இணைய இதழ் 112சிறுகதைகள்

ஆர் யூ எ வெர்ஜின்? – கே.ரவிஷங்கர்

சிறுகதை | வாசகசாலை

‘என்ன பாட தோன்றும் ……. என்ன பாட தோன்றும்…’ பாட்டின் கடைசி வரிகளை சுவாசிகா கணேஷ் கொஞ்சமாக சோகம் கலந்த காதல் வாஞ்சைக் குரலில் முடிக்க அடுத்த தருணம் சின்ன ஒளிவட்டம் அவள் மேல் அடிக்க, கவர்ச்சியும் அழகும் கொஞ்சிய பளபள உடையில் மேடையின் ஓரத்திற்கு ஸ்டைலாக நடந்து வர, கூடவே ஒளி வட்டமும் தொடர்ந்து வர நின்றாள். நடையைத் தொடர்ந்த பின்னணி இசையும் மெல்ல மெல்ல கரைந்து அமைதியில் உறைந்தது மேடை. அதன் ஓரத்தில் நடனமாடிய யுவதிகளும் யுவன்களும் நடனத்தை நிறுத்தி சிலையானார்கள்.

மேடையில் ஒளிவட்டம் தொலைதூர கிரகம் போல் காட்சி அளித்தது.

அரங்கத்தில் கூடி இருந்த ஆயிரக்கணக்கான வெளி நாடு வாழ் என்ஆர்ஐ தமிழ் வம்சாவளி இசைப்பிரியர்கள் ஒன்றும் புரியாமல் விழித்து அமைதியானார்கள். அடுத்த வினாடிக்கு சஸ்பென்ஸோடு காத்திருந்தார்கள். சுவாசிகா முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த அந்த அயல் நாட்டு பிரபல தொழிலதிபர் இளைஞனைப் புன்னகைத்தப்படி பார்த்து ஆள் காட்டி விரல் சுட்டி  ’உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்’ மீண்டும் பாட்டின் முதல் வரிகளைப் பாட வருடியபடி பின்னணி இசையும் தொடர உறைந்திருந்த யுவதிகளும் யுவன்களும் நடனத்தைத் தொடர கைத்தட்டலில் அரங்கம் அதிர்ந்தது.  

இளைஞன் எழுந்து நின்று, ‘நோ…. நோ… யூ ஆர் கிரேசி’ உரக்க சிரிப்புடன் கத்திவிட்டு வெட்கமாகிக் கோட்டை சரி செய்தபடி சிரித்துக் கொண்டே தலைகுனிந்து உட்கார்ந்து ’ஐ லைக் அண்ட் லவ் இட். ஐ ஆம் ஹானர்டு’ மனதில் குறுகுறுத்துக் கொண்டான்.

அரங்கம் அதிர இன்னொரு முக்கிய காரணம் சுவாசிகாவின் தனித்துவமான குரலில் பாடும் திறமை மற்றும் குரல் வளம். இதன் பொருட்டே சுவாசிகா கணேஷின் குரலை உலகம் முழுவதும் பரவி இருக்கும் தமிழர்கள் காதலித்தார்கள். இதில் காதலித்துப் பைத்தியமானவன் அந்த என்ஆர்ஐ இளைஞன் வெற்றிவேல் ஞானசேகரன். இவளின் மெல்லிசைக் கச்சேரியை அந்த ஐரோப்பாவை ஒட்டிய பெரிய  நாட்டில் நிறைய செலவு செய்து ஏற்பாடு செய்தவன். வேறு நாடுகளுக்கும் சிபாரிசு செய்தவன்.

இப்படியாக மெல்லிசைக் குழுவின் பாடகர்கள் பல பாடல்கள் பாடி அந்த அயல் நாட்டில் கச்சேரி இனிதே முடிந்த நேரம் இரவு 12.30. சுவாசிகா பாடிய பாடல்கள் இன்று வழக்கத்தை விட அதிகம். வழக்கத்தை விட கூடுதலாகப் புல்லரித்துப் போனான் வெற்றிவேல்.

