இணைய இதழ்இணைய இதழ் 75தொடர்கள்

பறவைகளுக்கான வாழ்விடச் சிக்கல்கள்; 09 – கிருபாநந்தினி

கடல்குருவி

தன் அறிவியல் பெயர் Hydrobates monorhis; இதன் ஆங்கிலப் பெயர் Swinhoe’s Storm-petrel. Robert Swinhoe என்பர் 1867 ஆம் ஆண்டு இப்பறவையைப் பற்றி முதன் முறையாக விவரித்தவர். அதனால் அவருடைய பெயரையே வைத்துள்ளனர். 

ராபர்ட் சிவினோ கல்கத்தாவில் பிறந்தவர். பறவையிலாளர். தென்கிழக்கு ஆசியப் பறவைகளைத் தொகுத்தவர். சீனா உள்ளிட்ட பல இடங்களுக்குப் பயணம் செய்தார். அவருடைய பணி ஓய்வுக்குப் பிறகு 1873 ஆண்டு முதல் சீனாவில் பல பகுதிகளில் பயணம் செய்து இயற்கை வரலாற்றுத் தரவுகளைச் சேகரித்தார். இதற்கு முன் மேற்கத்தியர்களை அனுமதிக்காத காரணத்தால் பல தரவுகள் நமக்குக் கிடைக்காத நிலையில முதன் முதலாக இவர் சென்று சேகரித்தவை அனைத்தும் அறிவியலுக்குப் புதிதாக பதிவு செய்யப்பட்டன.  குறிப்பாக பறவைகள், மீன்கள், பாலூட்டிகள் மற்றும் மீன்கள் ஆகியவை புதிதாகக் கண்டறியபட்டவை. 

பல பறவையிளார்களுடன் தொடர்புகொண்டு கலந்தாலோசித்து பல தரவுகளை பறவைகளுக்கான இதழ்களில் எழுதியுள்ளார். உடல்நிலை காரணமாக 41வயதிலேயே இறந்தார். இவருடைய பெயரை 4 வகையான பாலூட்டிகளுக்கும், கிட்டதட்ட 15 வகையான பறவைகளுக்கும் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ஸ்வின்ஹோ கடல்குருவியான இப்பறவையும் அடங்கும். 

இப்பறவை பெரும்பாலும் ரசியா, ஜப்பான் நாடுகளின் தீவுப்புகுதிகளில் வாழ்கின்றன. மேலும் சீனா, தாய்வான், வட மற்றும் தென் கொரியா ஆகிய பகுதிகளிலும் வாழ்கின்றன. ஏப்ரல் மாதங்களில் வட அட்லண்டிக் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன.  

இப்பறவையினம் சாதரணமான எண்ணிக்கையில்தான் 2009 வரை இருந்துள்ளது. 2012 ஆம் ஆண்டு அழியும் நிலையில் உள்ள பட்டியலில் வைத்துள்ளனர். இந்தியாவிற்கு வலசை வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை காசிமேடு பகுதியில் 2017 ஆம் ஆண்டு இறுதியாக பார்த்துள்ளனர். 

 

இப்பறவை ஆக்ரமிப்பு உயிரினங்கள் அல்லது அயல் உயிரினங்களால் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. குறிப்பாக Brown Rats Rattus norvegicus என்ற எலி மற்றும் Oriental Chaff Flower Achyranthes japonica என்ற தாவரம் ஆகியவை முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன. 

ஜப்பானில் உள்ள கோயாசிமா தீவில் Brown Rats  என்கிற எலி அறிமுகப்படுத்தப்பட்டு அதன் எண்ணிக்கையில் அதிகரித்ததால் இப்பறவையின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.  

இப்பறவைக்கும் எலிக்கும் என்ன தொடர்பு? 

எலியைப் போன்றே இப்பறவையும் இரவில் உணவு உண்டு, தீவுகளில் கடல் மணலில் குழி பறித்து பொந்துகளில் வாழ்பவை. இனப்பெருக்கத்தின்போதும் பொந்தில் ஒரே ஒரு முட்டை மட்டுமே இடுகிறது. எலிக்கான பல உணவுகளில் முட்டையும் ஒன்று என்பதால் இப்பறவையின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்தது.

இதன் வாழ்விடங்களில் இன்னொரு பிரச்சனை அயல் நாட்டுத் தாவரமான Oriental Chaff Flower Achyranthes japonica  ஆகும். கிட்டத்தட்ட 90% பறவைகள் இத்தாவர ஆக்ரமிப்பினால் ழிந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. கிட்டதட்ட 386 பறவைகள் 2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இத்தாவங்களில் சிக்கி இறந்ததாக பதிவுகள் உள்ளன. அதில் 88% இனப்பெருக்க நிலையிலுள்ள பறவைகளாகும். 
இப்பறவை இனப்பெருக்கம் செய்யும் சில இடங்களான ஜப்பானில் வெர்கோவ்ஸ்கி தீவு, ஷிரியாசகியில் உள்ள பென்டென்ஜிமா தீவு, அமோரி மாகாணம் ஆகிய பகுதிகளில் சுண்ணாம்புக் கல் சுரண்டி எடுக்கப்பட்டதிலும் கடல்குருவியின் இனம் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இறந்த இப்பறவைகளில் வேதிப்பொருட்களை ஆய்வு செய்தபொழுது ஈய உலோகம் அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

அயல் தாவரங்களை அகற்றுவதாலும், சுற்றுலாவைக் கட்டுபடுத்துவதாலும் இப்பறவை இனத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

(தொடரும்…)

kirubhanandhini@yahoo.in

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button