கவிதைகள்
Trending

கமலதேவி கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

முதல்மழை     

தீ வெயிலில் காய்ந்த குன்றுகள்
மேகங்கள் சூழ நிற்கின்றன…
இனி மெல்ல எழுவாள்
பச்சை மாமலை போல் மேனியனின்
மார்பில் உறையும் தேவி.

*** *** ***

உலகமீன்றாள்

தீ விழியனின்
வெம்மையில் பொழிகிறாள்,
அவன் பாறைகளில் வழிகிறாள்,
மண்ணில் கலந்து தானுமாகிறாள்…
புல்லாய் எழுகிறாள்,
பூவாய் மலரும் சக்தி.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button