பதிப்பகம்
Trending

மனவெளியில் காதல் பலரூபம் – யாத்திரி

கவிதைத் தொகுப்பு | வாசகசாலை

“தன்னைச்சுற்றி எல்லோரும் காதலிக்கிறார்கள், நான் காதலிக்காமல் இருப்பது எனக்கு இழுக்கு என்று அழுத்தகத்திற்கு உள்ளாகும் ஆண்கள் அதிகம். அவனுக்கு இந்தப் பெண் என்றில்லாமல் ஏதாவது ஒரு பெண்ணை காதலித்தாக வேண்டும்.
ஒரு பெண் அழகாக இருக்கிறாள் என்றால் அவள் ‘கண்ணுக்குப் பிடித்த பெண்’ அவ்வளவுதான். கண்ணுக்குப் பிடித்த பெண்ணை மனதுக்குப் பிடிக்க வைக்கும் முயற்சிகளையும் காதல் என்பான். கண்ணுக்குப் பிடித்த பெண்ணை பின்தொடர்ந்து அவளைக் கவரும் முயற்சிகளின் ஆபத்து என்னவென்றால், எப்படியாவது அவளுக்குப் பிடித்தமானவனாக ஆகிவிட வேண்டுமே என்ற ஏக்கம் ஒரு நிலையில் உருமாறி அவளுக்கு என்னைப் பிடிக்காமல் போகவே கூடாது என்று ஆணின் உள்ளுக்குள் ஒரு அகங்காரமாக(ego ) மாறும்.
இது மேலும் தீவிரமடைந்து தன்னுடைய ego satisfaction – க்காக அளப்பரிய அன்பையே தரும் நிலைக்குப் போகும், அவள் இதுவரைக்கும் கண்டிராத அன்பு. உயிரைக் கூட பணயம் வைக்கும்.

இதையெல்லாம் பார்த்து, என்னவொரு ஆத்மார்த்த காதலென்று அப்பெண் அவனுடைய காதலை ஏற்றுக்கொண்டதும் அவன் இயல்புக்குத் திரும்பிடுகிறான். அவளைப் பொறுத்தவரை அவன் வேறு ஒரு ஆணாக மாறிவிடுகிறான்.
தன்னை விரட்டி விரட்டிக் காதலித்தவன், தனக்குப் பிடித்தமானவை எல்லாம் தெரிந்து வைத்து நிறைவேற்றியவன் இவன் இல்லையே என்று பெண் குழம்புகிறாள். காதலை ஒரு இலக்காக நிர்ணயித்து பெண்ணிடமிருந்து அதனை அடைந்ததும் அதற்குப் பின் என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. அவனே யோசிக்கிறான், “நான் அன்பாகத்தானே இருந்தேன், இப்போது இவள்மீது ஏன் நாட்டமின்றிப் போகிறது?”

அவன் செலுத்திய அன்பு அவனுடைய ego satisfaction னுடைய விளைவுதானே தவிர தாமாக விளைந்த உணர்வெழுச்சியின் வெளிப்பாடல்ல. (ego satisfaction love – இதைத்தான் காரணமே இல்லாத அன்பு என்று புரிந்து கொண்டிருக்கின்றீர்கள்.) இவ்வுண்மையை அவன் தன் வாழ்நாள் முழுக்கவே உணர்ந்துகொள்ள முடியாது. அவன் ego அதற்கு விடாது. தன்னைக் குற்றம் சொல்லக்கூடிய எந்தவொன்றையும் அது உள்ளிருந்து எதிர்த்துக்கொண்டே இருக்கும்.”

– யாத்திரி (Karthik) ❤️

#மனவெளியில்காதல்பலரூபம் கவிதைத் தொகுப்பின் முன்னுரையிலிருந்து..?

#வாசகசாலை_பதிப்பகம் ?

விலை – ரூ.150

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க
Close
Back to top button