![ச. விக்னேஷ்வரன்](https://vasagasalai.com/wp-content/uploads/2019/10/WhatsApp-Image-2019-10-02-at-8.02.24-PM-780x405.jpeg)
என் பாலைவனப் பயணத்தில்
போகும் வழியெல்லாம் தண்ணீர் கொடுத்தென் தாகம் தணிக்கிறார்கள்..
பகல்களின் வெப்பத்தில்
சிலர் தொண்டைக்கு குளிர்ச்சியாக பழச்சாறு தருகிறார்கள்..
இரவுகளின் குளிரில்
சிலர் தேநீர் வழியே கதகதப்பைத் தருகிறார்கள்…
சிலரிடம் என் சிகரட்டை புகையூட்ட மன்றாடியிருக்கிறேன்..
சிலரிடம் சிகரட்டையே மன்றாடியிருக்கிறேன்..
தாகம் தணிக்க தண்ணீர் தருபவர்கள் குறித்தெல்லாம் பிரக்ஞை எழுவதேயில்லை..
மனித இயல்பென மனம் மரத்துப் போகிறது.
இயல்புக்கு அப்பாற்பட்டதை தருபவர்களிடம்தான் மனம் எப்போதும் அதையே எதிர்நோக்குகிறது..
அது இயலாதெனினும்..
மனம் என்னமேனும் எதிர்பார்த்துக் கொள்ளட்டும்..
உங்களுக்காக நான் அதனிடம் மன்றாடிக் கொள்கிறேன், நீங்கள் கொடுத்தவைகளின் உண்மைத் தன்மையை கூறி…
நீங்களும் பயணம் செய்யுங்கள்….
ஒரு கோப்பைத் தேநீரோ,
ஒரு போத்தல் மதுவோ,
ஒரு மிடறு அமிர்தமோ உங்களுக்காக எங்கேயோ காத்திருக்கலாம்..