வெ.இறையன்புவின் ‘அவ்வுலகம்’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் – ஜான்ஸி ராணி
![](https://vasagasalai.com/wp-content/uploads/2020/03/Iraianbu2.jpg)
தலைப்பு : அவ்வுலகம்
ஆசிரியர் : வெ.இறையன்பு
வகைமை : நாவல்
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சொர்க்கம்_நரகம்,பாவம்_புண்ணியம் என்பதும்,மரணத்திற்குப் பின் வாழ்வுண்டு என்பதும் மதங்களால் கட்டமைக்கப்பட்டதென்றாலும் மனிதர்களுக்கு மரணம் பற்றிய பயத்தினாலும் வாழ்க்கை மீது கொண்ட மாளாத பிடிப்பினாலும், “வாழ்வென்பது மரணத்திற்குப் பிறகும் நீடிக்கிறதென்று” நம்ப ஆசைப்பட்டத்தின் விளைவே இந்த நம்பிக்கையென நினைக்கிறேன்.
த்ரிவிக்ரமன் என்ற கதாபாத்திரத்தின் வழியாக இந்நாவல் மரணத்திற்குப் பிறகு அவர் சென்றடையும் உலகில் நிகழும் சம்பவங்களின் தொகுப்பாகும். அதன் வழியே அவர் வாழ்ந்த வாழ்க்கை நமக்கு விவரிக்கப்படுகின்றது. தத்துவார்த்தமாக பல கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றது.
![](https://vasagasalai.com/wp-content/uploads/2020/03/images-80.jpeg)
Non-linear உத்தியில் சொல்லப்பட்டிருக்கும் இந்நாவலை அவரவர் நம்பிக்கைகளுக்கேற்ப Magical Realism என்றோ Para Science என்றோ வகைப்படுத்தலாம். “Logic”க்கை கொண்டு எல்லாவற்றையும் அளந்துவிட முடியாதென நினைக்கும் நான் இரண்டாவதாக வகைப்படுத்திக் கொள்கிறேன்.
“எவ்வாறு நீ உன் ஓய்வு நேரத்தைக் கழித்தாய்?
“என் புத்தக சாம்ராஜ்ஜியத்தில் நான் கரைந்து போவேன்“
“படிப்பதைப் பெரிய வேள்வியாகக் கருதவேண்டியதில்லை.எப்படிப்பட்ட புத்தகங்கள் வாசிக்கப்படுகின்றன என்பதில்தான் அது பயனுள்ளதா என்பது முடிவாகும்.அதிலும் முக்கியம் அந்தப் படிப்பு வெறும் அறிவு குறித்ததா,அல்லது வாழ்வைச் செறிவாக்கவல்லதா என்பதில்தான் சூட்சுமம் இருக்கிறது.ஏனென்றால் பெரிய படிப்பாளிகளாக இங்கே வருபவர்கள் பலர் மிக மட்டமான குணநலன்களை உடையவர்களாகவும்,அவர்கள் எழுதியதற்கும்,வாழ்விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையும் உடனடியாக உணர முடிகிறது.’
(நூலிலிருந்து)
~~~