இரவு அந்த ஊர் சொர்க்கபுரியாகக் காட்சியளித்தது. இவ்வளவு பெரிய ஊரா? கார் கண்ணாடி வழியாக வாய் பிளந்துப் பார்த்துக் கொண்டே சென்றாள். தங்கி இருந்த சன்ரேஃபர்ன் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு வந்தாள். சுவாசிகாவிற்கு தனி சூப்பர் டீலக்ஸ் பிரிவிலேஜ் அறை. தினமும் இதற்காக ஒரு முறை ஆச்சர்யப்படுவாள்.

மறுநாள் மணி காலை இரண்டு மணி. சொர்க்கம் அருகில் இருந்தும் தூக்கம் வராமல் புரண்டாள். இனிமேல் வராது என்று தெரிந்து வர்ஷ்னாவின் அறைக்கு வந்தாள் சுவாசிகா. அவள் லேட்டாகத்தான் தூங்குவாள். பல மொழி சக பாடகி மற்றும் சுவாசிகாவின் நெருங்கிய பல வருடத் தோழி வர்ஷ்னா. அவளுக்கு சாதா டீலக்ஸ் அறை. இதுவும் ஆச்சர்யம் அளிக்கும் சுவாசிகாவிற்கு.

”Buddy ஆசம். ஆர்கெஸ்ட்ராவோட செட் அப் செஞ்சு புல்லரிக்க விட்ட அவன. ****”ஆங்கில ஸ்லாங் கெட்ட வார்த்தையுடன் சுவாசிகாவை வரவேற்று இறுக அணைத்து,

“யார்றீ அவன்? செம்மயா உசுப்பேத்திட்டு வந்துட்ட”அணைப்பிலிருந்து அவளை விடுத்து முகத்தை உற்றுப் பார்த்தாள்.

“நீ அப்ப இல்ல. தமிழ் என்ஆர்ஐ ஆர்ட்ஸ் செண்டர் ஆர்கனைசர் அவன எனக்கு அறிமுகப்படுத்தினாரு. ஸ்மார்ட்டா இருந்தான். பெரிய பணக்காரப் புள்ளி. ஆர்ட்ஸ் செண்டர்ல முக்கியமான ஆளு. ஹாண்ட்ஷேக் பண்ணும் போது உடம்பெல்லாம் விர்ரென்னு ஆயிடிச்சு. மணிக்கட்டெல்லாம் முடியோட ஹீ இஸ் சோ மேன்லி. டிபிகல் டமிலியன்”சொல்லிவிட்டு ‘ம்’ என்று அலுத்துக் கொண்டாள்.

”என்னடி ஹிம்மர. லவ்ஸ்ஸா?“

“அன்னிக்கு அரை மணி நேரம் க்ரெஷ் இருந்து. அரைமணி நேரத்துல புஸ். அப்பறம் லவ்ஸ்ஸா? தொடர்பு எல்லையிலே இல்ல. அதெல்லாம் நேச்சுரலா உணரனும். என்னோட வழி தனி வழி. மேல அவன் கல்யாணம் ஆனவனாம். 20 வயசு பையன் மாதிரி இருக்கான். இதில இவனுக்கு ரெண்டு கொழந்தைகள் இருக்காம்”சொல்லிவிட்டு மறுபடியும்”ம்”என்றாள்.

“ஓ ஷிட். நானும் அவன பேச்சிலர்னு நெனச்சேன்? வெரி மேன்லி கய்”

“எனக்கெல்லாம் இது மாதிரி எல்லாம் எப்ப அமைஞ்சு, எப்ப செட்டாகி, எப்ப கல்யாணம் ஆகி, எப்ப சுகத்த அனுபவிச்சு கொழந்தப் பெத்து…..? கச்சேரிக்கு கச்சேரி காதலுக்கு காமத்துக்கு ஏங்கற பாட்ட பாடி கற்பனைல மிதக்கறேன். கச்சேரி முடிஞ்சு வரும்போதெல்லாம் ஏக்கமாக இருக்கும். ரியல்ல சுத்தம்”

“ஏய்,  ஸ்டில் யூ ஆர் எ வெர்ஜின்?”

