கவிதைகள்
-
இணைய இதழ் 110
கி.கவியரசன் கவிதைகள்
இவ்வளவு அழகாகமெதுவாகஇந்த வாத்துகள்சாலையைக் கடக்கும்போதுஉலகம் எவ்வளவு வேகமாகச் சுழன்றால்எனக்கென்ன?* திடீரென வந்து முட்டி மோதும்புரட்டிப் போடும்அடித்துச் செல்லும்பிறகு எங்காவதுகரை ஒதுக்கி விடும்காட்டாற்று வெள்ளம் கவிதை.* அன்றொரு நாள் இங்குதான்செடிகளுக்கு அருகில்மண்ணின் மீதுஒரு பழத்தை வைத்தேன்அதைக் காணவில்லைமண் தின்றிருந்தது நேற்று கடற்கரையில்அலைகளில் கால்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 110
இளையவன் சிவா கவிதைகள்
பிறந்த தின வாழ்த்தெனமகளுக்கு மரக்கன்றைப் பரிசளித்தேன்பாடங்களிலும் படங்களிலும் மண்ணின் பெருமைகளைமனப்பாடம் செய்த மகள்மரக்கன்று நடவீட்டைச் சுற்றித் தேடுகிறாள் மண் பரப்பைஅரையங்குல இடத்தையும்அறை என நிரப்பி விடும்அடுக்கக இல்லத்தில்அனாதையாய்இறப்பு நாளை எதிர்நோக்கி மூலையில் கிடக்கிறாள்வனங்களின் தாய். * ஆங்கார மிருகம் அடிபணியாமல்அதிகாரம் கொண்டு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 110
பிறைநுதல் கவிதைகள்
சட்டப்படி இரண்டு போதுமே! அப்பொழுது அதன் பெயர் அதுவல்ல!இப்படித்தான் அன்றும் ஆரம்பித்ததுஅது ஒரே வார்த்தைதான்மூன்றே மூன்று எழுத்துகள்தான்இரண்டரை மாத்திரைகள்தான்அதனால்நடுகல்களையும் அண்டவெளியையும்மட்டும் வணங்கியவர்களின் தெய்வங்கள்முப்பத்து முக்கோடி என்று பல்கிப்பெருகினகுலம் கோத்திரமாகி அதுபிறப்பின் அடிப்படையில் என்றானதுகோடாரிக்காம்புகளும் வந்தேறிகளும்அரசக்கட்டிலில் அதனை அமர வைக்கசிறு குறு தெய்வங்களையும்இந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 110
ராணி கணேஷ் கவிதைகள்
எல்லாம் முடிந்துவிட்டதுஎன்ற எண்ணத்தில் சோர்வுறும் மனதைஒற்றைப் புன்னைகையில் உயிர்க்க வைக்கிறாய்மாயங்கள் நிறைந்த மந்திரப் புன்னகைமறையாமல் இருக்கட்டும் உன்னிடமிருந்துநான் கொஞ்சம் சந்தோஷமாய் வாழ்ந்து கொள்கிறேன். * பேசவேண்டாமென நான்தான் கூறினேன்அதையே வேதவாக்காக்கி பேசாமல் இருக்கிறாய்அதற்காக உன்னுடன் நான்தான் சண்டையிடுகிறேன்நான் அப்படித்தான் பேசுவேன் என்றும்இப்படித்தான்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 109
ஷினோலா கவிதைகள்
பிரியாது விடைபெறுதல் எதையெதையோபேசிக்கொண்டு வரும்பக்கத்து இருக்கைக்காரர்கள்சாவகாசமாய் ஒரு சிநேகிதத்தைஏற்படுத்திக்கொண்டுவிடைபெறுகிறார்கள்அடுத்த மணி நேரத்தில்எந்தப் பரிட்சயமும் இல்லாதஒரு நெருக்கத்தை தைத்துவிட்டுவிலகி செல்கிறது பேருந்துஅடுத்தடுத்தநிறுத்தங்களுக்கானஅவசரத்துடன். * மேக நிழல் சாத்தியமற்ற தருணங்களைகடக்க முடியாதவன்கழுத்தோடு கயிற்றை இறுக்குகிறான்நடுங்கும் கைகளால்நாடியை நறுக்குகிறான்யாரும் காணாத தொலைவில்யாரும் தேடாத மறைவில்துயர் இழுத்துத்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 109
