இணைய இதழ்இணைய இதழ் 67கவிதைகள்

சபேஷா கண்ணதாசன் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

மரியாதை கிடைக்காத இடத்தில்
கால் கடுக்க நிற்கும்போது
மூளைக்குத் தெரிகிறது
இது அவமானமென
இது புறக்கணிப்பென
இங்கிருந்து சென்று விட வேண்டுமென்று !

நகரத் தயங்கும் கால்களுக்கோ
கடமையின் குணம்..!
அன்பின் மனம்..!

****

மரம் சரிந்து வீழும்போதெல்லாம்
சேர்ந்தே வீழ்ந்திடும் வேர் மண்ணாய்
மனம் துவண்டு சாயும்போது
கூடவே வருகின்றன
உன் ஞாபகங்கள்.

****

துயிலெழுந்தவுடன் நீ கண்டுகளிக்க உனக்கான ஒரு மலர் வனத்தை
உண்டாக்கப் போவதாய் உரைத்தேன்
ஆனால் நீயோ
பூக்களின் உருவம் பதிந்த
புகைப்படமே போதுமென்றாய்

கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும்
இடையில் சிதறிய பூக்களின் இதழ்களில் வருகின்றது
பரஸ்பர அன்பின் வாசனை.

*******

sabesha99@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button