“இது அஞ்சாவது தடவ. டீ சாப்டயாங்கற மாதிரி நீயெல்லாம் சகஜமாக கேட்கலாம். இங்க கணவனே கண்கண்ட தெய்வம் இன்னும் பேலன்ஸ் இருக்கு. நீயெல்லாம் வடக்குல வளர்ந்தவ. வர்ஷ்னாஜி லடுக்கி. நீ பொறக்கும் போது கூடவே பாய் பிரெண்டும் பொறந்துடுவாங்க. நானும் அங்க பொறந்து தொலைச்சிருக்கலாம்”

“சவுத்ல இப்ப கண்கண்ட தெய்வம்லாம் லேட்டாகும். பாய் பிரெண்ட் ஒருத்தன வச்சுக்கோ”

”சரிடி. பாய் பிரெண்ட் வச்சுகறத பத்தி அப்பறம் பேசலாம். உள்ள வரும் போது தோனி ஸ்டெம்பிங் ஸ்பீட்ல பார்த்துட்டேன். பிட்டு ஓட்ற”

“பிட்டுன்னு கேவலப்படுத்தாத. இட் இஸ் பெர்ஃபெக்ட்  போர்ன். எக்ஸ்ட்ரா பக்ஸ் கொடுத்து மூணு நாளைக்கு சப்ஸ்கிரைப் பண்ணி இருக்கேன். ஒரு வாரம் இங்கதான் தங்கப் போறதால” பெரிய சைஸ் பாட்டிலின் பியரை ஒரே முடக்கில் குடித்துவிட்டு காலி செய்து மெலிதாக ஏப்பம் விட்டாள் வர்ஷ்னா.

“இந்த மாசம் முழுக்க நிக்காத ஓரே ஓட்டம். இப்படித்தான் ரிலாக்ஸ் பண்ணிக்க வேண்டி இருக்கு. உன்ன மாதிரி போத்திட்டு தூங்கறது பிடிக்கல சுவாசிகா. பாய் பிரெண்ட் இப்ப வர முடியாது. டிரை வீக்”

”ஹிம்…. பாய் பிரண்டா.. வெறுப்பேத்தாத”

“அவனுங்கள பார்த்தியா?”

“யாரு வர்ஷ்?”

”கிடாரிஸ்டு ஜென்னி, தபலா குணா, கீ ஜெகதீஷ் இன்னும் ரெண்டு பேர் தெரியாத தடியன்க. கச்சேரி எப்படா முடியும்னு குஜால் பண்ண மஸாஜ் பார்லருக்கு ஓடிட்டானுங்க. அதுல ரெண்டு பேரு பேரன் பேத்தி எடுத்தவனுங்க. டெயிலி நடக்குது”

“பேரன் பேத்தி எடுத்திட்ட மறுபடியும் பேச்சிலர் ஸ்டேட்டஸ்தான்.” சுவாசிகா வெட்கப்பட்டு சிரித்தாள்.

”இன்னொரு மேட்டர் பேஸ் கிடார் வாசன் நேத்து கச்சேரில ஆப்செண்ட். ரீசன்.. ஓவர் குடில மட்டையாட்டனாம்”

“ஓ காட்”

“ஃபாரின் வந்தாலே இவனுங்களுக்கு ‘……………’”

“அவங்கள விடு வர்ஷ். நோ லவ் ஆர் ரொமான்ஸ் இன் திஸ். எப்படி இந்த பிட்ட சாரி போர்ன்ன பார்க்கற. ப்ளீஸ் ஸ்டாப். ஐ பீல் சிக்”

“ ஆமாண்டி கொஞ்ச நேரத்துல வெறுத்துடும். more the supply less the demand பார்முலாதான். சாஃப்ட் கோர் வேணுமா? அதுல ரொமான்ஸ் லவ் எல்லாம் இருக்கும்”

