புதிய கேப்டன், புதிய குழு உறிப்பினர்கள், ஏள்கனவே போட்ட சண்டையால் அணி பிரிந்த போட்டியாளர்கள், எவிக்சன் ப்ராசஸ் எனத் தொடங்கியுள்ளது பிக் பாஸ் வீட்டின் இந்த வாரம்.
“ஒரு குச்சி ஒரு குல்பி அதை வச்சு எடு செல்பி…” என்ற பாடலுக்கு லாஸ்லியாவின் அழகான ஆட்டத்தோடு தொடங்கியது எட்டாம் நாள் காலை. எதுவுமே செய்யவில்லையென்றாலும் இப்படி அழகாக ஆடியே ஓட்டு வாங்கி விடுவார் போல லாஸ்லியா. பின்பு தினமும் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் காலை ஆக்டிவிட்டிக்காக சாக்ஷி அனைவருக்கும் தற்காப்புக் கலை பயிற்றுவித்தார்.
சேரனுக்கு பைசைக்கிள் எனப் பெயர் வைத்திருக்கும் ஆண்கள் குழு, “அஅவர் ஓவரா டாமினேட் பண்றாரு. அவரு பெரிய டைரக்டர்னா அதெல்லாம் வீட்டுக்கு வெளில வச்சுக்கனும்.” எனக் கூறி அவரை எவிக்சனுக்காக நாமினேட் செய்வது எனத் தீர்மானித்தனர். இந்தப் பக்கம் ரேஷ்மாவும் வனிதாவும், பாத்திமா பாபு அனைவரையும் டாமினேட் செய்ய முயல்வதாகப் பேசிக் கொண்டிருந்தனர். பாத்திமா பாபு கூட அனைத்து விஷயங்களில் தலையிட்டு கருத்து சொல்கிறேன் பேர்வழி கிண்டுகிறார் என்பது உண்மை தான். நமக்கு ஒளிபரப்பும் வரை சேரன் எதிர்பார்ப்பதெல்லாம் நான் பேசுவதை முழுதாகக் கேளுங்கள் பின்பு கருத்து சொல்லுங்கள் என்ற அடிப்படை மரியாதையைத் தான். பெரும்பாலானோர் இளைஞர்களாக இருக்கும் இடத்தில் தன் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளவே அவர் முனைகிறார் என்றே தோன்றுகிறது. அதற்கேற்றார்போலத் தானே எவிக்சன் நாமினேசனில் பாத்திமா பாபுவை நாமினேட் செய்த மோகன் வைத்யா, “காலையில் பேச்சு வாக்கில் பாத்திமா என்னை போடா மடையா எனச் சொல்லி விட்டார்.” என வருந்தினார். யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்யமே என்பதைப் பின்பற்றுகிறார் போல சேரன்.
நாமினேசன் ப்ராசஸ் தொடங்கியது. அனைவரும் தாங்கள் நாமினேட் செய்ய விரும்பும் இரண்டு நபர்களை காரணங்களுடன் தெரிவிக்கக் கேட்டுக் கொள்ளப் பட்டனர். மீராவையும், மதுமிதாவையும் நிறைய பேர் நாமினேட் செய்ய, பாத்திமா பாபு, சேரன் ஆகியோர் டாமினேட் செய்வதாகக் கூறி நாமினேட் செய்யப்பட்டனர். முந்தைய நாள் நான்கு இதயங்கள் வாங்கிய சரவணனும் எவிக்சன் பட்டியலில் இடம் பிடித்தார். கவினும் சாஷியும் கூட பட்டியலில் உள்ளனர்.
கவினை நாமினேட் செய்த மதுமிதா அதற்குச் சொன்ன காரணம், “வீட்டில் பெரும்பாலும் அநாகரீகமாக நடந்து கொள்கிறார்.” என்பதே. அவருக்குப் பிடித்த, அவரைப் பிடித்த நண்பர்களுடன் அவர் ஜாலியாக இருப்பது இவர்கள் கண்களை உறுத்தி அநாகரீகமாகத் தோன்றுகிறது போலும். பிக்பாஸ் வீட்டில் மட்டும் இல்லை பொதுச்சமூகத்தின் புத்தியே இது தான். ஆக, மதுமிதா வீட்டில் நடக்கும் கலாச்சார சீர்கேடுகளைக் கண்டு கொந்தளிக்கத் தேவைப் படுவார். அந்த கலாச்சாரச் சீர்கேடுகளை செய்வதற்கு கவின் மற்றும் சாக்ஷி தேவை. சேரனும், சரவணனும் சீனியர்ஸ். பிற்காலத்தில் ப்ரஷரில் ஒரு வாரத்தையே நகர்த்தும் கன்டன்டுகளை வார்த்தைகளாக வெளியிடும் வல்லமை வாய்ந்தவர்கள். ஆதலால், இந்த வாரம் பாத்திமா பாபு வெளியேற்றப்படலாம் என்பது என்பது என் அனுமானம். சாஷிக்கு கூட மிகச் சிறிய அளவிலான வாய்ப்புகள் உள்ளன. அவருக்கு பெரிதாக ஃபேன் பேஸும் கிடையாது. அவர் வீட்டுக்குள் எதும் செய்யவுமில்லை.
