இணைய இதழ்இணைய இதழ் 60சிறார் இலக்கியம்

ஜானு; 08 – கிருத்திகா தாஸ்

சிறார் இலக்கியம் | வாசகசாலை

யாரது யாரது

ஜானு.. வாசல் கதவுக்கு வெளியே இருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள்.. அன்று முழுதும் நடந்த அனைத்தையும் யோசித்தபடி.

எப்போதும் போல் அந்தப் பகுதி மக்கள் காவல் நிலையத்துக்கு வருவதும் போவதுமாய் இருந்தார்கள்.

வெங்கடேசன் சார் இன்னும் ஒரு முறை வந்து ஜானுவிடம், ‘காஃபி வேண்டுமா?’ என்று கேட்டுவிட்டுச் சென்றார்.

அந்தக் கருப்பு நிறப் பறவை பறந்து போய் எங்கிருந்தோ இன்னும் இரண்டு பறவைகளை அழைத்து வந்து அதே இடத்தில் உட்கார்ந்தது.

சாலை எப்போதும் போல் வேகமாய் இயங்கிக்கொண்டே இருந்தது. 

நேரம் போனதே தெரியவில்லை.

அப்போது..

கீதாவும் சந்த்ருவும் வந்து சேர்ந்தார்கள்.

கீதாவைக் கண்டதும் இறுக்கமான மனநிலை மறந்து நிம்மதியானது ஜானுவுக்கு.

“கீத்தாக்கா ..” குதித்துக்கொண்டு சந்தோஷமாய் ஓடினாள் கீதாவிடம்.

“சோ ஸ்வீட்..”

கீதா அதை ரசித்தார்..

“கம் ஜானகி.. உள்ள போலாம்”

இருவரும் கை கோர்த்துக்கொண்டு அறைக்குள்ளே போனார்கள்.

கீதா அவரின் சேரில் உட்கார்ந்து அலைப்பேசியை எடுத்து ஓரிரண்டு நிமிடங்கள் பார்த்துவிட்டு அதை டேபிள் மேல் வைத்துவிட்டு ஜானுவிடம் திரும்பினார். 

ஜானுவும் பக்கத்தில் வந்து டேபிளோடு ஒட்டிக்கொண்டு நின்றுகொண்டாள்.

கீதா கேட்டார்.. “என்ன செஞ்சுட்டு இருந்த இவ்ளோ நேரம்..?”

“வெளிய போய் வெங்கடேசன் தாத்தா கிட்ட பேசினேன். அப்புறம் அந்த சேர்ல உக்காந்து ரோட்டைப் பார்த்துட்டு இருந்தேன் கீத்தாக்கா..”

“ம்ம். குட்..”

“கீத்தாக்கா.. எனக்குத் திடிர்னு ஒண்ணு தோணுச்சு.. உங்ககிட்ட நான் அது கேட்கணும்.. கேக்கட்டுமா..?”

“ம்ம் கேளேன்..” மென்மையாகச் சொன்னார் கீதா.

“ரன்னிங் சேசிங் சீன் இருக்குல்ல கீத்தாக்கா..”

“என்ன சீன்..?”

“ரன்னிங் சேசிங் ஃபைட்டிங்..”

“ஆமா..”

அவள் அடுத்து என்ன கேட்கப் போகிறாள் என்று கீதாவுக்குப் புரிந்தது.

“அதெல்லாம் எப்போ வரும்..?”

“எப்போயாவது வரும்.. ஏன்..?”

“அப்படி வந்தா என்னையும் உங்க கூட கூட்டிட்டுப் போவீங்களா..?” கண்கள் விரிய ஆர்வமாய்க் கேட்டாள் ஜானு.

“கண்டிப்பா கூட்டிட்டுப் போகமாட்டேன்..”

“ஓ நோ..”

சோகத்தில் மூழ்கியது ஜானுவின் முகம்.. கீதா சொன்னதைக் கேட்டு.

டேபிள் மேல் தலையைக் குப்புறக் கவிழ்த்துக்கொண்டு, “கீத்தாக்கா நோ.. என்னையும் கூட்டிட்டுப் போங்க…”

“நோ..”

“அப்படிச் சொல்லாதீங்க கீத்தாக்கா ..” குப்புறக் கவிழ்ந்தபடியே.

