இணைய இதழ்இணைய இதழ் 75கட்டுரைகள்

திரையில் மேடை – கலாப்ரியா

கட்டுரை | வாசகசாலை

கூத்து, தமிழ்நிலத்தின் பாரம்பரியக் கலை வடிவங்களில் ஒன்று. கூத்திலிருந்து நாடகங்கள் பிறந்தன. கூத்து பெரும்பாலும் புராணங்களையும் அதன் விழுமியங்களான பக்தியையும் பரப்ப உதவியது. புராணங்கள் நிஜத்தில் நிகழ்ந்ததாக நான் நம்பத் தயாரில்லை. அவை உன்னதமான புனைவுகள் என்பதையும் மறுக்கத் தயாரில்லை. சில இனக்குழுக்களுக்கிடையே வீரதீரம் காண்பித்தவர்கள் பற்றிய சித்திரங்களே புராணங்களின் அடிப்படை என்று ராகுல சாங்கிருத்தியாயன் போன்றவர்களே சொல்லுவார்கள். அவற்றிலும் அன்றையச் சமூக அமைப்புக்கு சில நெறிமுறைகளும் வழிகாட்டல்களும் உள்ளார்ந்து இருந்தன. அதை வைதிகம் தன் வசதிக்குப் பயன்படுத்திக் கொண்டது. இதெல்லாம் இப்போது நாம் பேசப்போகிற விஷயங்களில்லை.

திரைப்படக்கலை உதயமான போது புராண நாடகங்களிலிருந்தே கதைகளை எடுத்துக் கொண்டார்கள்( இது குறித்து நான் ஏற்கெனவே சில கட்டுரைகளில் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன்). பம்மல் சம்பந்த முதலியார், சங்கரதாஸ் சுவாமிகள் ஆகியோர் ஆரம்பித்து வைத்த நாடக மறுமலர்ச்சி, தமிழ் நாட்டில் திராவிட இயக்கம் வேரூன்ற ஆரம்பித்த போதுசமூக நாடகங்கள் தோன்றி இன்னும் பிரபலமாக ஆரம்பித்தன எனலாம்.இதன் ஆரம்பப் புள்ளியாக டி.கே.எஸ் சகோதரர்கள் போன்றோரும் அவர்களிடமிருந்து பிரிந்து சென்ற எஸ்.வி.சஹஸ்ரநாமம், என்.எஸ்.கே நாடகமன்றம், கே.ஆர்.ராமசாமி போன்றோரும் சீர்திருத்த நாடகங்களை நடத்தினர். அவற்றில் அண்ணா, கலைஞர் போன்றோரின் நாடகங்கள் முக்கியமானவை.

அண்ணாவின் நாடகங்கள், வேலைக்காரி ஓரிரவு போன்றவை திரைப்படங்களான போது பலமான அதிர்வுகளை ஏற்படுத்தின. அண்ணா என்.எஸ்.கேவுக்காக எழுதினநல்ல தம்பிஅவரது கொள்கைகளை உள்ளார்ந்து கொண்டிருந்தது. நல்ல தம்பி படத்தில் என்.எஸ்.கே ஒரு நாடகப் பைத்தியமாகவே அறிமுகமாகிறார். “நாட்டுக்குச் சேவை செய்ய நாகரீகக் கோமாளி வந்தானய்யா..” என்று நவீன கூத்துக் காட்சிகளும், நந்தனார் சரித்திரத்தில் இருந்து பகடியாகக் கிந்தனார் கதாகாலட்சேபம் நடத்துவார். “விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டிஎன்று விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களில் வந்தவற்றையும் வரப்போகிறவற்றையும் பாடிக் காண்பிப்பார். என்.எஸ்.கே. படத்தில் பானுமதி அறிமுகக் காட்சியே கிளியோபாட்ரா ஆண்டனி நாடகம்தான். இவை நாடகத்தின் தாக்கத்திலிருந்து சினிமா மீளவில்லை என்பதையும், அந்த நேரத்தில் சினிமாவில் இன்னும் அறிமுகமாகியிராத பாடல் காட்சிகளுக்குப் பதிலியாகவும் கொள்ளலாம்.பாகவதர் பி.யு.சின்னப்பா படங்களின் பாடல் காட்சிகள் வேறு விதம், காரணம் அவை புராண சரித்திரப் படங்கள்

