கட்டுரைகள்
Trending

குணா கவியழகனின் ‘கர்ப்ப நிலம்’ – வாசிப்பு அனுபவம்

கார்த்திக்

குணா கவியழகனின் கைவண்ணத்தில், கண்ணீரில், சிதறிய இரத்தத் துளிகளில் சேர்ந்த மையை உள்ளடக்கிய ஒரு வாழ்க்கையெனும் அவலத்தின் பேனாவால் எழுதப்பட்ட வரலாற்றின் பெயர் தான் கர்ப்ப நிலம்.

கர்ப்ப நிலம், பெயருக்கேற்றார் போல் அவசரமும்,பரபரப்பும் நாவல் முழுக்க ஒரு வரி விடாமல் ஒரு சிசு வெளியேறுவதைப் போன்றதொரு வலியை நாவல் முழுக்கப் படர விடுகிறது. இது எழுத்தாளரின் வெற்றியென்றால் கூட வாசகரின் மனதில் குறைந்தபட்சம் ஒரு வாரமாவது நீங்காத வலியை நிச்சயம் தரும். வலி என்பதை விட ஒரு வித குற்ற உணர்வும் ஒட்டிக் கொள்ளத்தான் செய்கிறது.

எப்பொழுதுமே எழுத்தாளர்கள் கதைக்களத்தின் தொடக்கத்தில் இரண்டு ,மூன்று யுக்திகளை வைத்திருப்பர்.

1.      Stream of Consiouness.
2.      Child eye narration.

எழுபது சதவிகிதக் கதைகள் மேற்குறிப்பிட்டவை போல் அதே இலக்கணத்தில் தான் பயணிக்கும்.

இந்நாவலும் இரண்டும் கலந்தே பயணிக்கிறது. கூடவே நம்மையும் ஒரு கனத்த இதயத்தோடு, ஒரு குற்ற உணர்வோடு , ஒரு அழு குரலோடு உயிரை ஆங்காங்கே பிய்த்து வீசுகிறது.

சொல்லப்படாத காதலும், தன் இனத்தின் மீதான மோகமும், தன் மண் மீதான தாபமும், எழுத்திலேற்ற முடியாத இச்சைகளும் நாவல் முழுக்க வலம் வருகின்றன.

சொல்லப்படாத காதலும், தன் மண்ணின் வாசமும், இனத்திற்கான, துரோகமும் சொந்தங்களின் வேட்கைகளும், அரசியல் லாபங்களுக்காகவும் சமூக ஒற்றுமை எள்ளளவும் இல்லாத, ஒரு சவலைப் பிள்ளை எழுதிய நூல் தான் கர்ப்ப நிலம்.

ஈழப் புதினம் எனத் தொடங்கும் பொழுதே நிச்சயம் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படம் கண்ணருகே  வந்து போகும். அதில் காட்டப்படும் முதல் காட்சியே ஒரு ஆண் பெண் ஊடலை, அவர்கள் மண் மீது அவர்கள் கொண்ட நேசத்தை, அம்மண்ணை கொண்டே உடல் மீது பூசி ஆரம்பிப்பர் அத்திரைப்படத்தில், கவிப்பேரரசின் வரி நிச்சயம் தைக்காமல் இருந்திருக்காது. “கருவில் முள்ளும் நீ”. அந்த வரிகளைப் போன்றே பல இடங்களில் உண்மை முள்ளாய் தைக்கிறது.

இக்கதைக்களமானது பலதரப்பட்ட சிறு புனைவுகளின் தொகுப்பாகும்.  மனதில் மிகப்பெரிய ரணத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு வரலாற்றுச் சம்பவம்.

