டிங்.
நோடிபிகேஷனின் மணிச் சத்தம்.
ப்ரெண்ட்ஸ் ரிக்வெஸ்ட்.
த்ரிஷா
அவசரமாக அவள் புரொஃபைல் பார்த்தேன். எதிர்பார்த்த மாதிரியே ராபர்ட் ஃபிராஸ்ட்.
The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.
நிச்சயமாக அவள் தான். அக்ஸப்ட் பண்ணினேன். உடன் சாட் பாக்ஸ் ஒளிர்ந்தது.
ஹாய்.
ஹாய். யார்?
திஸ் இஸ் பாண்ட்…ஜேம்ஸ் பாண்ட்.
ஓ.மை காட்… த்ரிஷா.
யா.. மேன்.
இவ்ளோ நாளா எங்கே போயிருந்தே?
பெல்ஜியம்.. இப்ப இந்தியா.
ஓ. கம் ஆன். வெளாடாத.
ஏன்?
உன் ஹஸ்பண்ட்?
அவர் அங்க.
நீ?
இப்ப சிங்கிள்.
ஏன்?
ம்யூச்சுவலி செப்பரெடட்..
ஒய்?
ம்யூச்சுவல் மிஸ்அண்டர்ஸ்டேங்டிங். அத வுடு. நீ என்ன பண்றே?
ரீடிங்..ரைட்டிங்,,வாட்சிங்..லிசனிங் அண்ட் த லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ஈட்டிங்.
வாட் அபவ்ட் யுவர் வொய்ஃப்?
ஹா.. ஹா..
அப்டினா?
பேச்சலர்.
ஸ்டில்?
எஸ்.
ஒய்?
ஆல் பிகாஸ் ஆஃப் யூ இடியட் கேர்ள்.
மீ?
ம்.
So sad.
என்ன பண்றது?
I want to do with you what spring does with the cherry trees.
– நெருடா.
இதக் கோட் பண்ணித்தானே எல்லாப் பொண்ணுங்களுக்கும் நூல் விட்டே?
நோ.. உனக்கு மட்டும் தான்.
இப்டி எத்தனப் பேர் கிட்ட சொன்னே?
ம்.. உன்னச் சேர்த்து நாலு.
ஜோக்ஸ் அபார்ட்.. என்ன பண்றாங்க உன் வொய்ஃப்?
She deserted me.
வாட்?
த சேம் ஓல்ட் ம்யூச்சுவல் மிஸ்அண்டர்ஸ்டேங்டிங்.
ஓகே..ஓகே.. கிட்ஸ்..?
ஒரு பொண்ணு.. அம்மாவோட. உனக்கு?
நோ.. அதான் பிரச்னையே.
ஒய் டிண்ட் யூ அடாப்ட் எ சைல்ட்?
ஹீ வாண்டட் ஹிஸ் பிளட்.
மெடிகேஷன்?
நோ வே.. மை யூட்ரஸ் வாஸ் ரிமூவ்ட்… கேன்ஸர் சிம்ப்டம்ஸ்.
ஸாரி.
இட்ஸ் ஆல் இன் த கேம் மேன்.
சரி..சரி. இப்ப எங்கே இருக்கற?
சொன்னேனே.. இந்தியா.
எங்க?
கெஸ்.
டெல்லி.
நோ.
மும்பை.
நோ.
ஹெல்.
ஹா..ஹா. ஹெவன்.
எங்கே?
லடாக்… ஒரு புத்தமடாலாயத்தில் தங்கியிருக்கேன்.
ஓ.
என்ன ஓ?.. now I’m reading The Miracle of Mindfulness.
ஓ..Thich Nhat Hanh.
ம்.
I want to meet my த்ரிஷா
யுவர் த்ரிஷா..?
யெஸ்.
நோ.
அட்லீஸ்ட் பேசணும்.
ம்.
ப்ளீஸ்… ப்ளீஸ்.. த்ரிஷா.
இவ்ளோ நாள் என்னப்பா பண்ணே?
