இணைய இதழ்இணைய இதழ் 72சிறுகதைகள்

செந்நிற இரவுகள் – லட்சுமிஹர் . 

சிறுகதை | வாசகசாலை

ன்ன பேசுவது என்று தெரியாமல்தான் இதை ஆரம்பித்தேன் அவளிடம். ஆம் எவ்வளவு முறைதான் அப்புறம்.. அப்புறம் என்று பேசுவது. ஆனால், முதல் தொடக்கமே பலமான அடியாக இருந்தது. ‘எங்க வீட்டு பக்கத்துல ஒரு லூசு இருக்கும் அது நைட்டிக்குள்ள பேண்ட்டு போட்டு சுத்திட்டு இருக்கும்..’ என்று சொல்லி அடுத்த நொடி கூட தாண்டியிருக்காது. ‘ம்ம்.. உன்ன மாதிரி முண்டம்லா உள்ள பாக்கும்னுதா…’ எதற்கு அவள் அப்படி சொன்னால் என்று இன்று புரிந்து கொள்ள முடிகிறது ஆனால், அன்று அதற்கு எதிர் வினை ஆற்றியே ஆக வேண்டிய வாலிபப் பருவத்தில் இருந்ததால்எனக்கு தெரிஞ்சு அவ லெஸ்பியன்னு நெனைக்குறேன் ..’ என்றேன்

அதற்கு அவள் மேலும் கோபம் கொண்டவளாய்ஏன் அப்படி சொல்ற? ‘ 

இல்ல நான் எவ்வளவோ தடவ பாத்துருக்கேன் ஆனா, ஒரு தடவ கூட ஒரு ரியாக்ஸனும் வரல ‘ 

அதுவரை வேகமாக பதில் சொல்லிக் கொண்டிருந்த அவள் சற்று அமைதியாக இருந்தாள். அந்த நேரத்தில் அவள் மனதிற்குள் என்னைப் பற்றி என்னவெல்லாம் யோசித்திருப்பாள், இவனுக்கு போய் நாம ஓகே சொல்லிருக்கோமே என்றும், இல்லை கன்னத்தில் அறையலாம் என்றும், இப்படி எதுவாக வேண்டுமானாலும் நாம் அந்த அமைதியை மதிப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால், இணைப்பு துண்டிக்கப்பட்டு ஒரு வார காலம் கல்லூரியிலும் போனிலும் பேசாமல் இருப்பது தண்டனையாகவும், அவளைப் பற்றி அதாவது என் பக்கத்துக்கு வீட்டுப் பெண்ணைப் பற்றி இனி பேசக் கூடாது என்கிற நிபந்தனையின் அடிப்படையில் அந்த சர்ச்சை ஒரு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது . ஆனால், என்னால் என் அருகில் வசிக்கும் அந்த பெண்ணின் நடவடிக்கைகளை கவனிக்காமல் இருக்க முடியவில்லை

அவள் என்னை விட ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட வயது மூப்புடைய பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் . வங்கியில் பணி செய்து வருகிறாள் என்கிற தகவலைத் தாண்டி வேறு எந்தத் தகவலும் தெரியாது . பார்ப்பதற்கு ஒன்றும் அவ்வளவு அழகும் இல்லை. ஆனால், அவளைப் பார்க்கும்போது நம் கண்கள் மேலும் கீழுமாக என எல்லா இடத்திற்கும் அலை பாய்ந்தே தீரும். ஆகையால் அங்கொரு அனுமதி சீட்டிற்கு எப்போதும் கண்கள் அவளைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கும் . ஒரு காலும் அதற்கு எதிர் முனையில் இருந்து சிறு எதிர்வினை கூட வரவில்லையே என்கிற கோபம் கூட அப்போது எனக்கு இருந்தது

