
மற்ற வண்டிகளை விட
லாரிகளுக்குத்தான் எத்தனையெத்தனை
அலங்காரங்கள்
ஜோடனை முகங்கள்.
அதன் சதுரக் கண்களில்
வழிந்தோடும் மழையை
உடைந்த வெள்ளை வளையலின் அரைவடிவில் துடைக்கின்றன
‘வைப்பர்’ கரங்கள்.
ஒரு பின்னிரவு பரதேசத்தில்
கரங்கள் சோர்ந்திட
கண்களில் அருவியிரண்டு
அடர்த்தியாக கொட்டியது.
தேசிய நெடுஞ்சாலையில்
சிராய்ப்புகள் வாங்கிய அருவிகளை
சாவி கடிகாரத்தின் ‘பெண்டுலமாக’
மின்கம்பத்திலிருந்து பார்க்கிறார்
காக்கிநிற டிரைவர்.