“அங்க யாராவது உன்னை அடிச்சாங்கன்னா என்ன பண்றது..?”

பட்டென்று நிமிர்ந்த ஜானு, “ஆமால்ல.. கரெக்ட்..”

கண்களை இறுக மூடிக்கொண்டு.. டேபிள் மேல் கை வைத்து முகத்தைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு.. தீவிரமாய் யோசிக்கத் தொடங்கினாள்.

கீதாவுக்குச் சிரிப்பு வந்தது இதைப் பார்த்து.

யோசித்து முடித்துக் கண்களைத் திறந்த ஜானு,

“கீத்தாக்கா.. நாம ஒண்ணு பண்ணலாம்.. நாம ஒரு சைன் லாங்க்வேஜ் உருவாக்கலாம்.. ஃபைட் சீன் நடக்கும்போது நாம இந்த சைன் லாங்க்வேஜ் யூஸ் பண்ணி அடி வாங்காம எஸ்கேப் ஆகிடலாம்.. சரியா..”

“ம்ம்..சரி.. என்ன பண்ணலாம்.. சொல்லு..”

தன் ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் சேர்த்து ஒன்றாகப் பிடித்துக்கொண்டு ஜானு , “கீத்தாக்கா.. உங்களோட இந்த ரெண்டு விரல் இருக்குல்ல.. இது ரெண்டையும் ஒண்ணா ரைட் சைட் காட்டி நீட்டுனீங்கன்னா..”

“நீட்டுனா..?”

“நான் ரைட் சைட்ல ஓடிப்போய்டுறேன்”

“Hahaah..”

“உங்க கட்டைவிரலை இடது பக்கம் காட்டுங்க. அப்போ நான் இடது பக்கம் ஓடிடுறேன். ம்ம்ம்ம். அப்புறம் உங்க ஃபுல் உள்ளங்கையை என்னைப் பார்த்துக் காட்டுனீங்கன்னா நான் பின்னாடிப் பக்கம் ஓடி எஸ்கேப் ஆகிடுறேன். அதே மாதிரி உள்ளங்கையை உங்க பக்கமா காட்டினீங்கனா நான் உங்ககிட்ட ஓடி வந்துடுறேன்.”

“நல்லா இருக்கே..”

“இருங்க இன்னும் கொஞ்சம் யோசிக்கலாம்.. ம்ம்ம்ம்ம்..” திரும்பவும் கண்கள் மூடி யோசனை ..

“ஹா.. அப்புறம் உங்களோட எல்லா விரலையும் இப்படி ஒண்ணா க்ளோஸ் பண்ணி இப்டி அப்ஸைட் மூவ் பண்ணீங்கன்னா நான் ஜம்ப் பண்ணுவேன்.. கூட உங்க எல்போ உயர்த்தி காட்டுனீங்கன்னா அப்டியே குதிச்சு என்னை அட்டாக் பண்ண வரவங்களோட மூஞ்சிலயே குத்திடுவேன்..”

“நிஜமாவா..?”

“ஆமா கீத்தாக்கா குத்திடலாம்..”

“வெரி குட்.. வேற..?”

“ம்ம்ம் வேற….. ஹா உங்க உள்ளங்கையைத் தரையைப் பார்த்துக் காட்டினீங்கன்னா நான் ஃப்ளாட்டா தரையில விழுந்துடுறேன். சரியா?”

“ம்ம் சரி..”

“அப்புறம்… இது தான் முக்கியமானது.. உங்க கையை என்னைப் பார்த்துக் காண்பிச்சு.. ஒரு முறை கையை க்ளோஸ் பண்ணி ஓபன் பன்னிங்கன்னா.. பக்கத்துல என்னமோ இருக்கு அதை எடுத்து அவங்களை அட்டாக் பண்ணனும்னு அர்த்தம்.. நான் அதைப் புரிஞ்சுக்கிட்டு அட்டாக் பண்ணிடுறேன்..”

“Fantastic..”

“Thank you கீத்தாக்கா ..”

“சரி, உன்னோட திங்ஸ் எல்லாம் பேக் பண்ணு.. டைம் ஆச்சு பார்.. வீட்டுக்குப் போலாம்..”

“ஓகே..”