வேலைக்கு கிளம்பும் தருணத்தில் அவள் கண்ணில் படும் படி ஓடி போய் முன் மாடி வெராண்டாவில் நிற்பது, (வேலை முடிந்து வரும் போதும்), ஜன்னல் வழி அவளின் செயல்களை நோட்டமிடுவது இதெல்லாம் நடந்து வந்தது. பெரும்பாலும் அவள் நேரத்தை அவள் வளர்த்து வந்த கிளியோடுதான் செலவழித்து வந்தாள். அவள் வளர்த்து வந்த கிளியுடன் அவள் நிகழ்த்தும் உரையாடல்களைப் பார்க்கையில் அவள் பைத்தியம் தான் என்பது போல தோன்றும் . என்னை அவள் பார்க்கக் கூட இல்லையே என்கிற கோபமும் அதில் அடங்கும். சில நேரங்களில் நான் அவளைக் கவனிப்பது அவளுக்குத் தெரியும். தெரியாத நேரங்களில் அந்த கிளி அவளுக்கு நினைவு படுத்தி விடும் . எப்படியும் நான் மாட்டிக் கொள்வேன் . மேலும் அவளைப் பற்றி தெரிந்த தகவல் ஒன்று உள்ளது அடிக்கடி அவளை பெண் பார்க்க வருவர் . வாரத்திற்கு ஒரு முறையாவது அது நடந்தேறிவிடும். மேலே அவள் வளர்க்கும் அந்த கிளியின் அருகில் வைத்துதான் அந்த ஆண் நபருடன் அவள் உரையாடிக் கொண்டிருப்பாள். அப்போது அந்த உரையாடலைக் கவனிப்பதைக் காட்டிலும் என்னுடைய கவனம் முழுவதும் ஏனோ அந்த கிளியின் மேலே தான் இருந்து வந்தது . அது ஒருவாறாக தன் இருப்பிடத்தில் இருந்து கொண்டே கீச்சுக் குரலின் மூலம் தோழியின் எண்ணங்களை கடத்த முயன்று கொண்டிருப்பது போலத் தோன்றும். இப்படியாக என் அருகில் இருக்கும் பெண்ணின் மீதான பார்வை என் காதலிக்குத் தெரியாமல் ஒரு திசையில் சென்று கொண்டிருக்க, எங்கள் காதல் கொஞ்சம் படுக்கை அறை வரை செல்லும் அளவிற்கு வளர்ந்திருந்தது .

நான் அதற்கான தயாரிப்புகளில் இறங்கினேன். ஏற்காட்டில் நண்பர்களுடன் முன்பு சென்ற காபி எஸ்ட்டேட் வசதியாக இருக்கும் என்று அதற்கு முன்பணம் செலுத்தி வைத்தேன். நண்பனிடம் சொல்லி கார் ஒன்று ஏற்பாடு செய்ய வேண்டும் . அவனிடம் எதற்கு என்று சொன்னால், ஊர் முழுவதும் டமாரம் அடித்தால், அவ்வளவுதான், அவள் வரமாட்டேன் என்று சொல்லிவிடுவாள் . இதுவே எவ்வளவு நாள் கெஞ்சிக் கூத்தாடி, ‘சத்தியமா கல்யாணம் பண்ணிக்கிறேன்என்று சாமி மீதும், என் அம்மா மீதும் சத்தியம் செய்து கூட்டிப் போகிறேன். அதுவும் நானும் அவளும் காதலிக்கிறோம் என்று எங்கள் கல்லூரியில் யாருக்கும் தெரியாது

ஏன்..சொன்னா என்ன?’ என்று கேட்டதற்கு தான் பெரிய சண்டையே போட்டாள். அவள் ஏன் அப்படி நடந்து கொள்கிறாள் என்று எனக்கு அப்போது மட்டுமல்ல இப்போது வரையும் புரியவில்லை. அவள் அதற்கு கூறிய பதில், ‘ இங்க இருக்குறவங்க யாருமே எனக்கு அவ்வளவு க்ளோஸ் கெடையாதுஎன்பதுதான். நான் அதற்கு மேல் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை

எத்தனை எத்தனை வீடியோக்கள்.. எத்தனை எத்தனை வெப்சைட்கள்.. எண்ணிக்கைகள் முடித்து தீர்ந்து மீண்டும் மறுபடி ஆரம்பித்து, மீண்டும் முடிந்து மறுபடி ஆரம்பித்து என்று இன்ஃபினிட்டியை அதிகமாகப் பயன் படித்தியது இங்கே தான். இன்று எந்த வீடியோவை பார்த்து அடிக்கப் போகிறோம் என்பதை தீர்மானிப்பதில் இருக்ககூடிய சவாலே வாழ்கையில் பல நல்ல முடிவுகளை எடுக்க வைக்க உதவும் என்கிற நம்பிக்கையைக் கொடுக்கும். இப்படியாக தாறுமாறாக கீழே குனிந்து கூட பார்க்காது கஞ்சியை வீணடித்த எனக்கு முதல் முறையாக குனிந்து கீழ் பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எல்லாருக்கும் ஏற்படும் அதே பதட்டம்தான். முதல் பதட்டம் என்று கடந்து விட முடியாது. வாழ்கையில் இவ்வளவு முறை கஞ்சியை பயன்படுத்தி தன் சுற்றார் நண்பர்களால்கஞ்சியடிஎன்கிற முடிசூட்டப்பட்ட ஒருவனின் பார்வை கோணத்தில் இருந்து இந்தப் பிரச்சினையை நீங்கள் அணுக வேண்டும்

நானும் மனதை பயம் கொள்ள விடாமல் எவ்வளவோ முயன்றும் அது அதன் போக்கில் என்னை இழுத்துக்கொண்டுதான் போனது . சரி. என்னது இது? என்று சமூக வலைதளங்களில் இதைப் பற்றித் தேடினால் நீ வாழ்வதற்கு தகுதி அற்றவன் என்று முடித்துவிட்டது ஒரே போடாக. இதுவரை துடிக்காத தசையெல்லாம் இப்போது உடம்பெங்கும் துடிக்கிறது . அம்மா மீதான சத்தியம் , செலவழித்த காசு , கார் என்று அனைத்தும் ஞாபகம் வருகிறது. இவ்வளவு பதட்டத்திலும் ஒரு பக்க மூளை தன் நியாபகத்தை காமெடியாக வெளிக்கொணர்ந்து உடலை சமன் செய்ய முனைகிறது. என்னுடைய நண்பன் தீவிர இலக்கிய வாசகன். சமீபத்தில் கூட இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் போட்டான் அதை யாரும் கண்டு கொள்ளவில்லை அது வேற விசயம் விடுங்கள், அது அவன் தலையெழுத்து. அவன் ஒரு திரைப்பட விழாவில் ஒரு மூத்த பெண்ணை சந்தித்திருக்கிறான் இருவருக்குள்ளும் நல்ல உரையாடல் நிகழ்ந்தேறி அதுஒன் நைட் ஸ்டாண்ட்டில்போய் முடிந்திருக்கிறது. காலையில் படுக்கையை விட்டு BYE சொல்லி கிளம்பும் போதுதான் நம்ம பையன் அவன் எழுதிய புத்தகத்தை பற்றிச் சொல்லி இருக்கிறான். பாவம் அதன் பிறகு தான் மிகப் பெரிய ஆச்சர்யம் , அவள் நடுத்தர வயதுடைய எழுத்தாளர் ஒருவரின் மனைவி என்று தெரிய வரவும், நம்ம பையன் உடல் நெளிந்திருக்கிறான். அதற்கு அம்மணி, ‘அவன் புக்ல மட்டும் தான் செய்வான்என்று அசால்ட்டாக சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாளாம். எதற்கு இது தோன்றியது என்று தெரியவில்லை நான் இப்போது அவனுக்குத்தான் போன் பண்ணுவேன் என்று நீங்கள் நினைக்கலாம். செத்தாலும் அந்த நாதாரிக்கு மட்டும் அடிக்க மாட்டேன். ஓடிவந்து வெராண்டாவில் நின்று கொண்டேன் .