“எந்த கோரும் வேணாம். ரியல் ரியல்தான். அதில் எமோஷன் ஆத்மா இருக்கும். இன்னொசென்ஸ் இருக்கும்”

“அப்ப ரியல் ரொமான்ஸ் பாய் வேணுமா. அழகான பசங்களோட லவ்ஸ்ஸோட டச்சிங் டச்சிங் பண்ணிகிட்டே டான்ஸ் ஆடலாம். குடிக்கலாம்.. எத வேணா சாப்பிடலாம்.  கொஞ்சம் காஸ்ட்லி. மீட்டர் எகிரும். லட்சம் ஆகும். பணக்கார ராயல் கிளப். அப்பறம் முக்கியமான விஷயம்….. தனி” வர்ஷ்னா வாயை மூடி புன்னகைத்தாள்

”தனி?”

“தனி ரூம்லயும் போய் உரசிக்கிட்டே டான்ஸ் ஆடலாம். நம்ம ஊர் நியூ இயர் டான்ஸ் இல்ல. நெக்ஸ்ட் மூவ் உன்னோட சாமர்த்தியம்”

“ஹாரிபிள்….மேல் பிராஸ்டீடியுஷன்?”

“நோ நோ ஜஸ்ட் ரொமான்ஸ்”

“ஓ வர்ஷ்னா.. லெட் மி டான்ஸ் யார். ஏற்பாடு பண்ணு. எவ்வளவு செலவானலும் பரவாயில்ல. லெட் மி லவ் அண்ட் ரிலாக்ஸ். டான்ஸிங்க்கு சிங்கிங் நல்ல கெமிஸ்ட்ரி. மனசுகுள்ள நம்ம பாட்ட பாடிட வேண்டியதான்”

“யூ ஆர் க்யூட் சுவாசி. டன் டியர் வித் பிரைவேட் ரூம்”

சுவாசிகாவை கன்னத்தில் முத்தமிட்டுக் கட்டிக் கொண்டாள். குருட்டாம் போக்கில் சொல்லி விட்டதாக உணர்ந்தாள். எப்படி ஏற்பாடு செய்வது? வர்ஷ்னாவிற்குக் கவலை அரிக்க ஆரம்பித்தது. இதைக் கேள்விப்பட்டு இருக்கிறாளே தவிர இதுவரை அங்கு போனதில்லை. யாரை அணுகுவது?

எல்லாம் முடிந்து நான்காவது நாள். வர்ஷ்னா தூங்கி எழுந்து மணி பார்த்தாள். மாலை 3.00. செல்லில் சுவாசிகாவின் 15 மிஸ்டு கால்கள். ’ஓ காட்!’. முணுமுணுத்து விட்டு எழுந்து போட்டது போட்டபடி ஆர்வத்துடன் விடுவிடுவென சுவாசிகா ரூமிற்குப் போனாள்.

சுவாசிகா கட்டிலில் உட்கார்ந்திருந்தாள். ஆனால், முகத்தில் சோகம் அப்பி இருந்தது. வர்ஷ்னா குழப்பமானாள்.

“ஏய் சுவாசிகா….! என்ன ஆச்சு? கிளப் எப்படி? நாட் என்ஜாய்டு? சம்திங் ராங்?”

சவக்களைத் தட்டி இருந்த வர்ஷ்னாவை பார்த்தாள்.

”ஆல் ஃபேக் செக்ஸ் ஸ்டார்வ்டு கய்ஸ். இனி ஜன்மத்துக்கும் மறக்க முடியாத மோசமான நாளா ஆயிடிச்சு. என்ன பாவம் பண்ணினேன்?” கண்களில் நீர் துளித்தது.

”என்னடி ஆச்சு சொல்லு” வர்ஷ்னா கவலையோடு அதிர்ந்தாள்.

சுவாசிகா அன்று நடந்ததை மெல்லிய குரலில் விவரிக்க ஆரம்பித்தாள்.

