இணைய இதழ் 85
-
Dec- 2023 -20 December
குறுங்கதைகள் – பொன். வாசுதேவன்
01. தழும்பு கட்டளைக்கு ஆட்பட்டு வரிசையில் நகர்கிற மனிதர்களைப் போல ஒழுங்குடன் பரபரத்தபடி விரல்களுக்கிடையிலும் தோல் பட்டையிலுமாக ஊர்ந்து நகர்ந்து மூக்கிலும், காதிலும் எறும்புகள் நுழைந்து வெளியேறியபடியிருந்தன. மூக்கினருகில் வழிந்து காய்ந்திருந்த திட்டான பரப்பில் சில எறும்புகள் மட்டும் கூடி நின்றபடி…
மேலும் வாசிக்க -
20 December
கவளம் – காளிப்ரஸாத்
கதிர்வேலன் தன் இருக்கையைவிட்டு எழுந்து தண்ணீர் குடிப்பதற்காகச் சென்றான். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குளிர்ச்சியாகவும் சூடாகவும் இதமாகவும் மூன்று நிலையில் வைத்திருக்கும் இயந்திரம் ஓரமாக வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து கீழே பார்த்தபோது சாலையின் அடிமுதல் நுனிவரை தெரிந்தது. எங்கும் வாகனங்கள். பேருந்து முதல் மிதிவண்டி…
மேலும் வாசிக்க -
20 December
Bon Voyage – கே. முகம்மது ரியாஸ்
எனது கடைசி சவாரியை தஞ்சோங் கத்தோங்கில் முடித்துவிட்டேன் அதன் பயணி சில்லரையில்லாமல் மீதம் இருந்த இரண்டு வெள்ளியை அன்பளிப்பாகத் தந்தார். இந்நாளின் முடிவில் ஒரு அன்பளிப்பு தந்த கடவுளுக்கு நன்றி. அன்பளிப்பு தந்த எனது கைகளுக்கு முத்தமிட்டாயா என்று கடவுள் என்னிடம்…
மேலும் வாசிக்க -
19 December
வானில் முளைக்கும் விதைகள் – ஜெய்சங்கர்
மரங்களின் வழியே காற்று நுழைந்து காட்டை அசைக்கும் காட்சியை பறவைப் பார்வையில் காணும் வாய்ப்பு எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை. வாழ்வின் ஏதோ சில நொடியாவது நாம் ஒரு பறவையாக மாறி விண்ணில் கரைந்துவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றா மனிதர் குறைவே. பறவைக்…
மேலும் வாசிக்க -
19 December
அம்மு – ஆமினா முகம்மத்
அவளை இந்த நிலையில் இன்று, இங்கு சந்திப்பேன் என நினைக்கவே இல்லை. “தற்கொல இஸ்லாத்துல ஹராம்னு மட்டும் இல்லைன்னா என்னைக்கோ செத்துப் போயிருப்பேன் க்கா” கடைசியாய் இப்படித்தான் என்னை அதிர்வுகளுக்குள் நிறுத்திவிட்டு விடைபெற்றாள். அவள் சொல்லிச் சென்று பத்து வருடங்களுக்கும் மேலாகி…
மேலும் வாசிக்க -
19 December
லஷ்மி கவிதைகள்
தனித்தனியாகவும்கூட்டங்களாகவும்சிதறிக் கிடக்கின்றது சொல்வெளி சிலவற்றின் அடர்த்தியிலும்அர்த்தங்களில்லை ஒவ்வொன்றாகக் கோர்த்தெடுத்தாலும்திக்கித் திணறிமனப்பாறையில்முட்டிமோதும் காற்றாய்ப் பயனற்றுப் போகின்றன மயிலின் இறகுகளால் சாமரம் வீசிக்கொள்ளும்கோழிகளுக்கு சொல் பொருள் ஏதுமற்ற பெருவெளியேசொர்கமாகிவிடுகின்றது கானலில் நீரைத் தேடியலையும் வேர்கள்எத்தனை காலங்கள் உயிர்த்துவிடப் போகின்றன? **** எங்கும்சூழ்ந்திருக்கின்றன மனித முகங்கள்…
மேலும் வாசிக்க -
19 December
தி.பரமேசுவரி கவிதைகள்
தற்செயலாதல் நாம் தற்செயலாகத்தானே சந்தித்துக் கொண்டோம்ஓரலை புரண்டெழுந்து வீழ்ந்து கடக்கிறதுதற்செயலாகவே பேசிக் கொண்டிருந்தோம்ஒரு பறவை தாழப் பறந்து மேலெழுகிறதுதற்செயலாகவே நெருங்கினோம்வட்டமிடுகையில்இருமுறை சந்தித்துக் கொள்கின்றனகடிகார முட்கள்தற்செயலாகவே நட்பானோம்செம்புலப்பெயல் நீர் மண் கலந்து தேநீராகிறதுதற்செயலாகவே நீ பேசாமலொரு முறைகடந்து சென்றாய்மண்ணில் வீழ்ந்தன மலர்கள்தற்செயலாய் நானுன்…
மேலும் வாசிக்க -
19 December
ரேவா கவிதைகள்
வட்டப் பாதை நிகழ்ந்துவிட்ட தருணங்களி்ன் மேல்இனியும் பொழிய மழை இல்லை பொய்க் காரணங்கள்புடம் செய்யும் தந்திரங்களின் உவப்பில்நீர்க்குமிழிகளை உடையச் செய்கிறதுகடந்து வந்த காற்று வண்ணத் துகள் பார்க்கத் தந்தஅக்கண நேரப் பிரிகைபட்டாம்பூச்சிகளைப் பறக்கச் செய்யும்வளைவில் சந்திப்போம் மழை புரியமனம் அறிந்து சிலிர்க்கிறதுநடை…
மேலும் வாசிக்க -
19 December
குமரகுரு கவிதைகள்
பூங்காவின் கடைசி பெஞ்ச்சில்எப்போதும் யாரும் அமர்வதில்லைநானும்தான்பறவைகளின் எச்சத்தால் பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்ததந்த பெஞ்ச்.பெஞ்ச்சின் அருகில் வாழும் மரங்கள் உதிர்த்த இலைகள் சூழபூங்காவில் அமர்ந்திருந்தது அந்த பெஞ்ச்.கிட்டே நெருங்கிச் சென்று பார்த்தால்சிமெண்ட் உதிர்ந்துபெஞ்ச்சுக்கு உள்ளேயிருந்த துருப்பிடித்த கம்பிகள் தெரியும்.அவ்வளவு வயசான பெஞ்ச்சால் நம்மைத் தாங்க…
மேலும் வாசிக்க -
19 December
விடுவிப்பு – கா.சிவா
ஊரிலிருந்தவர்கள் அனைவரும் அந்த மரத்தினருகில் கூடியிருந்தார்கள். மகளின் இரண்டாவது பிரசவத்திற்காக புதுக்கோட்டைக்குச் சென்ற ராமய்யா, திருப்பூரில் மகனை போலீஸ் பிடித்ததால் சென்ற மணியன், இரண்டு ஆண்டுகளாக கட்டிலை விட்டு இறங்காத சுப்பம்மா ஆகியோர் மட்டும் வரவில்லை. பள்ளிக்கு விடுமுறை தினம் என்பதால்…
மேலும் வாசிக்க