இணைய இதழ் 105சிறார் இலக்கியம்
கால் பந்து விளையாடு தம்பி! – சோ. கு. செந்தில் குமரன்
சிறார் பாடல்கள் | வாசகசாலை

கால்பந்து விளையாடு தம்பி – என்றுமே
கால்பந்து விளையாடு தம்பி
வேல்போல் பாய்ந்தே நீ ஆடு – உதைக்கும்
வேகத்தில் வெற்றியையே தேடு
கால்பந்து விளையாடு தம்பி – என்றுமே
கால்பந்து விளையாடு தம்பி
உடலுக்கு வலிமையினைச் சேர்க்கும் – உள்ளம்
உற்சாக உணர்வெல்லாம் வார்க்கும்
திடமாக இலக்கினையே நோக்கும் – என்றும்
தெளிவான சிந்தனையைத் தூண்டும்
கால்பந்து விளையாடு தம்பி – என்றுமே
கால்பந்து விளையாடு தம்பி
படிப்போடு கால்பந்தை ஆட – உன்
படிப்பினிலே கவனம்தான் கூடும்
துடிப்போடு விளையாடு தம்பி – உன்
தோழமையை விரும்பிடுவார் நம்பி
கால்பந்து விளையாடு தம்பி – என்றுமே
கால்பந்து விளையாடு தம்பி