வாசிகா ரூமை விட்டு வெளி வரும் போது உடம்பு வலி இம்சைப் படுத்தியது. ஹாலில் பத்துப் பதினைந்து ஜோடிகள் எந்த கவலையும் இல்லாமல் நடனமாடிக் கொண்டிருந்தார்கள்.  மங்கிய வெளிச்சத்தில் வாட்சில் மணிப் பார்த்தாள். மணி விடிகாலை 3.00. இலக்குத் தெரியாமல் தட்டுத் தடுமாறி டான்ஸ் ஹாலைக் கடந்து வெளியே தூரத்தில் இருந்த கார் பார்க்கிங்கிற்கு வெளியே வந்தாள். நீண்ட பாதை வெறிச்சோடி இருந்தது.

“உன்னை ஒன்று கேட்பேன்…. உண்மை சொல்லு சுவாசிகா.. ஹேட் குட் டைம்?”.

திடுக்கிட்டு பார்த்தாள். பேஸ் கிடாரிஸ்ட் வாசன் ஆபாசமாக இளித்தபடி நிற்க பக்கத்தில் ஜென்னி, குணா, கீ பீட்டர்  நின்றிருந்தார்கள். கண்கள் சொருகி தள்ளாட்ட போதையில் இருந்தார்கள். பீட்டரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தான் ஜென்னி.

“ஸ்வீட் ஷாக் கைஸ்”

“எங்களுக்கும்தான் ஷாக் சுவாசி buddy. ஸ்டேஜ்லேயே பீலிங்க்ஸ் விட்டு க்ரோர்பதி ஆர்கனைசர் பையன மயக்கிட்ட. அவனும் உனக்கு ஒரு பைசா செலவு இல்லாம லட்சத்துல செலவு செஞ்சு என்ஜாய்டு யூ. வர்ஷ்னா புரோக்கர் வேல பாத்து அவன் கிட்டேந்து கமிஷன அள்ளிட்டா”

இடையில் வர்ஷ்னா அதிர்ச்சியாகி, ”வாட் நான்சென்ஸ் ஈஸ் திஸ்?”

 ”வெயிட் வெயிட்.. நா முடிச்சிடறேன்”மீண்டும் தொடர்ந்தாள் சுவாசிகா.

ஜென்னி உதிர்த்த ஆபாசமான வார்த்தைகளைக் கேட்டு சுவாசிகா அதிர்ந்தாள். கோபம் முட்டிக் கொண்டு வந்தது.

“யூ ப்ளடி பாஸ்டர்ட். உன்னோட சாக்கட வாய மூடு. என்ன நடந்ததுன்னு தெரியுமா? இது என்னோட பர்சனல் மேட்டர். செக்ஷுவல் அப்யூஸ் கமிட்டில ரிப்போர்ட் பண்ணுவேன். யூ லூஸ் யுவர் ஜாப்”

இதைக் கேட்ட குணா உக்ரமானான்.

“யார் பாத்து பாஸ்டர்ட்ன்ற? ரிப்போர்ட் பண்ணுடி. நாங்களும் பண்ணுவோம் நீ மேட்டர் பண்ணப் போன பர்சனல் மேட்டர. ரெண்டு பேர் உனக்கு. ஒருத்தன் டான்ஸ் ஆட இன்னொருத்தன் மேட்டர் பண்ண. தங்க ஸ்பெஷல் டீலக்ஸ் ரூம். ஆனா, எங்களுக்கு பி கிரேட் மஸாஜ் பார்லர் ஸ்பான்சர் செஞ்சான் என்ஆர்ஐ பையன். அங்க போனா அட்டு ஃபிகருங்க. எவ்வளவு வருஷமா கூட இருக்கோம். எங்க கைல சொல்லி இருந்தா சைலண்டா இரண்டுக்கு மூணு பேரே கம்பெனி கொடுத்திருப்போம்” குழறினான் குணா.

சுவாசிகா கோபமாக முறைத்து ஆங்கில கெட்ட வார்த்தையில் அவர்களைத் திட்ட தூரத்தில் ரோம்பாய் டாமிஜான் குரல்.