I’m searching you around the world.
ஹா.. ஹா.. மடஹாஸ்கர்.. உகாண்டா.. ஆர்க்டிக்.. இஸ்தான்புல் அண்ட் அமேஸான்.
பீ சீரியஸ் த்ரிஷா.
ஒக்கே.. ஓக்கே.
நம்பர்..?
04424253611.
ஓ.மை காட்.. சென்னை. லேண்ட்லைன்?
ம்.
ஹவ்?
எப்டியோ!
ஃப்ளைட்?
நோ க்ளூ. You can reach me at 04424253611. Note it down emotional idiot.
இப்பவே?
நோ.
Tomorrow night at 8.00. Bye.
*****
முடியவில்லை.
உடல் பதறியது.
விரல்கள் நடுங்கின.
என்ன இது.. என்ன இது? டீன் ஏஜ் பையனாய்ட்டனா?
It’s unbearable.
தலையை உலுக்கிக் கொண்டேன்.
இப்பவே.. இப்பவே..
மொபைலை எடுத்தேன்.
04424253611.
ரிங் போனது.
ஹலோ.
ஹலோ ஆனந்தா மனநலக்காப்பகம்.
ஆனந்தா..?
ம்.
என்ன வேணும்?
த்ரிஷா.
யார் த்ரிஷா?
த்ரிஷா.. த்ரிஷா ஃப்ரம் லடாக்.
ஏன் சார் இந்த நேரத்துல இப்டி கழுத்தறுக்கறீங்க?
வாட்?
என்ன வாட்.. டெய்லி இதே தொந்தரவாப் போச்சு. ஏதோ ஒரு லூசு இந்த நம்பரக் கொடுத்துட்டு என் உயிரை எடுக்குது.. இங்க பாருங்க இன்னைக்கு நீங்க் மூணாவது ஆள்..ஒரு ஆள் த்ரிஷாங்கறான் . இன்னொரு ஆள் நித்யாங்கிறான். இன்னொருத்தன் மாயான்னு கேக்குறாங்க.. அப்டி யாருமே இங்க இல்லை. ப்ளீஸ்..புரிஞ்சுக்கோங்க சார்.
ஃபோன் கட்டாகியது.
தலையில் ஒரு விர்ர்ர்.
*****
டிங்.
நோடிபிகேஷன்.
த்ரிஷா.
ஹாய்.
த்ரிஷா.. என்ன விளையாட்டு இது?
எது?
04424253611.
கால் பண்ணிட்டியா?
ம்.
You are a fool.
Ofcourse… y த்ரிஷா?
சிரித்தாள்.
என்ன? தலை சுத்துதா? சிஸ்டம் வேலை செய்யமாட்டேங்குதா?
ம்.
Simple old mechanism man. Reboot your system.
என்ன சொல்றே?.. புரியலை..பைத்தியம் புடிச்சிடும் போலருக்கு.
சிரித்தாள்.
A woman should soften but not weaken a man..யார் சொல்லு?
பைத்தியம் நான் என்ன கேட்டுட்டு இருக்கேன். நீ என்ன சொல்றே?
மை டியர் இண்டலக்ட்.. இத யார் சொன்னது?
Nuts.
Sigmund Freud.. மறந்துட்டியா?
அதுக்கு இப்ப என்ன? கேட்டதுக்குப் பதில் சொல். யார் நீ? எங்கே இருக்க?
தூணிலும் இருக்கிறேன்.. துரும்பிலும் இருக்கிறேன்.
நீ என்ன கடவுளா?
கடவுள்?.. God..? What did Nietzsche say?
அதுக்கு இப்ப என்ன?
மறந்துட்டியா? God is dead. So I am also dead.
கண்கள் இருள 9.81 (m/s^2) விசையின் படி என் பின்னந்தலை ஜெய்ப்பூரிலிருந்து தருவிக்கப்பட்டு பதிக்கப் பட்ட வெண் முயல் கலர் கிரானைட் தளத்தில் மோதியது.
*********