இணைய இதழ் 126
August 29, 2026
போர், அமைதி & சந்தை நூல் அறிமுகம் – ஹரிகிருஷ்ணன் வானமாமலை
கார்ப்பரேட் குருஷேத்திரத்தின் ஒரு கூர்மையான பார்வை 2025 கோவை புத்தகத் திருவிழாவில் யாவரும் பப்ளிஷர்ஸ் ஜீவ கரிகாலனிடம், “ஏதாவது துறை சார்ந்த புத்தகங்கள் இருந்தா சொல்லுங்க, அதை வாசிக்கணும்” என்று கூறினேன். அப்பொழுது அவர் பரிந்துரைத்த புத்தகம்தான், ‘போர் அமைதி & சந்தை’. எப்பொழுதும் கிராமியக் கதைகள், ஒரு குடும்பத்தை பற்றிய கதை, ஒரு தனி மனிதனின் வாழ்க்கைப் பயணம் அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கதை என்று படித்துச் சலித்த எனக்குப் பெருநிறுவனத்தைப் பற்றிய கதை என்றதும் ஓர் ஆர்வம் வந்தது. அப்படித்தான் இந்தப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். மணி ராமலிங்கம் எழுதிய, ‘போர் அமைதி & சந்தை’ என்ற நாவல், 90களில் இந்தியப் பொருளாதாரத் தாராளமயமாக்கல் மற்றும் கணினிப் புரட்சியின் பின்னணியில் மும்பை மாநகரத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஓர் அழுத்தமான படைப்பாகும். இந்நூல் வெறும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் வீழ்ச்சியையும் எழுச்சியையும் மட்டும் பேசாமல், அந்தச் சந்தை அமைப்பிற்குள் சிக்கித் தவிக்கும் மனிதர்களின் அகப் போராட்டங்களையும், வடுக்களையும், உளவியல் ரீதியான மாற்றங்களையும் மிக நுட்பமாக விவரிக்கிறது. 1960களில் தொழிற்சங்கப் போராட்டங்களால் ஏற்பட்ட ‘லாக் அவுட்’ சூழலையும், 90களில் மூளையை மூலதனமாகக் கொண்டு உருவான புதிய தொழில் சந்தையின் ‘லாக் அவுட்’ சூழலையும் ஒப்பிட்டு, ‘இடம்தான் வேறே ஒழிய அதே குருஷேத்திரம்தான்’ என்ற தத்துவார்த்தப் புரிதலுடன் நாவலை ஆசிரியர் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். நாவலின் மிக முக்கியமான பலம் அதன் பின்னணியாக விளங்கும் பம்பாய் (மும்பை) மாநகரமாகும். விக்டோரியா டெர்மினஸ் (வீ டி) ரயில் நிலையம், உதிரும் காய்கறிகள் போலப் பிளாட்பாரத்தில் இறங்கும் மனிதர்கள், மீன் வாசம், மனித வியர்வை மற்றும் பொதுக் கழிப்பறையின் நெடி என பம்பாயின் அசல் முகத்தை ஆசிரியர் வாசகர்களின் நாசிக்குக் கடத்துகிறார். குறிப்பாக, டி.என். ரோடு (DN Road) பிளாட்பாரக் கடைகள், அங்கு விற்கப்படும் செண்டுகள், புத்தகங்கள் மற்றும் உலகத்தின் அத்தனை உணவுகளும் கிடைக்கும் தெருவோர உணவகங்கள் என அந்த மாநகரத்தின் பரபரப்பான நுகர்வோர் கலாச்சாரம் மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதால் நாவலின் ஆரம்பம் முதல் முடிவு வரை பம்பாயின் கூட்ட நெரிசலில் மூச்சு விட முடியாமல் சிக்கிக் கொண்டுள்ள ஓர் உணர்வை வாசிப்பவருக்கு எழுத்தாளர் மிகச் சுலபமாகக் கடத்துகிறார். இந்தத் துடிப்பான நகரத்தில் இயங்கி வரும் அனந்தராமனின் மென்பொருள் மற்றும் விளம்பர விற்பனைத் துறை அலுவலகம்தான் கதையின் மையம். ஒரு சிறு விடுப்பு