“எனி பிராப்ளம் சுவாசி? யூ நீட் ஹெல்ப்?” கேட்டுக்கொண்டே ஓடி வந்தான். கிளப் செக்யூரிட்டி ஒருவரும் அங்கு வர அவர்கள் ஓடி மறைந்தார்கள். டாமிஜான் அவளிடம் ஆதரவாகப் பேசி அணைத்து தன் காரில் அவள் ஹோட்டலில் ரூம் வரை வந்து கொண்டுவிட்டு போனான். அவனின் உதவியில் நெகிழ்ந்து நடந்த நிகழ்விலிருந்து கொஞ்சமாக வெளி வர முடிந்தது.

“வெரி வெரி சாரி டு ஹியர் சுவாசிகா. தாங்கவே முடியல. தனி மனித உரிமைன்னு சொல்லுவாங்க இல்ல. நாம இந்த மேட்டர ரிப்போர்ட் பண்ணுவோம்..”

”பண்ணலாம். இவனுங்க மெண்டல்லி ரேப்டு மீ. ஆனா, இன்னொருத்தன் லிட்டரில்லி ரேப்டு மீ. இட் இஸ் எ ஹாரர் இன் மை லைஃப்”

“ரேப்?” அதிர்ந்தாள். வர்ஷ்னாவின் உடம்பு லேசாக நடுங்கியது. எல்லாம் தன்னால் என்று குற்ற உணர்ச்சியில் குமைந்தாள். அவளைக் கட்டிக் கொண்டு மெதுவாக விசும்பினாள் சுவாசிகா. இடையில் பத்து நிமிட அமைதிக்குப் பிறகு சுவாசிகா தொடர்ந்தாள்.

“இதுதான் முதல்ல நடந்தது. அப்செட்ட இருந்ததால சொல்லல” – மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள்

அந்த ஊரிலேயே விலை அதிக விலை உயர்தர பணக்கார கிளப். ஆடிப்போனாள் சுவாசிகா. உள்ளே ஹை டெசிபல் தொம் தொம் இசையில் கலர் விளக்குகளின் ஊடே யுவதிகளும் யுவன்களும் ஜோடியாக ஆடிக் கொண்டிருந்தார்கள். இவளுக்காக காத்திருந்தான். ரொமான்ஸ் பாய் டாமி ஜான்.

வாட் ஏ ஹாண்ட்சம் அண்ட் மேன்லி கய் டாமிஜான்! உடம்பில் மேற்கும் கிழக்கும் கலந்த கலவையில் வித்தியாசமான இளைஞன்.

இவளை நட்புடன் கட்டி உள்ளங்கையில் முத்தமிட்டு ’வார்ம் வெல்கம்’ சொல்லி இடுப்பில் ரோமம் அப்பிய வலது கையால் அரவணைத்தான். அவனது ஆண்மைப் பிடியில் சுவாசிகாவின் பெண்மை உறுப்புகள் சிலிர்த்து விறைத்து உடம்பு சூடாகி கன்னங்கள் சிவந்து அவனோடு ஒட்டிக் கொண்டாள்.

உள்ளே போய் அந்த தொம் தொம் இசையில் இன்னொரு யுவதி யுவனாகி நடனம் ஆட தொடங்கினார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடிகள் மெய் மறந்து அங்கங்கள் உரச ஆடிய ஆட்டத்தில் உசுப்பேறிய மகிழ்ச்சியில் சுவாசிகா டாமியை உரசியபடி  தொம் தொம் சத்தத்தை மீறி காதில் உரக்க கூச்சலிட்டுப் புன்னகைத்தாள். யாரும் யாரையும் சட்டை செய்யாமல் ஆடிக் கொண்டிருந்தார்கள்.

“ஹேய் டாம் டியர்… இது என்னோட வாழ்க்கையில் மறக்க முடியாத இன்ப இரவு. ஒவ்வொரு துளியும் ரசிக்கிறேன். கேன் ஐ சிங் எ டமில் சாங்?”