காண்டாக்ட் லிஸ்டில் தேடி எடுத்து மருத்துவ நண்பன் ஒருவனுக்கே அடித்தேன். முதல் சிரிப்பிலேயே என்னை கோபம் கொள்ளச் செய்தான். இத்தனைக்கும் என்னுடைய ஏற்காடு விசயத்தை இன்னும் அவனிடம் சொல்லவில்லை

கஞ்சியடின்னு பேர வச்சுக்கிட்டு இவ்வளவு நாளா எப்புடிடா பண்ண? ‘ 

டேய் மொதல்ல அப்படிக் கூப்டறத நிப்பாட்டுங்கடா ..நீயெல்லாம் டாக்டர் தான..’

ஓகே .. கஞ்சியடி ..’

‘ …’

சரி இவ்வளவு நாளா தொட்டு கூட பாக்கலைனா.. புரில? யூரின் போறப்போ ’ 

தொடாமையா இருப்பாங்க ..’

டேய், நான் கையடிக்கரப்போ சொல்றேண்டா.. இவ்வளோ நாளா எப்படி பண்ண? ‘ 

குப்புறபடுத்துப்பேன் ..’

அந்த சிரிப்புதான் என்னை கோபம் கொள்ளச் செய்தது . என்னவோ அதற்கடுத்து அவன் சொன்ன மாதிரி ஆண் குறியின் தோளை மேல் கீழ் இழுக்க முடிகிறதா என்று பார்த்து விட்டுச் சொன்னேன்..’ முடியிது மச்சான், ஆனா, கஷ்டமா இருக்கு.’

அது ஒன்னும் இல்ல ரெகுலரா பண்ணா சரியாகிடும் ..டேய் இதெல்லாம் எண்ணனு தெரியுமா இல்ல.’ – நக்கல் தொனியில் கேட்க அவனிடம் நான் என்ன பதில் சொல்ல. ‘ SHORT FRENULUM ‘ பற்றி படிக்க மேலும் புரிதல் ஏற்பட்ட அளவுக்கு ஆன்லைன் பயத்தையும் கொடுக்கிறது . அதனால் என்னவோ நண்பன்இதபத்தி எங்கேயும் தேடாம போய் படுஎன்று கூறி போனைத் துண்டித்தான்

இரண்டு மூன்று நாட்களாக இந்த விசயம் மனதை அசதியாக்கி கட்டிலில் தள்ளியது. மணி பத்து இப்போது அவளிடம் இருந்து போன் வரும் நேரமிது . ஆன்லைன் செல்ல பயம்..சென்றால் ஏனோ மீண்டும் ஆண்குறி , பெண் திருப்தி என்று தேடத் தொடங்கி விடுவோமோ என்று போனை தொடாமல் இருந்தேன். தூங்க முற்பட்டேன். ஜன்னலிலிருந்து வந்த வார்த்தைகள் என்னை எழுப்பி விட்டன . ஆண் குறி சிக்கலில் மாட்டிக் கொண்டதால் சமீப காலமாக பக்கத்துக்கு வீட்டுப் பெண்ணை கவனிக்க மறந்திருந்தேன். இன்று தான் வெராண்டாவில் நின்று பார்த்தேன் ஏனோ அவளின் முகம் அவ்வளவு கோபமாக இருந்தது. ஏதோ பெரிய சண்டை நடப்பது போலத் தெரிகிறது . ஆம் சண்டை தான் . அந்த ஜன்னலின் வழியாக பார்க்கையில் அவளின் அம்மாவும் , அப்பாவும் அவளுடன் பெரிய வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். எனக்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது சரியாகக் கேட்காத காரணத்தால் புரிந்து கொள்ள முடியவில்லை . ஆனால், அவள் அந்த வீட்டின் வாசல் பகுதிக்கு உள்ளே செல்லாமல் வெளியே நின்று தான் பேசிக்கொண்டிருக்கிறாள். அவளின் அம்மா அவளின் கையைப் பிடித்து வீட்டின் உள்ளே அழைத்தும் அவள் உள்ளே செல்ல மறுக்கிறாள் என்பது தெளிவாகப் புரிந்தது. மேலே இருக்கும் அவளின் கிளி இவர்களுக்கு இணையாகத் தன் பங்கிற்கு எதையோ கீச்சிட்டுக் கொண்டிருந்தது. அப்போதுதான் என்னவளிடத்தில் இருந்து அழைப்பு வந்தது

