இணைய இதழ் 123
-
இணைய இதழ் 123
குணுக்கம் – சுதர்சன்
மாடிப்படியேறி வரும்போதே எங்களுக்கு எதிர் வீட்டிலிருந்து சாமான்களை அட்டைப்பெட்டிகளிலும் சாக்கு மூட்டைகளிலும் கட்டி, ஆட்கள் தூக்கிக்கொண்டு படி இறங்கியபடி இருந்ததைக் கவனித்தேன். மூன்றாவது மாடியிலிருந்து தரைத் தளம் வரை படியில்தான் இறங்க வேண்டும், மின் தூக்கி ஏதுமில்லை. அம்மா இன்னும் வேலையிலிருந்து…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 123
எடுபிடி – கனகா பாலன்
“ஒரு ஆம்பளைன்னா உரக்கப் பேசி, மீசை முறுக்கோடு கம்பீரமா இருந்தாத்தானே மரியாதை. இப்படியா, யாரு என்ன சொன்னாலும் ஆமாஞ்சாமி போடுறது. உமக்குன்னு சொந்தமா மூளை இல்லையா” என்று அடிக்கடி அப்பாவின் இயல்பைக் குத்திக்காட்டி பேசும் அம்மாவை எனக்கும் பிடிக்காமல் போய்விட்டது. அப்பா…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 123
அந்த இரண்டாயிரம் ரூபாய்
1 கடந்த ஒரு வாரமாக வாடகைக் காரை எடுத்துக்கொண்டு அப்பாவும் அம்மாவும் அருப்புக்கோட்டையில் தொடங்கி, சென்னை வரையிலும் பரவிக் கிடக்கும் உறவுக்காரர்களுக்கெல்லாம் பத்திரிக்கை வைத்துவிட்டு, இன்று காலைதான் வீடு திரும்பினார்கள். பயண அலுப்பை அகற்றுவதற்குப் பகல் நேரத்திலேயே பத்து மணி நேரம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 123
ஆலிவ் விதைகளைச் சுமந்த அகதி – ஷாராஜ்
(முன்குறிப்பு: இது அசல் கதை; மொழிபெயர்ப்போ தழுவலோ அல்ல. கதைக்களம், கதை எழுத்துமுறை ஆகியவை இது மொழிபெயர்ப்பாக இருக்கலாம் என்கிற எண்ணத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தக்கூடும் என்பதால் இதை முன்கூட்டியே சொல்லிவிடுகிறேன்). அத்தியாயம் 1 பாலஸ்தீனத்தின் காஸா முனையின் எல்லைப் பகுதியில் அமைந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 123
ஸ்ரீதேவி மோகன் கவிதைகள்
நாள்காட்டியைக் கிழிக்கும்போதெல்லாம்எழும் பெருமூச்சொன்று காதெட்டுகிறதுஇனிப்பு செய்யும் நாட்களில்உப்பாய் துளி கண்ணீர் சேர்கிறதுபூவினை முகர்கையில்தானே எழும் மெல்லிய புன்னகைவிரக்தியில் முடிகிறதுபண்டிகை நாட்களில் வாங்கிய துணிகள்அவளைப் போலவேஅவனுக்காகக் காத்திருக்கின்றனவிஷேசங்களுக்குச் செல்கையில்‘அவர் வரலையா?’ என்ற கேள்வியில்பூட்டி வந்த புன்னகை சிறிது சிதிலமடைகிறது‘உனக்கென்னமா, வெளிநாட்டுக் காசு’பந்தங்களின் வார்த்தைகள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 123
விஜி ராஜ்குமார் கவிதைகள்
