
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! வாசகசாலை கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து ஒரு இலக்கிய அமைப்பாகச் செயல்பட்டு வந்தாலும், 2016-ஆம் ஆண்டு துவங்கி ஒரு பதிப்பகமாகவும் இயங்கி வருவதை நண்பர்கள் அறிவீர்கள். இதுவரை 40 நூல்களை பதிப்பகம் சார்ந்து வெளியிட்டுள்ளோம்.
இதற்கு முன்புவரை புத்தகக் கடைகள் + புத்தகக் கண்காட்சிகள் மூலம் மட்டுமே நாங்கள் விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது இந்த கொரோனா சூழலின் காரணமாக வாசகசாலை நேரடியாக புத்தகங்களை விற்பனை செய்கிறது. பெரிய பதிப்பகங்களே இந்த சூழலில் பாதிக்கப்பட்டுள்ள தருணத்தில், வாசகசாலையும் பெரும் சிரமத்திலும், பொருளாதார நெருக்கடிகளிலும் சிக்கியுள்ளது. அதற்கு புத்தக விற்பனைதான் சிறிதேனும் கைகொடுக்கும் என நம்புகிறோம். எனவே சிறப்புத் தள்ளுபடி + விசேஷ சலுகைகளை அறிவித்து, இதுகுறித்த தகவல்களை வாசகசாலை முகநூல் பக்கம் மற்றும் குழுவில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறோம்.
வாசகசாலை நிகழ்வுகள் தொடர்பான அறிவிப்புகள் + இணையதள படைப்புகள் குறித்த அறிவிப்புகளை பகிர்ந்து கொள்ள ஏற்படுத்தப்பட்டுள்ள நமது வாட்ஸப் குழுக்களில், தொடர்ச்சியாக புத்தக விற்பனை தொடர்பான தகவல்களைப் பகிர்வது உங்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று கருதுகிறோம். எனவே அதற்கென்று தனியான வாட்ஸப் குழு ஒன்றினை உருவாக்கியுள்ளோம்.
இந்தக்குழுவில் வாசகசாலை நூல்கள் தொடர்பான அறிவிப்புகள், விசேஷ தள்ளுபடிகள் சிறப்புச் சலுகைகள், புதிய நூல்கள் தொடர்பான அறிவிப்புகள், முன் வெளியீட்டுத் திட்டங்கள் மற்றும் விரைவில் வெளியாகவுள்ள கிண்டில் நூல்கள் தொடர்பான அறிவிப்புகள் உள்ளிட்டவை மட்டும் இடம்பெறும். மற்றபடி நமது இதர குழுக்களுக்கு உள்ள விதிமுறைகள் அப்படியே இந்தக் குழுவிற்கும் பொருந்தும். விருப்பமுள்ள நண்பர்கள் மட்டும் கீழ்க்காணும் லிங்கைப் பயன்படுத்தி குழுவில் இணைந்து கொள்ளலாம். எப்போதும் போல ஆதரவு தரும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றியும் அன்பும்!