அதுவரை ஜன்னலிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த நான் அவளிடம் பேச ஆரம்பித்தேன் . எப்போதும் போல கதை தான் என்றாலும் இன்று ஏற்காடு விசயங்களால் நடந்த ரசாயன மாற்றங்கள் கொஞ்சம் பேச்சைத் திணறடித்தது , எங்கே அவள் அந்தப் பயணத்தை எந்நேரமும் மறுத்து விடலாம் என்கிற பயமும் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்க கண்கள் முழுவதும் வெளியே நடந்து கொண்டிருக்கும் நாடகத்திலேயே இருந்தது . ‘ ஏதோ பிரச்சன போல.. அந்தப் பொண்ணு வீட்ட விட்டு போயிருக்குமோஎன மற்றுமொரு பதட்டம் சேர்ந்து தொற்றிக்கொண்டது போல இருந்தது . அதற்கு ஆதாரமாய், மீண்டும் அங்கு வந்து விட கூடாது என்பது போல அவள் கிளம்பினாள். ஏனோ அங்கு நடந்ததற்கு நாமும் ஒரு காரணமோ என்கிற குற்ற உணர்வில் போனில் அவளிடம்நான் சொல்வேன்ல அந்த பொண்ணு வீட்ட விட்டு போயிட்டாஎன்றேன் . அவள் சிறிதும் யோசிக்காமால்தப்பிச்சாஎன்று சிரித்துக் கொண்டாள் . அன்றிரவு முழுவதும் சரியான உறக்கம் இல்லை . அருகில் இருந்தவள் பற்றிய நினைப்பு விலகி என்னவள் மீது கோபம்தான் அதிகமாக வந்தது. அவள் சொன்ன வார்த்தைதப்பிச்சா ‘ ..என்ன அர்த்ததில் அதைச் சொன்னாள் என்றுதான் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த உரையாடல் நீண்டு பெரும் வாக்குவாதமாகி சண்டையில் போய் தான் முடிந்தது . ‘வாடி உன்ன ஏற்காட்ல வச்சு செய்றேன்..கல்யாணம் பண்ணிக்கணும்..சத்தியம் பண்ணுமயிர்லஎப்ப பாத்தாலும் நீ வெர்ஜினா, வெர்ஜினா ..அதே நான் கேக்க முடியுதாவா செய்றேன் ..இதெல்லம் கூட பரவால .. நான் யாரப் பாத்து வேணா கஞ்சியடிப்பேன் உனக்கென்னடிஎன்று வண்ட வண்டயாக டைப் செய்து வைத்திருந்த மெசேஜை ஏற்காடு பயணத்தை மனதில் வைத்துக் கொண்டு அழித்துவிட்டேன் . இந்த சண்டையால் எங்கள் ஏற்காடு பயணம் சொன்ன மாதிரி ஒரு மாத காலம் தாமதம் ஆனது

எங்கள் அருகில் இருந்த பெண்ணின் குடும்பத்தினர் அந்த சண்டைக்குப் பிறகு வீட்டைக் காலி செய்திருந்தனர். என்ன நினைத்தேன் என்று தெரியவில்லை ஏனோ இதுவரை தொலைவிலிருந்தே பார்த்துவந்த வீட்டை அருகில் போய் பார்க்க வேண்டும் என்று தோன்றியது .

