லாவண்யா சுந்தரராஜன்
-
இணைய இதழ்
லாவண்யா சுந்தரராஜன் கவிதைகள்
1. புகைப்படமும் பிம்பமும் பிம்பத்தை ஆடியில் வரைந்தேன்புகைப்படத்தைஓளியில் பூட்டினேன்வரைந்ததும் பூட்டியதும் வெவ்வேறு இடத்தில் படமும் பிம்பமும் நிஜமல்லநிழலும் அல்லஇரண்டும் நானுமல்ல படத்தில் சிரித்ததில்லைஎப்படி மறைப்பது தோளிலிருந்து தொங்கும் குழப்பங்களைஅடிமையென கைகளை இறுகக் கட்டிக் கொண்டுபயம் பீடித்தவளென கைப்பையைப் பற்றிக் கொண்டுபோலிப் புன்னகையைப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
லாவண்யா சுந்தரராஜன் கவிதைகள்
கழிவறை கவிதைகள் கழிவறையில் மலர்ந்த மலர் கழிவறை பீங்கானின் விளிம்பில் கிளிமூக்கென வளைந்த வாயுடை புட்டியிலிருந்து கோலம் இடுவது போல கரண்டியிலிருந்து தோசை மாவைச் சுழற்றி ஊற்றுவது போல லாகவமாய் சுத்திகரிப்பு திரவத்தைப் பரத்தி சுழற்றினேன் தொடர்பற்ற துளிகள் விழ விழ புள்ளியிலிருந்து கோடாகி வரிவரியாய் அடர்ந்த நீலம் மேலிருந்து கீழாய் இறங்கியது நீல வரிகளுக்கு இடைப்பட்ட வெண்மை வெறும் வெள்ளை இல்லை அங்கே சிறுபிள்ளை கிறுக்கிய சித்திரப்பூ ஆயிரம் மலர்ந்திருந்தன நீலம் இணைந்த புள்ளிகள் மடலாகிக் கீழ்நோக்கி மலர்ந்தன அந்த மலரை நீங்கள் எந்தச் செடியிலும் பார்க்க முடியாது அது ஆண்டவன் என் கை கொண்டு பூக்கச் செய்த அழகு மலர். ***** நிறங்களின் அரசி கழிவறையில் நீல திரவம் பீங்கான் வெண்மையில் இறங்கும் திரையென அப்போது அத்திரை சூடும் வெளிர் நீலம் நீலம் பார்த்த மனம் இத்தனை இளகுவதாலோ நீலம் அத்தனை நீலமாய் இருப்பதாலோ நீலம் என்பது நிறம் மட்டும் இல்லாததாலோ நீலம் என்பது நிறங்களின் அரசி அங்கே நீலமா விட்டுக் கொடுக்கிறது இல்லையில்லை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
லாவண்யா சுந்தர்ராஜன் கவிதைகள்
எலுமிச்சம் பழங்களுக்கு வயதாவதில்லை 1. எலுமிச்சம் பழமொன்றைக் கையில் எடுத்தேன் நான் சின்னஞ்சிறு வயதில் பார்த்து வியந்தது போலவே சீரான உருண்டை வடிவத்தில் இருந்தது சாறு பிழியும் முன்னர் மெல்ல உருட்டினேன் பால்யத்தில் நான் கண்ட அதே மினுமினுப்புடன் என் முன்னே கண் சிமிட்டியது இரக்கமின்றி இரண்டாய் வகுந்தேன் பதின் வயதில் ரசித்த அதே மணத்தை விரித்தது அதே ஆறு பிரிவான அறைகள் மிக மென்மையாக உள்சதை அல்லிகள் எல்லாமே எல்லாமே அப்படியே இருந்தன முதல் சாறு பிழிய மென்மையாய் அதக்கினேன் அப்போது வடியும் சாற்றின் நிறம் என் முதல் தூமையின் தினத்தில் பிழியப்பட்ட சாற்றின் வண்ணத்தைப் பிரதிபலித்தது கசப்பு கலக்காமல் சாற்றைப் பிழிந்தெடுக்க அரைவட்டத் துண்டங்களை மெல்லத் திருப்பி அல்லிகளை உடைத்துடைத்து சாற்றை ஒட்டப் பிழிந்தேன் கன்னிப் பருவத்தில் வெள்ளிக்கிழமை துர்க்கை முன் ஏற்றி வைத்த எலுமிச்சை அகல்களாய் இருந்தன இவ்விரு கிண்ணங்கள் எத்தனை முயன்றாலும் அவை கன்னி பருவத்திற்கு மேல் வளர்வதேயில்லை. *** என் பதின் வயத்தில் சாறு முற்றிலும் பிழிந்த பின்னர் அம்மாவிடம் நான் சொல்வேன் “எலுமிச்சைத் தோலை முகத்தில் தேய்க்கிறேன் முகப்பரு குறையுமாம்…
மேலும் வாசிக்க -
நேர்காணல்கள்
”குழந்தை பெற்றுக் கொள்வதை மாபெரும் வரம் எனத் திரிக்காதீர்கள்” – எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜன்
”குழந்தை பெற்றுக் கொள்வதை மாபெரும் வரம் எனத் திரிக்காதீர்கள்” – எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜன் நேர்கண்டவர்: எழுத்தாளர் கமலதேவி கத்தி மேல் நடப்பது போன்று இந்த நாவலின் பேசுபொருளை கையாண்டு இருக்கிறீர்கள். இதை எழுதும் போது சந்தித்த சவால்கள் பற்றி…
மேலும் வாசிக்க