“ஓகே ஓகே டு இட் அண்ட் ஐ காட் இட். என்ஜாய் சுவாசி. இட் இஸ் மை பிளஷர்”

‘மாலையில் யாரோ மனதோடு பேச’ பாட்டை அந்த இரைச்சலினூடே மென்மையாக முணுமுணுத்தாள். எவ்வளவு தடவை காதலோடு முகம் தெரியாத காதலனை நினைத்துப் பாடி இருக்கிறாள்.

இடையில் காம்பளிமெண்டரியாக தங்க நிறத்தில் இருந்த திரவ பாட்டில் பானம் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டது. அதை டாமியிடம் காட்டி முகத்தில் கேள்விக் குறியோடு பார்த்தாள் சுவாசிகா.

“டோண்ட் ஒர்ரி. குறைவான ஆல்கஹால்தான் கலந்திருக்கும். லைட்டா மிதக்கலாம்”

“ஓ கிரேட்” குடித்தாள்.

ஒண்ணரை மணி நேரம் நடனமும் சிறிது நேரம் ரொமாண்டிக் பேச்சுமாக முடிந்தது. வாட் எ ரிலாக்சேஷன். தெய்வமே உனக்கு நன்றி. ஓய்வு எடுத்து மீண்டும் அரை மணி நேரம் ஆடினார்கள்.

“ஒகே சுவாசிகா. என்னோட வாடகை டைம் முடிஞ்சது. நா கிளம்புகிறேன். நாங்க வேற எதுவும் எண்டர்டெயின் பண்ணக் கூடாது. இதில் முத்தமும் அடக்கம். மீறினால் வேலை போய்விடும். என்னோட சின்சியர் அட்வைஸ் பக்கத்து ரெஸ்டாரெண்டல ஃபுட் ஃப்ரீ. லைட்டா சாப்பிட்டு ரூமுக்கு கிளம்பு. டோண்ட் கெட் டெம்ப்டு. உனக்கு ஃப்ரீ ரைட் உண்டு. குட் நைட்” – அவளை இறுக அணைத்துவிட்டு கிளப்பின் மாடிக்குப் போனான். அணைப்பின் சுகம் திடுமெனக் கலைந்து அதிர்ச்சியாகி திருதிருவென முழித்தாள்.

அப்போது அருகில் ‘ஹலோ’ குரல் கேட்டு திரும்பிப் பார்த்தாள். அது என்ஆர்ஐ இளைஞன் வெற்றிவேல் ஞானசேகரன் புன்னகைத்தபடி நின்றிருந்தான். அன்று கச்சேரிக்கு போட்டிருந்த அதே உடை.

’ஹலோ’ பதிலுக்குப் புன்னகைத்தாள் சுவாசிகா.

“என்ஜாய்டு ரோம்பாய் கம்பெனி? அவன் வேல முடிஞ்சுது. வெரி நைஸ் கய். கம் ஆன்.. நாம பிரைவேட் ரூமுக்கு போகலாம் மை லவ்!” – அவளை இறுக அணைத்துத் தள்ளிக் கொண்டுப் போனான். அருவருப்பாக உணர்ந்து, ”லீவ் யுவர் ஹாண்ட்ஸ்” என கூச்சத்தில் நெளிந்தபடி அவனுடன் நடந்தாள். அவன் குடித்திருந்த பானத்தின் நெடி வயிற்றைப் புரட்டியது.

அறைக்குப் போய் கதவைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டான்.

“இன்னிக்கு மொத்தமும் என் செலவுல நீ இருக்க. நேரடியா என்கிட்ட சொல்லக் கூடாதா. ஸ்டேஜ்ல ஹிண்ட் கொடுத்த. எதுக்கு வர்ஷ்னா? அவ உனக்கு ரோம்பாய் ஏற்பாடு பண்றான்னு எங்க பாய்ஸ் மூலமா எனக்கு தகவல் வந்துடிச்சி. பாய்ஸ் நாங்கதான் பிராஞ்சைஸ்னு சொல்லி ஏற்பாடு பண்ணி பே மி லேட்டர்னு சொல்லிட்டாங்க வர்ஷ்னாக்கிட்ட. அதுவும் ஓகேன்னுடிச்சு யாருன்னு தெரியாம. என் பிராஞ்சைஸ்னு அவளுக்குத் தெரியாது. எப்படி இருக்கு ரூம்?”