வளவ.துரையன் கவிதைகள்
அம்மாதான்….. பார்த்து ஓரமாப்போய்ட்டு வா என்பார் பாட்டி யார்கிட்டயும் சண்டை போட்டுக்கிட்டுஅடி வாங்கி வராதே என்பார் அப்பா எல்லாத்தையும் பத்திரமாஎடுத்து வா என்பார் அண்னன் விளையாடிட்டு வரேன்னுசட்டை டிராயரைஅழுக்காக்கக் கூடாது என்பர் அக்கா அம்மாதான்மத்யான நேரத்துலதூக்குல வச்சிருக்கறசாதத்தைப் பூராசாப்பிட்டு வா என்பார்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 109
ராஜேஷ் வைரபாண்டியன் கவிதைகள்
மகிழம் தினமும் தன் வீட்டின் பின்புறமுள்ளகல்லறைக்கு மலர்கள் கொய்து வந்துதூவுகிறாள்மூதாட்டிஅவளுக்கென மலரும் மலர்களுடன்மலர்மொழியில் பேசியபடியே மலர்களைக் கொய்வதுஅவள் வழக்கம்மரித்த கிழவன் மீது கிழவிக்கு எவ்வளவு காதல்எனப் பேசிச் சிரிப்பார்கள் உள்ளூர்வாசிகள்மனிதர்களிடம் பேசுவதை அவள்நிறுத்தி வருடங்கள் பல கடந்துவிட்டனஅவளும் மலர்களும் மட்டுமே வசித்தஅந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 109
பிரபாகரன் சிங்கம்பிடாரி கவிதைகள்
என் காதல் ஆயிரத்தொரு இடர்களுக்கு மத்தியில்அவனை அவளை எந்த சமரசமும் இல்லாமல்பற்றிக்கொள்வதையும் உடன்போக்குநிகழ்வதையும் காதல் என்று விவரிப்பதை விடபொருத்தமான சொல் உலகில் எந்த அகராதியிலும்இல்லை, போர்க்களத்தின் மத்தியிலும்வறுமையின் உச்சத்திலும்தனிமையின் தவிப்பிலும்ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர்பற்றிக்கொள்வதையும் அவர்களின் புணர்ச்சிவேட்கையையுமே காதல் எனக் கூற வேண்டும்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 109
ப.மதியழகன் கவிதைகள்
நானெனப்படுவது எனது பகல்களை முற்றிலும்மனிதர்களே ஆக்கிரமித்துக்கொண்டுள்ளனர்எனது முகஸ்துதிகளும் புன்னகையும்சம்பிரதாயத்துக்காக மட்டுமேஎனது அடகு வைக்கப்பட்டமூளையைக் கொண்டுவேறு என்ன செய்வது?வாகன ஓட்டிகள் அனைவரும்சாலையைக் கடந்துகொண்டிருந்தநாய்க்குட்டியைப்பொருட்படுத்தவில்லைஎன்னைப் போன்றபூஜ்யங்கள்தான்ஒன்றுக்கு மதிப்பைக் கொடுக்கின்றனதிரௌபதிக்கு மட்டுமே தெரியும்தன்னைத் துகிலுரித்ததுச்சாதனனின் கைகள் எதுவென்றுஉலகம் இப்படி இருப்பதற்குஒருவகையில் நானும் காரணம்எப்போதாவதுதான்அவதானிக்கிறேன்பின்தொடரும் நிழலைசுமைகளை இறக்கி…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
க.சி.அம்பிகாவர்ஷினி கவிதைகள்
குறியீட்டுப் பாதை குறியீட்டுப் பாதையில்நடக்கிறபோதுவலதுபக்கம்வேண்டாமெனக் கையசைத்துஅலறும் மழலையை வாய்பொத்திஉள்ளே தூக்கிச் செல்கிறார்வயது முதிர்ந்தவர்இடதுபுறம்ஒரு நொடி தாமதித்துநுணா மரத்தின்ஓரிலையை ஒடித்து நிற்கிறேன்என் யோசனையெல்லாம்வலதா இடதா என்றெல்லாமில்லைவலதில் குறியீடு காட்டினால்இடதில் அதன் காதில்ஓரிலை வைக்கப் பார்க்கிறேன்வலதும் இடதும் வேண்டும்நிற்பதும் தாமதிப்பதும் என் வேலைஎனக்கு முன்னே…
மேலும் வாசிக்க