*

அப்படியாக அந்த ஏற்காடு அத்தியாயம் முடியும் என்று நான் நினைக்க வில்லை. அதை மீண்டும் நினைவுபடுத்திட ஒரு வித சிரிப்பு தான் எழுகிறது . அதற்கு முன் அந்த ‘short frenulum’ விசயத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். அதை கதைக்குள் கொண்டு வந்துவிட்டேன் ஆனால், அதை கதையின் ஓட்டத்தில் கூற முடியாது. சூழல் இல்லை.. கதை நகர்தலில் மாட்டிக்கொண்டதால்..இல்லை எப்படி சொல்வது என்று தெரியவில்லை .ஆகையால் ஏற்காட்டில் நடந்த அத்தியாயத்தின் கடைசி சம்பவத்தை மட்டும் கூற விளைகிறேன் ..

அப்படி இப்படி என கட்டில் வரை நகர்ந்து வந்து உடலோடு சேரும் நேரம் அது . என் எண்ணம் முழுவதும் முதல் அனுபத்தில் தவித்திருந்தாலும் மனதிற்குள் முன் போட்டு உழட்டிய அனைத்தும் பின் மண்டைக்குள் அழுத்திக் கொண்டுதான் இருந்தது . எப்படியாவது தேறிவிடலாம் என்று என்னுடைய குறியை இரண்டு பாய்ச்சல் தான் உள் செலுத்தினேன்.. ரத்தம் பீறிட்டுக் கிளம்பியது. முனங்கல் சத்தம் தான்..அத்தனை முறை அந்த முனங்கல் சத்தத்திற்காக வீடியோ பாத்த காலங்கள் உண்டு. இன்றும் முனங்கல் ஆனால், அது நான். படுத்திருந்தவள் வேகமாக எழுந்து கொண்டு, ‘ என்னாச்சு ரத்தமா இருக்கு. எனக்கு ஒன்னும் இல்லையேஎன்றாள் .. என்னால் வலியை அடக்கிக் கொள்ள முடியவில்லை. ரத்தமும் நின்ற பாடில்லை. அருகிலிருந்த துணியை எடுத்து கொண்டு அழுத்திப் பிடித்துக் கொண்டுஇவ்வளவு நாள் கேட்டியில இதுதான் ஆண்களோட virgin ‘ எல்லாம் இந்த short frenulum பாத்த வேலைஎன்று மனதிற்குள் புலம்பிக் கொண்டேன். பல நாள் கனவு அதல பாதாள ரத்த வெள்ளத்தில் மிதந்து கரை சேர்ந்தேன் என்று தான் சொல்ல வேண்டும் . அதன் பிறகு எங்கள் காவிய காதல் கதை கல்லூரியில் முடிந்தது.எப்போது என்னை நினைத்தாலும் அவளுக்கு ஒரு சிரிப்பு வரும்.. அது மட்டும் உறுதி