இக்கதைக்களம் போர்க்கால அறிவிப்பு வெளியிடும் போது இராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையில் சிக்கிச் சீரழிந்த, சீழ்ப் பிடித்த ஆறா வடு. இதில் சொல்லப்படாத , சொல்லப்பட்டிருக்க வேண்டிய காதல் வலியைக் கடப்பது மிகக் கடினம். அக்காதலர்கள் இருவரும் பேசிப் பேசித் தீர்த்தப் பின்னும் சொல்லப்படாத வார்த்தைகளே காதலாய் மிச்சம் இருந்தது. கடிதத்தின் வாயிலாய் காதலைக் கடத்த முயலும் பொழுது குண்டு சத்தங்கள் அவர்களைச் செவிடாக்குவதில் என்ன நியாயம் ? An unanswered questions are always powerful.
குலப்பெருமை பேசித் தன் இனத்தோடு  மட்டும் இணக்கமாக இருப்பவர்களையும் , மண்ணிழந்த மக்களையயும் அத்தோட்டத்தில் மார்பூட்டியது நிச்சயம் மானுடத்தின் வெற்றி. வயோதிகமும் வஞ்சகமும் சேர்ந்தடிக்க, நிலவொளி கூட இல்லாத இருளில் ஆதரவுக் கரம் நீட்ட ஆள் இல்லாத இருவரின் அழுகுரல்.

தன் அரசியல் ஆதாயத்திற்காக எத்தகைய கொடுஞ் செயலையும் செய்யத் தென் இலங்கையில் ஒருவர் தொடங்குகிறார். போர் அறிவிப்பு வந்தவுடன் மக்கள் தங்கள் இடத்தை காலி செய்ய சில மணி நேர அவகாசமே கிடைக்கிறது. அந்த நேரத்திற்குள் தான் வாழ்ந்த , நேசித்த , சுவாசித்த , காற்றை  மண்ணை, நீரை, வீட்டை உடனடியாக உயிர் பிரியுமுன் கடந்தாக வேண்டும்.

இன்றைய ஆடி மாதமும் தி-நகர் கண்டிராத கூட்டத்தை அந்தக் கிழிநொச்சி வீதிகள் கண்டு மிரண்டன , ஒரு பாலத்தை நோக்கி பெரும்படை ஊர்ந்துக் கொண்டே இருக்கிறது. நிச்சயம் ஒரு நூலிழையில் கூட வழியைக் கண்டிருக்க மாட்டார்கள் இருந்தும் கால்கள் நடந்து கொண்டே இருந்தன. இருந்த இடத்திலேயே.

ஈழம் இப்படி ஒரு பிரவசத்தை, அந்த சிசு இப்படி ஒரு உலகத்தை ,அந்த தொப்புள் கொடி இப்படி ஒரு கத்தரிப்பை எதிர்ப்பார்த்திருக்காது. எவர் முகத்தையும் எவரும் காண எத்தனிக்கவில்லை.

இது ஒரு புறம் இருக்கத் தென்னிலங்கையில் இராணுவத்தின் கொடி நிறுவப்பட்டு புலிகள் வீழ்ந்தன என்ற கோஷங்களுக்கு இடையில் ஒரு மெல்லிய முனங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறது. தமிழ் விலை மாதர்கள் என சிங்களர்களால் புணரப்பட்ட சிங்களப் பெண்ணிண் முனங்கள் சத்தம் தான் அது என்று கவியழகன் குறிப்பிடுகிறார்.

கதையின் முற்பகுதியில் சொல்லப்படாத காதலையும், இரண்டாம் கட்டத்தில் சிங்களர்களைக் காமுகன்களாகக் காட்ட முற்படுகிறார்.  அதற்கு எடுத்துக்காட்டாகக் கதையின் பிற்பகுதியில் தன் அண்ணியுடன் உறவு கொள்ளும்  ஒருவனை , வயதானாலும் நீதிபதியின் அடங்காத காம வெறியையும் , அரசியல் பிழைப்பிற்காக எதையும் செய்யத் துணியும் சில கதை மாந்தர்களை கோடிட்டுக் காட்டுகிறார்.

இப்புதினத்தின் சில வரிகள் நிச்சயம் பாராட்டத்தக்கவை.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button