பிறகு ஒரு டாஸ்கை அறிவித்தார் பிக் பாஸ். போட்டியாளர்கள் நான்கு அணிகளாகப் பிரிந்து கொள்ள வேண்டும். இரு அணியிலிருந்து ஒவ்வொருவர் சென்று மைதானத்தின் நடுவில் வைக்கப்பட்டிருக்கும் எலும்புத் துண்டை எடுத்து ஓடி வர வேண்டும். எல்லைக்குள் வருவதற்கு முன் எதிரணி வீரர் தொட்டு விட்டால் பாய்ண்ட் அவர்களுக்கு. முதலில் எந்த அணி 5 பாய்ண்ட் எடுக்கிறதோ அது வின்னர். இதற்கு தகுந்தார் போல் ஒப்பனை செய்து கொள்ளும்படி பிக் பாஸ் பணிக்க, அனைவரும் நாய், பூனை, என்னவென்றே தெரியாதது என முகத்தில் வேசம் போட்டுக் கொண்டனர். நியாயமா பாத்தா “எங்களைப் பாத்து எலும்புத் துண்டுக்கு அடிச்சுக்க சொல்றீரே ” என உங்களுக்கு கோவம் வந்திருக்க வேண்டும் சென்றாயன்ஸ். இந்த பெரிய முதலாளிகளே இப்படித் தான்ப்பா.
வீடு உயிர்ப்புடன் இருக்க ஒரே காரணம் சாண்டி தான். ஆட்டமும் பாட்டமும் தாளமுமாக அனைவரையும் ஒன்று சேர்த்து விடுகிறார். இந்தமுறை யாராலும் நாமினேட் செய்யப்படாத இரண்டு மூன்று பேரில் சாண்டியும் ஒருவர். அவர் கடைசி வரை நீடிக்க அதே பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவை வேண்டிக் கொள்கிறேன்.
பின்பு, கவினும் சாஷியும் எப்படி தாங்கள் நாமினேட் ஆனோம் எனத் தீவிர ஆலோசனையில் இறங்கினர். சாஷியால் அவர் நாமினேட் ஆனதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இதிலிருந்தே தெரிகிறது அவர் அதில் எத்தனை கான்சியஸ் ஆக இருக்கிறார் என. பின்பு, அபிராமியிடம் சென்ற சாக்ஷி ” நான் உங்களிடம் பர்சனாலாகச் சொல்லும் விஷயங்கள் எப்படி வெளியே போகின்றன? வேகாத சப்பாத்தி மேட்டர் எப்டி வெளிலே போச்சு?” எனக் கேட்டார். ” அதை க்ளாரிபை பண்ணிக்க வேண்டாமா? அதான் கேட்டேன் ” என அபிராமி சொல்ல, “வேண்டாம் நான் உங்களிடம் சொன்னது வெளியே போய் விட்டது. இன்று எவிக்சன் நாமினேசனில் என் பெயர் வந்தது உனை அதிர்ச்சியாக்கவேயில்லை. நீ சேரன் சாருக்காகத் தான் வருத்தப்பட்டாய். உனக்கு அன்பு மனதிலில்லை” எனத் தொடங்க அபிராமி கண்கலங்கத் தொடங்கினார்.
இந்த முறை ஹாட் ஸ்டாரில் மற்றும் மிஸ்ட் கால் மூலமாகத் தான் ஓட்டளிக்க முடியும். ஒரு நாளுக்கு 50 ஓட்டுகள் அளிக்கலாம். என் ஓட்டை மொத்தமாக மீரா மிதுனுக்கு கொடுக்கப் போறேன். ஷி ஈஸ் திகேம் சேஞ்சர் ஆஃப் தி ஹோம்”