.வி.எம்.படங்களில், ‘வேதாள உலகம்‘, ‘நாமிருவர்போன்ற படங்களில் நாட்டிய நாடகங்கள் அங்கங்கே வருவதை வழக்கமாக வைத்திருந்தனர். அந்தக்கால கதாநாயகிகளுக்கு முகவெட்டும் உடற்கட்டும் நன்றாக இருந்தாலும் நாட்டியம் அவ்வளவு வராது அதற்குப் பதிலியாக முறைப்படி நடனம் கற்ற குமாரி கமலா நடனம் தவறாது இடம் பெறும். ‘பராசக்திபடத்தில் பண்டரிபாயோ ஸ்ரீரஞ்சனியோ நடனம் ஆடவே வராதவர்கள், அதனால் அதில் `ரசிக்கும் சீமானைமயக்குபவராக, முறையாக நடனம் பயின்ற குமாரி கமலா நடனம் ஆடுவார். கலைஞரின்குறவஞ்சிபடத்தில் நாட்டிய நாடகமாக திரிகூட ராசப்பக் கவிராயரின்குற வஞ்சிபாடல் ‘’செங்கையிற் வண்டு கலின் கலின் என்று ஜெயம் ஜெயம் என்றாடபாடலை சிதம்பரம் ஜெயராமன் பாட, எல்.விஜயலட்சுமியும் இன்னொருவரும் தாளம் தப்பாமல் சுழன்று ஆடுவார்கள். சாவித்ரியும் வருவார் அந்தக் காட்சியில். ஆடினேன் என்று பெயருக்கு சில மூவ்மெண்ட் கொடுப்பார். இசைச்சித்தர் அனுபவித்துப் பாடியிருப்பார்.

.வி.எம்மின் ஆஸ்தான இயக்குநரான கிருஷ்ணன்பஞ்சு இரட்டையர்களுக்கு செண்டிமெண்டாக ஒரு குட்டி நாடகக் காட்சி வைக்க வேண்டும். ‘தெய்வப்பிறவிபடத்தில் தங்கவேலு பார்ட்டி நடத்தும் நவீன குசேலர் கதாகலட்சேபம், ‘அன்னைபடத்தில் லைலா மஜ்னு நகைச்சுவை நாடகம். பல பழைய சினிமாப்பாடல் டியூன்களை ஒட்டவைத்து நாகேஷ் சந்திரபாபு நடத்தும் நாடகம் படத்தின் சீரியஸ்தன்மையிலிருந்து ரிலீஃப் தரும். ‘சர்வர் சுந்தரம்படத்திலும் ஒரு குட்டி நாடகம் உண்டு. `எங்கள் தங்கம்படத்தில் மீண்டும் ஒரு நகைச்சுவை கதாகலட்சேபம். எம்.ஜி.ஆர் குடுமி வைத்த பாகவதராக வந்து அசத்தியிருப்பார். அந்தப் படத்தின் வெள்ளி விழா ஷீல்டே அந்த குடுமி பாகவதர் படம்தான். ‘களத்தூர் கண்ணம்மாபடத்தில் கூட, அது பீம்சிங் இயக்கம் என்றாலும், கமல்ஹாசன் குட்டி முயலாக நடிக்கும் சிங்கம் முயல் பஞ்சதந்திரக் கதை நாடகமாக வரும்.

ஆக, .வி.எம் பேனரிலிருந்து வந்த இன்னொரு ப்ராடக்டான பீம்சிங்கும் இதற்கு விலக்கல்ல. நாடகம் இல்லையென்றாலும் பீம்சிங்கிற்கு ஒரு குரூப் டான்ஸ் கண்டிப்பாக வேண்டும். அது பற்றி வேறு கட்டுரையில் பேசலாம். ஆனால், அவர் இயக்கி கலைஞர் எழுதியராஜா ராணிபடம் நாடகக் காட்சிகளை வைத்தே உருவாக்கிய படம். அதில் வரும் சேரன் செங்குட்டுவன், சாக்ரட்டீஸ் நாடகங்கள் பிரமாதமானவை. சாக்ரட்டீஸ் நாடகம் கலைஞரின் மாஸ்டர் பீஸ். செங்குட்டுவனாக வரும் சிவாஜி பேசும் வசனமும், சாக்ரட்டீஸாக அவரது வாய்ஸ் மாடுலேஷனும் இன்றைக்கும் ஒரு கிளாஸிக். அதை வைத்தே கிளைமாக்ஸ் நகரும். அந்த இரண்டு நாடகங்களும் சினிமா பாட்டுப் புஸ்தகங்கள் போல அச்சடிக்கப்பட்டு அமோக விற்பனையாகின. அது ஒரு ட்ரெண்ட் செட்டெர்