முடிந்து தமிழகத்தில் இருந்து திரும்பும் ரமணி என்ற இளைஞன், திங்கட்கிழமை காலையில் அலுவலக வாசலில் தொங்கும் பூட்டையும், கம்பெனி ‘லாக் அவுட்’ செய்யப்பட்ட அதிர்ச்சிச் செய்தியையும் எதிர்கொள்வதில் இருந்து நாவலின் முதன்மைக் கதை நகர்கிறது. ஆசிரியர் இந்த நாவலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிக ஆழமான உளவியல் பின்னணியுடன் வடிவமைத்துள்ளார். ரமணி வேக வேகமாகப் பேசும், மெல்லிய நறுமணங்களை விரும்பும் ஒரு நடுத்தர வர்க்க இளைஞன். அவனது நண்பன் சுந்தர், எதையும் நிதானமாகப் பேசும், முகபாவனைகளைக் காட்டாத ஒரு சாதுரியமான விற்பனையாளன். கம்பெனி மூடப்பட்டவுடன் ரமணி எதிர்கொள்ளும் பசியும், வேலை இழப்பு குறித்த பயமும், அவனுக்குள் ஏற்படும் இரத்த அழுத்த நோயின் தொடக்கமும் ஒரு சராசரி நடுத்தர வர்க்க இளைஞனின் பாதுகாப்பின்மையை அப்படியே பிரதிபலிக்கிறது. ஐஐஎம் (IIM) பட்டதாரியான அனந்தராமன், வெறும் எண்களை மட்டும் நிறுவனமாகக் கருதாமல், மனிதர்களின் கனவுகளுக்கு மதிப்புக் கொடுக்கும் ஒரு லட்சியவாதத் தொழில்முனைவோர். தனது மென்பொருள் நிறுவனத்தை உருவாக்க அவர் மேற்கொண்ட போராட்டங்களும், அவரது வழிகாட்டியான ஜம்னலால் கூறிய ‘வியாபாரம் என்பது மாபெரும் மனப்போர்’ என்ற தத்துவமும் அவரது கதாபாத்திரத்திற்குப் பெருமை சேர்க்கின்றன. ஜம்னலாலும் அனந்தராமனும் பேசிக் கொள்ளும் இடம் வாசிக்கும் நமக்கு மிகப்பெரிய உந்துதலைக் கொடுக்கும். விஷ்ணு சேனா அரசியல்வாதி ரானேவின் துப்பாக்கி மிரட்டலுக்குப் பணிய மறுத்து, நிறுவனத்தையே தற்காலிகமாக மூடத் துணியும் துணிச்சல் மிக்கவராக அவர் காட்டப்படுகிறார். விளம்பரத் துறையின் தலைவியான ரூபி, அடங்காப் பெண்மையும் ஆளுமையும் நிறைந்த ஒரு நவீனக் கதாபாத்திரம். தன்னுடைய தேவைகளையும் வாழ்க்கையையும் தானே தீர்மானிக்கும் அவளது போக்கு, கார்ப்பரேட் உலகில் அவள் தன் இடத்தை எவ்வாறு தக்க வைத்துக் கொள்கிறாள் என்பதைக் காட்டுகிறது. அனந்தராமனுடனான அவளது நெருக்கமான உறவும், நிறுவனத்தின் ரகசியச் செயல்பாடுகளும் கதையின் சுவாரசியத்தைக் கூட்டுகின்றன. மென்பொருள் பிரிவின் தலைவனான கார்த்திக்கும், அவனுடன் பணிபுரியும் சித்ராவும் நாவலின் மற்றொரு முக்கியப் பரிமாணம். கார்த்திக்கின் அர்ப்பணிப்பும், நிறுவனத்தின் மீதான அவனது ராஜவிசுவாசமும் லாக் அவுட் காலத்திலும் ரகசியமாக ஹோட்டல் அறைகளில் இருந்து நிறுவனத்தை இயக்க உதவுகிறது. சித்ரா அவனோடு நெருக்கமாக இருந்தாலும், ‘லாக் அவுட் முடிவதற்குள் எனக்கு அமெரிக்கப் பையனுடன் கல்யாணம் ஆகிவிடும்’ என்று எதார்த்தத்தைப் பேசும் தற்காலப் பெண்ணாக விளங்குகிறாள். கணக்காளரான சுப்பிரமணியன் என்கிற சுப்பு சார், தீபா பாரில் அமர்ந்து கொண்டு சமூக நீதியைப் பற்றியும், தனது கடந்த கால ஜாதி வடுக்களைப் பற்றியும், கார்ப்பரேட் அரசியலைப் பற்றியும், வேலை இழப்பு பயம் பற்றியும் பேசும் ஒரு விரக்தியடைந்த கதாபாத்திரம். அவருடைய புலம்பல்கள் மூலமாக நடுத்தர வயது மனிதர்களின் வேலைவாய்ப்புப் பயமும், எதிர்காலக் கவலையும் வெளிப்படுகின்றன. …