பேக் பண்ணிக்கொண்டே.. “ஆனா, நீங்க ஃபைட் சீன்க்கு என்னைக் கூட்டிட்டுப் போவீங்கன்னு சொல்லுங்க..”

“அது நடக்கும்போது பாத்துக்கலாம்..” – என்றபடியே ஜானுவை வெங்கடேசன் சாரோடு அனுப்ப வாசலில் நிற்கும் ஜீப் வரை வந்த கீதா.. பின் சந்த்ருவிடம்..

“சந்த்ரு.. பைக் சாவி கொடுங்க..”

“ஐ ..” – ஜானுவுக்கு ஜாலியானது..

புன்னகைத்த கீதா.. ஜானுவுக்கு ஹெல்மெட் போட்டு விட்டார். பின்.. “உட்கார்..”

இருவரும் ஜானுவின் வீடு நோக்கி பைக்கில் செல்லத் தொடங்கினார்கள்.

யாருமில்லாத சாலையில் செல்ல ரொம்பப் பிடித்திருந்தது ஜானுவுக்கு.

“கீத்தாக்கா .. ஸ்லோவா போலாம்..”

“ம்ம்ம்…”

மிக மெதுவாகச் சென்றார் கீதா..

ஜானு .. பாட்டு பாடத் தொடங்கினாள்.

“That was my kutti story .. how was my kutti story “

“என்ன பாட்டெல்லாம் பலமா இருக்கு..?”

“ஜாலியா இருக்கு கீத்தாக்கா .. அதான்..”

“ம்ம்.. சரி பாடு..”

“Life is very long கீத்தாக்கா .. Always be happy”

“ரைட்..”

அப்போது திடிரென்று.. “ஆ…” ஜானு அலறினாள்..

“ஜானகி.. என்னாச்சு..”

“கீத்தாக்கா ஏதோ பெரிசா வந்து ரோட்ல விழுகுது..”

“காத்துல ஏதாவது பறந்து வந்திருக்கும்..”

“ஓகே..”

சமாதானமாகி பாடலைத் தொடர்ந்தாள் ஜானு..

“Design designaa problems will come and go…”

அப்போது ..

பட்டென்று பைக்கின் முன்பு ஏதோ வந்து விழுந்தது..

அதில் நிலை தடுமாறிய கீதா சுதாரித்துக்கொண்டு அது என்னவென்று பார்த்தார்..

‘பாட்டில்’

அதிர்ந்த கீதா.. கண்ணாடி வழியாக என்ன நடக்கிறது என்று பார்க்க முயன்றார்..

அப்போது..

எங்கிருந்தோ வந்த கல்லொன்று கண்ணாடியை உடைத்து நொறுக்கியது..

“கீ த் தா க் கா … …..”

சடாரென்று பின்னால் திரும்பிப் பார்த்தார் கீதா …

அங்கே.. நான்கைந்து பைக்குகள் இவர்களைத் துரத்திக்கொண்டு வந்தன..

கூர்ந்து பார்த்தார் கீதா.பார்த்துக் கொண்டிருக்கும் போதே இன்னொரு கல் இவரை நோக்கி வந்தது.

சட்டென்று குனிந்து அந்த கல்லைத் தவிர்த்து விட்டு..,

“ஜானகி ….. கெட்டியா பிடிச்சுக்கோ…”

“ஓகே கீத்தாக்கா ..”

அந்த நொடி,

பைக்கினை அதி விரைவாகச் செலுத்தத் தொடங்கினார் கீதா.

கண்களை மறைத்த வேகம்.

அப்போது இன்னுமொரு பாட்டில் வந்து வலது பக்கமாகச் சாலையில் விழுந்து உடைந்தது.

கீதாவை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள் ஜானு.

அடுத்த பாட்டில் கீதாவின் தோளில் வந்து அடித்து கீழே விழுந்து நொறுங்கியது.

கீதாவின் மனதில் அப்போது ஓடியது ஒன்றுதான்..

‘ஜா ன கி’

அடுத்த நொடி தன் இடது கையை இடது புறமாக நீட்டிய கீதா…

“ஜானகி.. உன்னோட ரெண்டு கையையும் வெச்சு என் கையை கெட்டியா பிடி..”

ஜானு அதே போலவே பிடித்தாள்..

அவளை சர்ரென்று தூக்கிய கீதா தனக்கு முன்பாக உட்கார வைத்தார்.