அதே போலஅன்னையின் ஆணைபடத்தில் வரும் சாம்ராட் அசோகன் நாடகமும் பிரபலம். வசனம் முரசொலி மாறன். அந்த வசனப்புத்தகமும் ஒரணா (ஆறு நயா பைசா) விலையில் விற்பனையில் சக்கைப் போடு போட்டது. அசோகன் நாடகம் அநேகமான பள்ளிகளில் மாணவர்களால் நடிக்கப்பட்டது. நான் படித்த பள்ளியில் என் கிளாஸ் மேட் எஸ்.பி.கண்ணன் இதையும் தெய்வப்பிறவி கதாகாலட்சேபத்தையும் பிரமாதமாகப் பண்ணுவான். காமராஜர் முன்னிலையில் கூட அசோகன் நாடகத்தை சோலோவாக நடித்தான். இந்த மாதிரி குட்டி நாடகங்களுக்கு சிவாஜிதான் ஸ்டார். ‘நான் பெற்ற செல்வம்படத்தில் நக்கீரன் தருமி நாடகம். இதில் சிவாஜி நக்கீரராக வருவார். இதையே தருமியாக நாகேஷ் கலக்கதிருவிளையாடல்படத்தில் ஒரு அற்புதமான பகுதியாக வரும். இரண்டிற்கும் வசனம் .பி.நாகராஜன்தான்.

இதிலெல்லாம் சிவாஜி வசனத்தில் அசத்தினால், ‘தாயைப் போல பிள்ளை நூலைப்போல சேலைபடத்தில் வசனமே பேசாமல் பொற்கைப் பாண்டியனாக நடிப்பார். இதில் பாட்டிலேயே கதை நகரும். இதுவும் .பி நாகராஜன் படம்தான். ‘அடுத்த வீட்டுப் பெண்படத்திலும் ஆண்டனி கிளியொபாட்ரா நாடகத்தை அஞ்சலிதேவி குழுவினர் ஆடலும் பாடலுமாகக் காட்டுவார்கள்.. அதுவும் கேவாகலரில். கே.பாலச்சந்தருக்கும் நாடகம் அல்லது மேடை நாட்டியம் ஒரு செண்டிமெண்ட் தான். ‘நீர்க்குமிழியில் நாகேஷும் ஜெயந்தியும் ஒரு மேடை நாட்டியம் ஆடுவார்கள். ‘இரு கோடுகள்படத்தில் பாரதி சிலைக்கு உயிர் வந்து, நாட்டில் நடக்கும் கொடுமைகளையெல்லாம் கண்டு மறுபடி சிலையாகி விடுவார். “பாப்பா பாட்டு பாடிய பாரதி நான் தானே.. நான் பாடிய பாட்டை மீண்டும் கேட்க வந்தேனே…” என்று நாகேஷ் நகைச்சுவையாக ஆரம்பித்து சீரியஸாகி, கடைசியில் சிலையாகி விடுவார்.

பாலசந்தரின்கண்ணா நலமாபடத்தில் சாலமன் அரசன் கதையை பாட்டும் நாடகமுமாக நடித்து அதை கிளைமாக்ஸுக்கும் பயன்படுத்துவார். ‘எதிர் நீச்சல்படத்திலும் ஒரு மேடை நாட்டியப்பாடல் வைத்திருப்பார்.

கலைஞர் படங்களில் மேடை நாடகம் உண்டு என்றால் கண்ணதாசன் படமானரத்த திலகத்திலும்சிவாஜி சாவித்ரி ஒத்தெல்லோ டெஸ்டிமோனாவாக நடிப்பார்கள். ‘நவராத்திரிபடத்தில் நவ அவதாரங்களில் ஒரு அவதாரமாக கூத்துக் கலைஞனாகவே வந்து அதகளப்படுத்தியிருப்பார் சிவாஜி. கூடவே சாவித்ரியும். ‘அரசிளங்குமரிபடத்தில் கூத்துக்கலைஞர்களாக நடித்து எம்.ஜி.ஆரும் ராஜ்சுலோசனாவும் வில்லன் நம்பியாரிடமிருந்து தப்பித்துப் போவார்கள்.

இதெல்லாம் 1980களுக்கு முந்திய திரைப்படத்தில் வந்த காட்சிகள். அதற்கப்புறமும் இருக்கலாம். ஆனால், நாடகத்திலிருந்து வந்த தமிழ் சினிமா, “கன்று தாயை விட்டு சென்ற பின்னும் அது நின்ற பூமிதன்னை மறப்பதில்லைசென்று வா மகனே சென்றுவா..” என்றுகாளிதாஸ்படத்தில் கண்ணதாசன் எழுதி கே பி.எஸ் பாடியது போல, நாடகத்தாயை மறக்கவில்லை என்று காண்பிக்க, அவ்வப்போது திரையினூடே மேடை நாடகங்களும் வந்து கொண்டே இருக்கும் .

 ********

kalapria@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button