சிறு சேமிப்பு
சின்ன சின்ன மழைத்துளிகள்
சேர்ந்தே ஆறாய்ப் பாய்கிறது
சின்ன சின்ன மணல்துகள்தான்
சேர்ந்து மலையாய் உயர்கிறது
சின்ன சின்ன பூக்கள் தான்
சேர்ந்து பூமாலை ஆகிறது
சின்ன சின்ன விதைகள்தான்
வளர்ந்து மரமாய் எழுகிறது
சிறுக சிறுக சேமித்தால்
சிறக்கும் வாழ்க்கை உணர்வீரே!
சிக்கனமாக செலவு செய்வோம்
சேமித்து வாழ்வில் உயர்வடைவோம் !