
அகாத வெளியில்
அற்புதங்கள் நிகழ்த்தவியலா
யட்சிணிகளின் அலறல்களில்
விரகம் கொள்ளும்
வாயூரிஸ வியாதியஸ்தர்கள்
நிறைந்த நாடிது…
தண்ணொளி வீசும் முன்னே
வெண்ணிலவின் தளிருடலை
புண்ணாக்கி மோகம் கொள்ளும்
ஓநாய்களின் கூட்டமிது…
காடிழந்த வேழத்தின் கதறல்களையும்
கண்ணீரினையும் துடைக்காது
அதன் வழித்தடத்தில் ஆணிகளை
அள்ளியிறைக்கும் ஆபத்பாந்தவன்கள்
எம் கடவுளர்…
கரைகாணா இருள்வெளியில்
அமிழ்ந்து வெளியேற
வழியறியாது தவித்திருக்கும்
இம்மேகங்களை
தாயக வானமேனும் தடுத்தாட்கொள்ளட்டும்…