இணைய இதழ் 126
August 27, 2026
விஜி ராஜ்குமார் கவிதை
மெய்வம் நிகரில்லா மெய் ஒன்றுநிகழும் பொழுதுகளில்அறிதலில் உள்ளது அனைத்தும்.நிகழும் அனைத்திலும்நிகழ்ந்து கொண்டிருக்கும்தெய்வம் வேறு.இரண்டிற்கும்உள்ள தொலைவில்நடுவே அலையாடும்பாழ்மனத்தின் கூவல்கள்கேட்கும் நதி தீரங்கள்வழிந்தோடும் தெய்வங்களா?இல்லை…சுழித்தோடும் பாம்புகளா?வார்த்தைக்கூட்டின்விநோதக் கூச்சல்களில்நிர்பந்திக்கப்படுகின்றனஅனைத்தும். நதிதீரங்களே!மனிதர்களில்விநோதர்கள்கலந்திருக்கிறார்கள்அல்லதுவிநோதரில் சிற்சிலநேரங்களில்மனிதர்கள்.நீரும்…
இணைய இதழ்
August 27, 2026
மு.ஆறுமுகவிக்னேஷ் கவிதைகள்
கிருஷ்ண பட்சம் இட்லியுடன் பாலைவிரும்பி உண்ணும்அப்பத்தா‘ஜெலுசில்லைத்’ தவிரவேறு மருந்து மாத்திரையைகடைசி காலம் வரைஉண்டதில்லை அப்பத்தா ஒரு‘டொரினோ’ பிரியைஅவள் தினந்தோறும்ஒரு கிங் சைஸ் (300 ml)டொரினோ குடிப்பது வழக்கம்…
இணைய இதழ் 126
August 27, 2026
ரேகா வசந்த் கவிதைகள்
மனம் அடர்பனி இரவில்இளவெயிலைகனவு காண்கிற மனதுசுட்டெரிக்கும் கோடையில்மழை வேண்டுமெனயாசிக்கிறது “இருப்பதில் திருப்தி கொள்” என்றுதனக்குத்தானேஅறிவுரை கூறிக்கொள்ளும் மனது அடுத்த நொடியே“அடுத்து என்ன வாங்கலாம்?” எனதிட்டமிடத் தொடங்குகிறது எதையும்சிந்திக்காமல்…
இணைய இதழ் 126
August 27, 2026
கே.பி தோழர்! – ராம் சங்கர்
“ஹலோ… பஷீர் எங்க இருக்க?” “ரூம்லதான் இருக்கேன்…” “இன்னைக்கு சாயங்காலம் ஃப்ரீயா?” “ஆமா… எங்க வரணும்!” “கொஞ்சம் தூரமா போகணும்போல இருக்கு!” “எங்க போகணும்?” “அட்டப்பாடி சத்-தர்ஷன் போலாமா? திங்கள்கிழமை திரும்பி வந்துடலாம்!” “சரி…” பஷீரும் சம்யுக்தாவும் சென்னையிலேயே இருந்தாலும், சந்திப்பு எப்பையாவதுதான் நிகழும். அதுவும் சம்யுக்தா ஏதோ ஒரு மனக்கொந்தளிப்பில் மட்டுமே பஷீருக்கு ஃபோன் செய்வது வழக்கம். சம்யுக்தா இடதுசாரிக் கொள்கையின்மீது தீவிரமான பற்றுகொண்டவள்.…
இணைய இதழ் 126
August 26, 2026
மாரி.கிருஷ்ணமூர்த்தி கவிதைகள்
தூரம் பரந்த கூரைக்கடியில்நட்சத்திரங்கள் மின்னும்இருளில் இருந்துவிளக்கெரியும் அவள் வீட்டைபார்த்துக் கொண்டிருக்கிறேன் இதே வீட்டை இதே மாதிரிஒரு இரவில் பார்த்தபோதுஅவ்வீட்டில் என் காதலிஇருந்தாள்அவள் கனவில் நானும்என் கனவில் அவளுமாகஇருந்த…
இணைய இதழ் 126
August 26, 2026
செளமியா ஸ்ரீ கவிதைகள்
வார்த்தையைப் பிடித்துஉயிராடும் கவிதையைப் போலநானும் உயிராடுகிறேன்உனது நினைவுகளால் மறத்தல் நியதிதன்னையே மறந்துமாமருந்தானதுஅதுதான் காதலானது! * தனிமையின் கோல் எடுத்துஉலகத்தை வரையசுயம் இனிக்கிறது. எனினும்உடன் உன்னைக் கேட்கிறது இதயம்விரல்கள்…
இணைய இதழ் 126
August 26, 2026
ஜனநாயகன் பிம்பச்சிறை 2.0 – ர. முகமது இல்யாஸ் ; நூல் அறிமுகம்: பீட்டர் துரைராஜ்
