
முலைகளில்
கண்ணீர்
கருப்பையில்
துயரம்
•
கூதிர்காலம்
மூங்கிலின்
வயிற்றில்
சிசுவென புரண்டு அலைகிறது
தழல்
காடு வெயில்பூச
மூங்கில் அடிவயிற்றை உரசுகிறது
தழல்
உண்கிறது
தாயின் கருவறையை
•
மௌனத்தை
உடைத்துத்திறக்கும்
பெருமூச்சு
வலியை உண்கிறது
அடிவயிற்றில்
அர்த்தம் அறைகிறது
சொற்கள்
உன்மத்தத்தை அருந்த
இதயம்
உதட்டுத்தசை ஆகிறது