. கொரோனா காலத்திலும்கூட இணைய வழியில் வெளியிட்டோம். வியாபார நோக்கம் எங்களுக்கு இல்லை. கே : ஈழம் தொடர்பான கட்டுரைகள் காக்கையில் நிறைய வருகின்றனவே!…
மேலும் வாசிக்க -
13 April
குறுங்கதை – காந்தி முருகன்
சுவருக்கப்பால் நான் இங்கமர்ந்து சில மணி நேரங்கள் ஆகின்றன. என் கைகளும் கால்களும் சங்கிலியால் கட்டப்பட்டுள்ளன. என் சிந்தனைகள் எங்குதான் இருக்கின்றன என்பதைத் தேடிக்கொண்டிருக்கிறேன். இந்த நான்கு சுவர்களையே சுற்றிமுற்றிப் பார்க்கிறேன். அவை வெறுமையான சுவர்கள் அல்ல; நகரக் கூடியவை. ஐந்து நிமிடங்களுக்கொரு முறை அவை இருக்கும் இடத்தை விட்டு ஓரடி நகரும். இதில் வேடிக்கை என்னவென்றால் எல்லாப் பக்கச் சுவர்களும் ஒரே நேரத்தில்தான் நகரும். என் பின் பக்கச் சுவர் சிக்கல்களால் ஆனவை. என்னைப் பின்னிருந்து அதிவேகமாகத் தள்ளிவிடும் ஆற்றல்மிக்கது. என் முதுகைக் கொண்டு நகரவிடாமல் ஓரளவுதான் முயல முடிகிறது. முன் பக்கச் சுவர் “அருகில் வா” என்று அழைத்துக்கொண்டே மெதுவாகத்தான் நகர்கிறது. நான்தான் செல்ல மறுப்பு தெரிவிக்கிறேன். வலது இடது பக்கச் சுவர்கள் என்னை நசுக்கிவிடவே துடிக்கின்றன. சுவர்கள் நகர நகர இருள் சூழ ஆரம்பிக்கின்றன. நீண்டிருந்த என் கால்களின் பாதங்களைச் சுவர்கள் நகர்த்திக் கொண்டு வருகின்றன. யார்தான் இந்தச் சுவர்களை இயக்குகின்றனரோ. சங்கிலிகளின் பூட்டை இவ்வளவு நேரம் நான் தேடவே இல்லை. நசுங்கிவிடுவேன் என்கிற பயவுணர்வில் தேடுகிறேன். கையில் சிக்கவில்லை. கால்களை மடக்கி அமர வேண்டிய நிலை உருவாகிவிட்டது. உடல் இறுகத் தொடங்குகின்றது. விரிந்திருந்த தேகம் வளையத் தொடங்குகிறது. என் தோள் பட்டைகள் கன்னங்களை உரச ஆரம்பித்துள்ளன. சதைகள் பிதுங்கி கண்கள் மயங்குகின்றன. இப்போதுதான் உணர்கிறேன், என் கைகள் எந்த இரும்புகளாலும் கட்டப்படவேயில்லை.
மேலும் வாசிக்க -
13 April
வெளிச்சம் – நிர்மல்
சாயங்காலம், இருளில் மூழ்கிக்கொண்டிருந்தது. டார்கெட் ஸ்டோரின் வண்டி நிறுத்துமிடத்தில் நான் இருந்தேன். ஹென்னா, அடுத்த வாரம் எந்தக் கடையில் நண்பர்களுடன் சாப்பிட வேண்டும், ஏன் அங்கே சாப்பிட வேண்டும் என்பது பற்றித் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். அவளது இனிய உதடுகள் அசைகின்றன. ஆனால், எனக்குக் கேட்கவில்லை. என் மனமும்…
மேலும் வாசிக்க -
13 April
வின்கா ரோசியா – சேவியர் ராஜதுரை
வின்கா ரோசியாவிடம் பேசி குறைந்தது பத்து வருடங்களிருக்கும். இதுநாள் வரையில் அவள் எப்படியிருக்கிறாள் – என்ன செய்கிறாள் என எதற்காகவும் பேசாமல் தற்போது பணத்தேவைக்காக அழைப்பது சரவணனுக்கே அசிங்கமாகவிருந்தது. அவளிடம் கேட்டுப்பார்க்கச் சொல்லி அவனது நண்பன் மனோகர் அவளது எண்ணைக் கொடுத்தான். அவளுக்கு போன் செய்து…
மேலும் வாசிக்க -
13 April
யுவான் சுவாங்கின் மீசை – தருணாதித்தன்
குமார் இரண்டு வரிகள்தான் எழுதி இருந்தான். “அப்பா உடல்நிலை சரியில்லை, மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம்.” குமார் என்னுடைய மாமா சுப்பிரமணியின் மகன். அவன் இப்போதெல்லாம் பேசுவது எழுதுவது எல்லாமே சுருக்கமாகத்தான். இளம் வயதில் அப்படி இல்லை, எங்களுடன் நன்றாகத்தான் பழகுவான்; நிறையப் பேசுவான். இரவு பதினொன்றுக்குக் குடும்ப வாட்சப் குழுமத்தில் போட்டிருந்தான். நான் வழக்கம்போல ஐந்து மணிக்கு அலாரம் இல்லாமலேயே எழுந்து, பச்சைத்…
மேலும் வாசிக்க