நடிகர் விஜய், அரசியல்வாதியாகி இருக்கிறார். தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற திரைநட்சத்திரங்கள் முதலமைச்சர்களாக அதிகாரத்திற்கு வந்துள்ளனர். விஜயும் முதலமைச்சர் ஆசையில் இருக்கிறார். கரூரில், கடந்த செப்டம்பரில் ஏழு குழந்தைகள் உட்பட 41 பேர், அவரைக் காண வந்த நெரிசலில் மரித்துப் போனார்கள். விஜயைச் சுற்றி எத்தகைய பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது, அதன் அரசியல் என்ன என்று இந்த நூலில் விவாதிக்கிறார் திரை ஆய்வாளரான ர. முகமது இல்யாஸ். விகடனில் பத்திரிகையாளராக இருந்த ர.முகமது இல்யாஸ் ஓர் ஆய்வு மாணவர். பெயரை மாற்றி கட்டுரை எழுத மறுத்து குரல் எழுப்பியவர். அவர் எழுதிய ‘ஜனநாயகன் பிம்பச்சிறை 2.0’ என்ற நூல் புத்தகக் கண்காட்சியின் போது வெளிவந்துள்ளது. உடனே வாசித்தும் விட்டேன். சுவாரசியமாக உள்ளது. உணர்ச்சி கடந்து, அறிவுத்தளத்தில் விவாதிக்க வேண்டிய பல புள்ளிகளை இந்த நூல் காட்டுகிறது. மறைந்த ஆய்வாளரான எம்.எஸ்.எஸ்.பாண்டியன், ‘ பிம்பச்சிறை எம்.ஜி.ஆர். திரையிலும், அரசியலிலும்’ என்ற நூலை எழுதியிருக்கிறார். அதன் தாக்கத்தில், இந்த நூலுக்கான பெயர் வைக்கப்பட்டுள்ளது. திரை நட்சத்திரங்களோடு, தொடர்புள்ள பல சம்பவங்களுக்குத் தத்துவ விளக்கம் கொடுக்கிறார் இல்யாஸ். நமக்கு வரும் செய்திகளை ஒரு குடிமகனாக எப்படிப் பார்க்க வேண்டும் என்று குறிப்புகளைத் தருகிறார். புகழ்பெற்ற ஒருவரின் நடவடிக்கைகளில் மறைபொருளாக இருக்கும் செய்திகளை நமது கவனத்திற்குக் கொண்டுவருகிறார். விஜய் நடித்த படங்கள், ரஜினி, அமிதாப், ஜெயலலிதா, விஜயகாந்த் போன்ற நட்சத்திரங்கள் ஊடாக தன்னுடைய வாதங்களை நம் முன் வைக்கிறார். இந்த நூல் விஜயை நடிகராகவும் அரசியல்வாதியாகவும் ஊடகப் பிரதியாகவும் அணுகுகிறது. ‘எம்ஜி.ஆரின் ஆட்சிக்காலம் ஓர் இருண்டகாலம்’ என்பதை நினைவுபடுத்தும் இந்த நூல், விஜயிடமும் இத்தகைய கூறுகள் உள்ளன என்று சொல்லுகிறது. ‘விஜயிடம் எந்த விவகாரம் குறித்தும் தெளிவாக வெளிப்படாத நிலைப்பாடுகளின் வழியாக, தொண்டர்கள் அவர்மீதான கற்பனையைத் தங்கள் உணர்ச்சியின் வழியாக தாங்களே கட்டமைத்துக்கொள்கின்றனர்’, என்கிறார். ‘குடிமக்களின் இறையாண்மை மக்களின் கனவாகவே இருந்துவிட்ட நிலையில், மொழி, அடையாளம், அதிகாரம் முதலானவற்றின் ஊடாக தென்னிந்தியாவில் நடிகர்கள் அரசியலுக்கு வருவதும், அதில் வெற்றிபெறுவதும் இயல்பானது’ என்று திரை ஆய்வாளர் மாதவ பிரசாத் சொல்வதைச் சுட்டிக்காட்டுகிறார். நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த விஜயை, சென்னை வரவழைத்து 24 மணிநேரம் வருமானவரித்துறை விசாரணை நடத்தியபிறகு, அவர் வெளியிட்ட செல்ஃபி அந்த ஆண்டில் ட்விட்டரில் அதிகமாகப் பகிரப்பட்ட படமாகும். எனவே விஜயைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. ஊழலை எதிர்ப்பதைத் தவிர அரசியல் நிலைப்பாடுகள் என்று