*

இந்த மூன்று வருடத்தில் அந்த கிளி என்னிடம் நன்றாகவே பழகி இருந்தது. வீட்டைக் காலி பண்ணிச் சென்றவர்கள் அந்தக் கிளியை அங்கேயே விட்டுச் சென்று விட்டனர் . அதன் பிறகு அந்த வீடு பூட்டியே இருந்தது. நான் பணி நிமித்தமாக சென்னைக்கு என் துணையாக அதை எடுத்து வந்து விட்டேன். அதுவும் இல்லை என்றால் கொஞ்சம் கஷ்டம் தான் . இந்த கதை முழுவதும் இந்த மூன்று வருடங்களாக இரவு நேரங்களில் கார்கிக்குச் சொன்ன கதைகள், கதை என்றால் என்னிடம் சொல்ல அது மட்டும் தான் இருந்தது அது மட்டும் இல்லாமல் வேறு எந்த கதைக்கும் கார்கி செவி சாய்ப்பதும் இல்லை.. ஏனென்றால் அதில் அவர்களின் மேடம் இல்லையே.. என்ன செய்வது.. இரவு சத்தம் இடாமல் இருக்க இதைக் கொஞ்சம் பேச ஆரம்பித்த உடன் இருவருக்கும் தூக்கம் சொக்கி விடும். எங்கள் வீட்டிலும் எனக்கும் பெண் பார்க்கத் தொடங்கி இருந்தனர். முதல் காதல் பிறகு அப்படி ஒன்றும் பெண்கள் பக்கம் ஈர்ப்பு இல்லை என்று சொல்லி விட முடியாது.. காதல் புரியவில்லை.. உடல் அதற்கு மேல். ஆனால், இன்னும் எதையோ போட்டு உருட்டிக் கொண்டு இருக்கிறேன். ஆனால், முன்பு போல் தலையைக் கொடுக்காமல். இது என் பக்க கதை தானே. வேலைக்கு கிளம்ப வேண்டும் பாய் கார்கி

போகும் போது கார்கிக்கு இன்று தேவையானவற்றை வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அம்மா இரண்டு மூன்று புகைப்படத்தை அனுப்பியிருந்தார். .தினம் இப்படி வருவது இயல்பு தான் . நானும் பார்க்கிறேன் . மனம் சொல்லும் முதல் காதலியைத் தேடாதே என்று. ச்சீ. எப்போதும் அலுவலகம் முடியும் என்று காத்திருந்து நான் நேராக வண்டியை கடைக்கு விட்டேன் அங்கே தான் எனக்கு இன்றைய நாளுக்கான அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது . கடையினுள்..அவள் தான்மூன்று வருடத்திற்கு முன்பு என் ஜன்னல் பார்வையிலிருந்து தப்பித்தவள். இப்போது இவளிடம் இருந்து நான் தப்பிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, மறைந்து சென்றுவிடலாம் என்று பார்த்தால், அவள் வேறு எனக்கு நேர் எதிர் திசையில் வழியை அடைத்துக் கொண்டு நிற்கிறாள். உள்ளேயே இருந்தால் பார்த்து விடுவாள் .. மெதுவாக அவளைக் கடந்து வெளியே வந்து விட்டேன். ஆனால், இதுவரை நான் கேட்காத கார்கி பல முறை இசைகோர்த்த அந்தக் குரல் என் பெயர் சொல்லி அழைத்தது ..

ஹஸ்வந்த் தான ..’ 

நான் தலையை மட்டும் ஆட்டினேன்

என்ன தெர்லயா ..இல்ல

தெரியும் ..’

அப்புறம்..’

எப்படி பேசுறதுன்னு …’

அப்பல இருந்தே அப்படிதானே …’ என்று சிரித்துக்கொண்டாள் ..மேலும் தொடர்ந்தவளாய் என்னுடைய வேலை குறித்தான தகவல்கள், தங்கிருக்கும் இடம் அனைத்தையும் தெரிந்துக் கொண்டாள் . என்னிடமும் நிறைய கேள்விகள் இருந்தன இப்போதே கேட்க முடியாத கேள்விகள் அவை . ஆகையால்நீங்க வச்சுருந்த கிளிய இப்போ நான் வச்சுருக்கேன்.. வளத்துட்டு இருக்கேன் ..’ என்று சொன்னதும் ..அழுகை அவளுக்கு எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். அதை பார்த்தவளாய் கடையினுள் இருந்து வந்த இன்னொரு பெண் என் சட்டையை பிடித்து அடிக்க கைகளை ஓங்க, அவளை இவள் தடுத்துவிட்டாள். ஒரு நிமிடம் அங்கு கலவர சூழல் நிகழ்ந்தேறியது . அழுதவளை வந்தவள் இறுக்கி அணைத்துக்கொண்டாள், கண்களை துடைத்துவிட்டாள். அடிக்கடி என்னையும் பார்த்துக் கொண்டாள் . சமாதான சூழல் நிலவி அடுத்த கட்டமாக நாங்கள் மூவரும் நான் தங்கியிருக்கும் அறைக்குச் சென்றோம் . முன்பு பார்த்த அதே உரையாடல்கள் தான் அவர்களுக்குள் நடந்தேறியது . நாங்கள் மூவரும் இரவு உணவு உண்டு கொஞ்சம் மதுவும் அருந்தினோம் .

