இணைய இதழ்இணைய இதழ் 51கவிதைகள்

திருமூ கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

சிறு தளிர்

அலுவல் பணி உயரழுத்தம்
பீறிட்டுக்கொள்ளும் வேளைகளில்
தேநீரக மரநிழல்
ஓரம்பார்த்து
இருசக்கர வாகனம் நிறுத்தி
ஒரு இஞ்சி டீ சொல்லிவிட்டு
தலைக்கவசத்தை கழற்றி
அமிழ்ந்துபோன கேசம்கோதி
உயிர்தடவுகையில்
தொட்டிச்செடியில்
எனக்காகவே
துளிர்த்துக் கொள்கின்றது
தினம்
ஒரு
சிறுதளிர்.

***

ப்ரியம்

ப்ரியமான சொல்லொன்றை
உயிரிலூற்றி
ஒரு இதய வடிவிலான
பலூனில் ஊதி
குழந்தையின் கைகளில்
அளித்திருப்பதால்
பரிதாபத்திற்குரிய நிலையில் உள்ளது
அது
வெடிக்கும்போது
ஒன்று
நீ
அதிர்ச்சியுறலாம்
அல்லது
ஆனந்தமடையலாம்.

***

நூல்கள்

அருக்கன் பூவைச்சுற்றி வட்டமடிக்கும்
வண்டென
நீயெனக்குக் கொடுத்தனுப்பிய
சில நூல்களின்
மகரந்தக் கள்ளுண்டு
கிறுக்குப் பிடித்திருக்கிறது
பாழாய்ப்போன பருவத்திற்கு.

******

thiruanand5@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button