![](https://vasagasalai.com/wp-content/uploads/2019/03/Gopi-780x405.jpg)
வசதிக்கேற்ப
காதலையும் காமத்தையும்
மாறிக்கொண்டேயிருக்க
ஒரு டீஸ் பூன் அளவிற்கா இருந்துவிடுகிறது
தீர்ந்துபோவதும்
தீரவே தீராத ஒரு பெருமழையும்தானே
இந்த காதலும் காமமும்
உங்களிடம்
தீர்ந்துபோகும் பெருங்கடல் உள்ளது
என்னிடம்
தீரவே தீராத ஒரு துளி இருக்கிறது.