ஜானு ஹெல்மெட்டைக் கழற்றிக் கொடுத்தாள்.

“கீத்தாக்கா .. இந்தாங்க இதைப் போட்டுக்கோங்க..”

அசுர வேகத்தில் சென்ற கீதா .. யூ டர்ன் பண்ணி இன்னும் விரைவாகச் சென்றார்.

பைக்குகளும் பின்னாலேயே துரத்திக்கொண்டு வந்தன..

அப்போது.. ஒரு உருட்டுக்கட்டை வந்து கீதாவின் முதுகில் விழுந்தது..

‘ம்’

கண்களை மறைக்கத் தொடங்கியிருந்தது கொலைவெறி.

மெதுவாய்.. அழுத்தமாய்.. பின்னால் திரும்பிப் பார்த்தார் கீதா..

சில முகங்கள் தெரிந்தன.. அவற்றுள் அந்த இரண்டு முகங்கள் தெளிவாகத் தெரிந்தன..

அதே ஆத்திரத்தோடு .. கீதா.. ஏதோ ஒரு இடது புறத் திருப்பத்துக்குள் புகுந்தார்.

பைக்குகள் பின் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன.

சட்டென்று ஒரு வலது புறத்தில் திரும்பி.. மீண்டும் அடுத்த வலது புறத்தில் திரும்பி ஏதோ ஒரு சின்னச் சின்ன வீடுகள் கொண்ட காம்பவுண்டுக்குள் புகுந்து வீடுகளுக்கு நடுவே இருந்த நெருக்கமான இடைவெளிக்குள் வண்டியை நிறுத்தினார்..

பின்.. ஜானுவிடம் 

“ஜானகி.. சத்தமே போடக்கூடாது.. கொஞ்சம் கூட.. சரியா..”

“ஓகே கீத்தாக்கா ..”

கண்ணிமைக்கும் நொடியில் அந்தக் காம்பவுண்டுக்குள் இருந்து வெளிய வந்த கீதா.. அந்தத் தெருவுக்கு அந்தப் பக்கம்.. இருட்டாய் இருந்த ஏதோ ஒரு வீட்டுக் காம்பவுண்டு சுவர் மேல் ஜானுவைத் தூக்கி உக்கார வைத்துவிட்டு.. அந்தக் காம்பவுண்டுக்குள் எகிறிக் குதித்தார்.. 

பின் ஜானுவைத் தூக்கிக்கொண்டார்.. 

அப்போது பைக்குகளின் சத்தம் கேட்டது.. 

அந்த வீட்டின் மொட்டைமாடிப் படிகளுக்கு அடியில் போய் பதுங்கிக் கொண்டார்கள் இருவரும்..

பைக்குகள் அருகில் வரும் சத்தம் கேட்டது.

ஜானு கீதாவைப் பார்த்தாள்.

கீதா சத்தத்தைக் கவனித்துக் கொண்டே ஜானுவையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டு இன்னும் அதிகமாகப் பதுங்கிக் கொண்டார்.

கொஞ்சம் கொஞ்சமாய் பைக்குகள் தூரமாகச் செல்லும் சத்தம் கேட்டது..

“போறாங்க..” கிசுகிசுப்பான குரலில் சொன்னாள் ஜானு..

“ஷ்ஷ்.. அமைதியா இரு..”

அமைதி..

அந்த அமைதியை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தார் கீதா.

ஜானு கீதாவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அடுத்த ஐந்து நிமிடம் கழித்து.. 

மீண்டும் பைக்குகள் எதிர்த் திசையில் சென்று மறையும் சத்தம் கேட்டது..

ஜானு ..

“நிஜமாவே போய்ட்டாங்க..”

“சைலண்ட்டா இரு..”

பயங்கரமான அமைதி.

சுத்தமாய்ப் பத்து நிமிட அமைதிக்குப்பின் அந்தச் சந்தில் அவர்கள் வேகமாக நடக்கிற ஓடுகிற சத்தம் கேட்டது.

ஜானுவும் கீதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். 

அப்போது.. அவர்களின் பேச்சு சத்தம் கேட்டது.