அக்குளத்து மீன்களை எனக்குத் தெரியும்அவையும் என்னை அறியும்.ஒன்று நூறாகி பலவாகிமடிந்த பின்னும் பழையவைஏனோ மிச்சமிருக்கின்றனகோடையில் குளம் வற்றியபோதுகடைசித் துளி வரைஒரு மீன் துள்ளிக்கொண்டிருந்துபாளம் பாளமாய் இருந்த பள்ளத்திற்குள்பாதாளத்தினுள் சென்றிருக்கும் மீன்கள்அம்மாவின் கண்ணீர்த் துளிகள் போலகனவில் மின்னும். * ஒவ்வொரு புள்ளியையும்ஓராயிரம் முறையாய்அழித்து…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 123
மா.அண்ணாமலை கவிதைகள்
நிழல் தொலைத்த மரங்கள் ஆலமர விழுதூஞ்சலில் தோள் பற்றிஆவலோடு ஆட்டுவாய்தூரத்துக் காட்டு மல்லியின் வாசம்காற்றில் நிறைந்த தினமொன்றில்நம் கூடலிற்கு வெட்கிசெந்நிற மலர்களைச் சொரிந்துநம்மைப் போர்த்தியது கொன்றைபெருகிய வேர்வை போக்கஏரியில் நீராடி மேலெழுந்தபோதுவண்ணத்துப்பூச்சியின் சாயலில்புன்னை மலரொன்றைசூட்டி உறுதியளித்தாய்!விழித்தெழுந்த ஒருநாள்எனக்கான வர்க்கத்தின் அந்தியில்நமக்கான மேற்கைக்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 123
செளமியா ஸ்ரீ கவிதைகள்
ீ உணர மறுக்கும் என்னையும்நான் ஏற்க மறுக்கும் உன்னையும்வைத்துக்கொண்டுஎப்படி உண்ணுவோம்காதலெனும் பெருங்கனியை. * நிராகரிப்பின் நீர் கமலங்கள் அன்றுகண்ணில் பட்ட பொழுதுஎங்கோயிருந்து ஒடிந்து வந்தசின்னக் கொடிசிரமப்பட்டு சீரழிந்துஎன் தோட்டத்து மண்ணைஇறுக்கமாய்ப் பிடித்துக்கொண்டுஅன்பின் அணிமழையைநிராகரித்து நின்று கொண்டிருந்தது இன்றுஎன் தோட்டத்துக் காற்றில்மணமில்லா துகள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 123
ஒளியன் கவிதைகள்
விடியலுக்குமிக அருகில்தான்ஓர் இரவும் இருந்தது. * வெறுமையைத் துழாவித் துழாவிஓர் உருவம் சமைத்தேன்அது அருவமாய் உருவாகிவெறுமையினும் வெறுமையாய்என்னை வாட்டுகிறது. * நீரைத்தேக்கித் தேக்கிசிறு பள்ளம்குளமாக முயற்சிக்கிறதுகுளமோபள்ளங்களில் தேங்கிபந்தாடும் மைதானமாகிறது. * பிய்ந்து போன செருப்புகளைத்தூக்கி எறியாதிருதைத்து தைத்தாவதுவாழட்டும்செருப்பும்செருப்பு தைப்பவரும். * சரசரவெனப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 123
இளையவன் சிவா கவிதைகள்
அழகுச் சிற்பங்களின் நடுவில்கோரமுகம் காட்டும் சிற்பத்தைதிருஷ்டிப்பொட்டைப் போலவீசிவிட்டுப் போனசிற்பியின் மனநிலையில்என்னை வைத்திருக்கிறதுநமது இறுதிச் சந்திப்பு உன் இதயக் கிடங்கில்நினைவூட்ட வரும்வறட்சியின் எல்லையில்நமது சந்திப்புகள் நிகழ்த்தியஅத்தனை தரிசனங்களையும்புறம் தள்ளிவிட்டுநகர்ந்து விட முடிகிறது உன்னால் எனக்குள்ளேயோஇன்னும் சுடர் விரிந்துதடாகத்தில் பூத்திட்ட கமலத்தின்ஒளியாகவேகாட்சி தருகிறது உனதழகு.…
மேலும் வாசிக்க