அறை சொர்க்கலோகமாக மழுங்கிய விளக்கொளியில் சில்லிட்டது. அதை ரசிக்கத்தான் முடியவில்லை. அவளைப் படுக்கையில் தள்ளி அவள் மேல் படுத்து, ”என்ன பாடத் தோன்றும்..? அதுவும் விர்ஜின் பக்கத்துல இருக்கறப்ப …. சோ மச் லவ் ஆன் யூ” பாடியபடி புன்னகைத்தான்.

“வெற்றிவேல் சார், அப்படி பாடினது ஜஸ்ட் ஸ்டேஜ் கிம்மிக்ஸ். எஸ்பிபி சார் அழகா பண்ணுவாரு. எல்லோரும் ரசிப்பாங்க. அந்த மோட்டீவ்ல பாடல. நா அப்படி அலயற சீப்பான whore இல்ல. காதல்,காமம் எல்லாம் என் மேல யாரும் திணிக்க முடியாது. ஐ நீட் டு ஹாவ் இட் நேச்சுரல்லி.. நாட் பை ஃபோர்ஸ். என் சாய்ஸ். ரிலாக்ஸ்சேஷனுக்காக டான்சிங் சூஸ் பண்ணினேன் அண்ட் ஐ என்ஜாய்டு இட். இன் ஃபேக்ட் ஐ லவ் தட் கய்”

“பட் ஐ மேட்லி இன் லவ் வித் யூ. அதற்கும் மேல உன்னோட தேன் குரல். இது ரேப் இல்ல. உனக்காக பண்ணது பேசினது எல்லாம் பொறுக்கித்தனமாக தோணிச்சுனா வெரி வெரி சாரி சுவாசிகா. ஜஸ்ட் பிகாஸ் ஆஃப் பிளடி ஆல்கஹால்.  இட் லெட் மீ டெளன். வெரி வெரி ரேராகத்தான் குடிப்பேன். ஐ ஆம் எ டீசண்ட் கய். மை அப்பாலாஜிஸ்” – அவளை அன்புடன் இறுக அணைத்துக் கெஞ்சினான்.

“ப்ளீஸ் சார்… வேணாம். எனக்குப் பிடிக்கல. ஐ ஆம் நாட் இன் லவ். சம் வாட் சைக்கலாஜிகல்லி யூ ஆர் அவுட் ஆஃப் மை பவுண்டரி. ஒட்டவே ஒட்டாது. ப்ளீஸ் லீவ் மீ சார்”

 இதைச் சொல்லும் போது சுவாசிகா கண்களில் நீர் தளும்பி குரல் கரகரத்தது. மேலும் பேச முடியாமல் நிறுத்தினாள். வர்ஷ்னா அவளை ஆதரவாக அணைத்துத் தேற்ற விசும்பிய குரலில், “ஆர் யூ வெர்ஜின்னு என்ன அடிக்கடி கேட்ப. இன்னிக்கும் கேட்ட. இப்படி என்னோட பேச்ச கொஞ்சம் கூட மதிக்காம நா அழ அழ பலவந்தமா செக்ஸ் வச்சிக்கிட்டான் வெற்றிவேல். இத என் கனவிலும் எதிர்பார்க்கல”

வர்ஷ்னாவைக் கட்டிக் கொண்டு பெரிதாக விசும்பினாள்.

“நோ நோ ….ஸ்டில் யூ ஆர் எ விர்ஜின்” வர்ஷ்னாவும் மெலிதாக விசும்ப ஆரம்பித்தாள்.

-ravishankark57@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க
Close
Back to top button