“இப்டி எஸ்கேப் ஆய்ட்டாளேண்ணே . சிக்கிருந்தான்னா மூஞ்சிய கருக்கி விட்டுருக்கலாம் இன்னிக்கு..” ஆசிட் பாட்டிலை பாக்கெட்டில் மறைத்துக்கொண்டே..

“எஸ்கேப் எல்லாம் ஆகிருக்க மாட்டா.. இங்க தான் எங்கயாவது ஒளிஞ்சு உக்காந்து நாம பேசுறத கேட்டுட்டு இருப்பா. நம்ம சிக்கிருந்தா நம்ம மூஞ்சிய ஆசிட் அடிச்ச மாதிரி மாத்தி விட்ருப்பா..”

“.”

“ஒரு பொம்பள.. ரோட்ல ஓடவுட்டு அடிச்சாடா என்னை.. அதுக்கப்புறம் ஒரு பய பயப்பட மாட்டேங்கிறான் எனக்கு.. என் பொண்டாட்டி கூட என்னை மதிக்க மாட்டேங்கிறா..”

“அப்புறம் எதுக்கு ஒளிஞ்சு உக்காந்திருக்கா..?”

“கூட அந்தச் சின்னப் பொண்ணு இருந்தது இல்ல.. அதான்..”

“அண்ணே .. அந்தப்புள்ளைய செஞ்சு விட்ருவோமா..”

“அப்டி மட்டும் செஞ்சோம்ன்னா சுடுகாடு வரைக்கும் தர தரன்னு இழுத்துட்டுப் போய் பொதச்சு உட்ருவா.. கொலகாரி..”

“ப்ச்.. இவ இருக்குற வரைக்கும் நமக்குப் பிரச்சனண்ணே..”

“விடு விடு.. சிக்குவா சீக்கிரமா **** அன்னைக்கு அவளுக்கு சாவுதான்.. சாவு பயத்தக் காட்டிக் காட்டி சாவடிக்கணும் அவளையெல்லாம்.. செஞ்சால்ல என்ன **** கழுத்தை அறுத்து கடைசி சொட்டு ரத்தம் வரை கழுத்து வழியாவே வெளிய எடுக்கறேன்..”

இவர்கள் பேசுவது தெளிவாகக் கேட்டது கீதாவுக்கும் ஜானுவுக்கும்.

அதன் பிறகு அவர்கள் நடந்து செல்லும் சத்தம் கேட்டது.

அதன் பிறகு எந்தச் சத்தமும் கேட்கவில்லை. 

பத்து நிமிஷங்கள் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள்.

பைக்குகள் போகும் சத்தம் கேட்கவில்லை.

ஜானு கீதாவைப் பார்த்தாள்.

கீதா ‘ஷ்ஷ்’ என்பது போல் சைகை செய்தார்.

ஜானு இரண்டு கைகளையும் வைத்து வாயை அடைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

கீதா மெல்ல அங்கிருந்து நகர்ந்து போய் இருட்டுக்குள் ஒளிந்து நின்று வெளியே எட்டிப் பார்த்தார்.

அங்கே யாரும் இல்லை.

ஆனால்.. உள்ளுணர்வு சொன்னது.. ‘எல்லாரும் இங்கதான் இருக்காங்க’..

கீதா மீண்டும் ஜானுவின் அருகே வந்து உட்கார்ந்து பாக்கெட்டில் அலைப்பேசியைத் தேடினார்..

காணவில்லை..

அச்சோ அப்போதுதான் நினைவு வந்தது.. அவர் அலைப்பேசியை எடுத்தே வரவில்லை..

‘ச்ச’

டென்ஷனாகி உட்கார்ந்துவிட்டார் கீதா.

சில நொடிகள் கீதாவையே பார்த்துக் கொண்டிருந்த ஜானு.. கீதாவின் கை மேல் கை வைத்தாள்.

அப்போது.. கீதா ஜானுவிடம்,

“பயமா இருக்கா..?”

“இல்ல கீத்தாக்கா..”

“நம்ம அவங்ககிட்ட மாட்டிக்கக் கூடாது..”

“மாட்டிக்க மாட்டோம் கீத்தாக்கா..”

“ஓடுவியா ஜானகி..?”

“ஓடுவேன்..”

“வேகமா ஓடுவியா..?”

“செம்ம ஸ்பீடா ஓடுவேன்..”

(ஜானு தொடர்வாள்…)

kritikadass86@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button