இணைய இதழ்இணைய இதழ் 54கவிதைகள்

சி. கலைவாணி கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

கடல் ராமன்

தகிக்கும் பனியில்
கடல்மேல் நடந்தான்
அலைகளை ஊன்றியபடி ராமன்
மாற்றாய் அமைந்த
மனவில்லை தோளில்
ஏந்திப் போகுபவனின்
அரவம் கேட்டு
விழித்துக் குரைக்கிறது
கரையோர இருள்
ஒரு கசப்பு வெளிச்சத்தை எறிந்து விரட்டிப் பயணிக்கிறான்,
மனதுக்குள் ஒளிந்துள்ள சூர்ப்பனகையைத் தேடி…

***

மனதால் நெறிக்கப்பட்ட பிரியத்தின்  வீரியம் அறியாமல் வருகிறது சொற்களால்  பெய்யும் மழையொன்றோடு வானம்
உன் சிறகாக நானும் என் சிறகாக நீயும் பறந்து திரும்புகையில் அடர்கிறது காடாக எதார்த்தம்

வாழ்வின் வண்ணங்கள்
அடைக்கப்பட்ட குப்பியை
ஒதுக்கிய  உன் கடல் மெல்ல
என்னைச் சந்திக்க  அழைத்து வந்த குழப்பங்களை இழுத்துச் சென்று புதைக்கிறது வேறொரு இதய அறையில்…

பழகிய வெறுமை
பழகாத நம் தனிமையோடு நீட்டுகிறது அசாத்தியங்களுக்கு அப்பால் உள்ள புதிய உறவொன்றின் சாயலை

தக்கவைப்பதற்கான போராட்டத்திலிருக்கும் அவளுக்காக  தட்டத் திறக்காத கதவுகளை அமைக்கிறாய்

மறுப்பதற்கில்லாத நுழைவினைத் தந்த  காத்திருப்பு
வலிகளை அகற்றிய முன்ஜென்ம வரத்தின்
நிழல் வளையமாகச் சுற்றுகிறது ..

நிராகரித்தலின் குணமேறிய பகல்களும் அடைக்களமளித்த
இரவுகளும்  கடக்க முடியாத  காலச்சுவர்களில் வரையத் தொடங்குகிறது
விலகுதலின் திரவங்களைப் பூசிக் கொண்டிருக்கும் நெருக்கம்.

*****

c.kalaivani1@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button