கார்கியைப் பார்த்துக்கொண்டே இருந்தவள்அன்னைக்கு கடைசியா இத வாங்கிட்டுப் போக வந்து தான் அவ்வளவு சண்ட போட்டேன் ..தரவே இல்ல . என்ன பேரு வச்சுருக்க …’ என்று என்னைப் பார்த்துக் கேட்டாள்

கார்க்கிநான் வீட்ட எதார்த்தமா போய் பாக்குறப்போ இருந்துச்சு..’ 

நான் இவ பேர் தான் வச்சேன் ..’ என்று அருகில் இருந்தவளுக்கு முத்தம் கொடுத்தாள் .. அதற்கு அவள் என்னை பார்த்துநீங்க தான் ஜன்னல் ரோமியோனு தெருஞ்சுருந்தா கடையிலையே அடுச்சுருப்பேன் …’ என்று சொன்னவளின் வாயை, இவள் தன இதழ் கொண்டு அடக்கினாள் . அவர்கள் இருவருக்குள் இருக்கும் நெருக்கம் என்னை கிளர்ச்சியுறச் செய்தது

சரி ..நாங்க கெளம்புறோம். இங்க இருந்து த்ரீ கிலோ மீட்டர்ஸ் தான் எங்க ஏரியா. கீப் இன் டச்.. நானும் இவளும் ஒன்னாதான் தங்கிருக்கோம் ..’ என்று கிளம்பினார்கள் .. 

நான் அவள் இந்த கிளியை திருப்பிக் கேட்பாள் என்று நினைத்திருந்தேன் . இந்த இடைப்பட்ட நாட்களில் அதனுடனான என்னுடைய உறவு கூடியிருந்தது . அதனால் அதை பற்றிய பேச்சு எப்போது வரும் என்பதிலேயே என்னுடைய முழு கவனமும் இருந்தது. ஆனால், அவள் அதைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் கிளம்புகிறாள் . அவ்வளவுதானா.. அதைப் பற்றிச் சொன்னவுடன் வாய் விட்டு அழுதவள், அதை இங்கே விட்டுவிட்டுச் செல்கிறாள் என்கிற கேள்வி மனதில் ஓடியது. தயங்காமல் கேட்டும் விட்டேன் .

நீ வேணா அத எடுத்துட்டு போவேன் ..’ தயங்கிச் தயங்கிச் சொன்னேன் . என்னைப் பார்த்து அழகியதொரு சிரிப்புடன், ‘ இல்ல, இது இங்கயே இருக்கட்டும் .’ என்று கொஞ்சம் தூரம் நகர்ந்தவள் நின்று, ‘ அதுக்கு கூண்டுக்குள்ள இருக்கப் புடிக்காது ..அப்புறம் ரொம்ப முக்கியமான விசயம்நீ திருப்தி பண்ணப் போன ஸ்டோரிலாம் அதுக்கு போர் அடிச்சுப் போயிருச்சாம்என்றவாறே நகர்ந்தாள்

அதற்குஆம்என்பது போல கார்கியின் கீச்சுக்குரல் பின்னணியாக எழும்பிப் பறந்தது

********

zhafilmotainment@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button