இணைய இதழ் 117கவிதைகள்

ஒளியன் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

சட்டென அரும்பி
சட்டென மொக்கெடுத்து
சட்டென மலர்ந்து
சட்டென உதிர்ந்து
சடாரென ஒருநாள்
செத்தும் போகிறது
ஆம்,
இந்த உறவுகள்
முறியவும்
நெறித்து வளரவும்
சஞ்சலமின்றி
கதைகளாகிறது காலம்.

*

சரசரவென புரள்கின்றன
சருகுகள்
மளமளவென
வளர்ந்ததைப் போலவே!

*

யாருக்கும் எதுவும் ஆகிவிடக் கூடாது
என்று நினைத்தேன்

எனக்குதான் என்னமோ ஆகிவிட்டது.

*

மலை போல் நம்பினேன் உன்னை
நீ மணல் சரிவாக மாறிய போதும்
புதைபடும் நொடியில்
முளைத்தெழுவேன் என்றே
புன்னகைத்தேன்
இப்போதும்
காத்திருக்கிறேன்
ஒரு மலர் வளையமாவது கொணர்வாய் என.

*

சைக்கிள் குறுக்கே வந்த சிறுமி
வெடுக்கென ஒதுங்கினாள்
சைக்கிளில் இடிபட
அஞ்சி மருண்டனள் என
திரும்பிப் பார்க்கிறேன்.
நமட்டுச் சிரிப்போடு
நான் நிலை தடுமாறியதை
நின்று இரசித்துகொண்டு இருந்தாள்.

இப்படியும் விளையாட
யார் சொல்லித் தந்தது?

deepakmh979@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button