ஒன்றில்லை என்பதை ரஜினியின் திரைப்படங்கள் முன்வைத்தன. வெகுமக்களிடம் ரஜினியின் இந்து தேசிய ஆதரவு செல்லுபடியாகவில்லை. திராவிட அரசியலை ‘அம்மா’ என்ற உருவகத்தால் நீர்த்துப்போகச் செய்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னரும் அவரைப்பற்றி வெகுமக்களிடம் உருவாகியுள்ள ‘அனுதாபமான’ பிம்பத்தை விமர்சனம் செய்யாமல் திமுக இருக்கிறது என்கிறார் இல்யாஸ். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ரஜினி போன்றோர் பயணித்தவாறே விஜயின் பயணமும் உள்ளது என்கிறார் ஆசிரியர். விஜயின் பிம்பம் கட்டமைக்கப்பட்ட ஒன்று. ‘பாதுகாவலன், சகோதரன், தலைவன்’ முதலான பிம்பங்கள் ஒரே நாளில் உருவானவை அல்ல. இந்திப்படங்களில் கோபக்கார இளைஞனாக ‘விஜய்’ என்ற பாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்திருந்தார். இந்தப் பெயரையே, அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் அவருக்குச் சூட்டியிருக்கக்கூடும். நடிகர் விஜயகாந்தின் படங்களில் அவரது தம்பியாக, சிறுவயது விஜயகாந்தாக நடித்தார். ஊடகங்கள் செய்தியைத் தருவதைத் தாண்டி, அவற்றை உருவாக்கவும் செய்கின்றன.டேனியல் டயான் சொல்லும் News Event என்பதை, கரூர் சம்பவங்களைக் கொண்டு விவரிக்கிறார். 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு விஜய் பொதுவெளியில் தலைகாட்டுவதைக் குறைத்துக்கொண்டார். டிஜிட்டல் வெளியில் இருந்து விலக்கிக் கொண்டார். அவரைப் பார்க்க வேண்டும் என்றால் அவருடைய திரைப்படங்களைப் பார்க்க வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டது. இல்யாஸ் விஜயை, அனுதாபத்தோடு பார்க்கிறார். ‘தமிழ்ச் சமூகத்தின் கடந்த காலப் பெருமிதம், சமகால நெருக்கடி, எதிர்காலக் கனவு, பதற்றம் முதலானவற்றை வெளிப்படுத்தும் தொன்மமாக விஜய் இயங்குகிறார்’ என்கிறார் ஆசிரியர். ‘வெகுமக்களின் அன்றாடப் பிரச்சனைகளைப் பொறுப்போடு உரையாடத் தொடங்க வேண்டும். தானம் செய்வது அரசியல் செயல்பாடு அல்ல என்பதைத் தொண்டர்களுக்கு உணர்த்த வேண்டும்’ என்கிறார். இந்த நூலை ‘சீர்மைப் பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. 180 பக்கம். விலை ரூ. 240. ஆழமான அணிந்துரையும் உள்ளது.…
இணைய இதழ் 126
August 26, 2026
லோக் நாயக்’ ஜெயபிரகாஷ் நாராயண் – ஆர் பட்டாபிராமன்; நூலறிமுகம்: அக்களூர் இரவி
ஜெயபிரகாஷ் நாராயண் குறித்த முழுமையான வாழ்க்கை வரலாற்று நூல் தமிழில் ஒன்றிரண்டுதான். இல்லை எனவும் கூறலாம். தமிழறிஞர், காந்தியவாதி தமிழருவி மணியன் ‘மனிதப் புனிதர் ஜெயபிரகாஷ் நாராயண்’…
இணைய இதழ் 126
August 26, 2026
அதிதி – மா. அண்ணாமலை
அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். முகச் சவரம் செய்து ஒரு வாரமாகிவிட்டது. பேருந்திலிருந்து இறங்கி வழக்கமாக முகச்சவரம் செய்யும் குமார் சலூன் கடைக்குச் சென்றேன். கடையின்…




















