வணக்கம், எங்கள் அனைவருக்கும் முதன் முதலில் முகநூல் வாயிலாகத்தான் இறுக்கமான, இணக்கமான நட்பு உண்டானது.இலக்கிய வாசிப்பை பொதுப்பண்பாகக் கொண்டு அமைந்த ஒரு குழுமத்தின் மூலமே இத்தகைய நட்புகள் கிட்டப்பெற்றன.காலம் சென்றுக்கொண்டே இருக்க, வெறுமனே பேச்சு, பதிவு, அரட்டை என்பதோடு நம் இலக்கிய ஆர்வம் தேங்கிப் போக வேண்டுமா ? என எங்களுக்குள் அடிக்கடி கேள்விகள் ஒவ்வொரு நண்பர்களிடமிருந்தும் வந்த வண்ணமிருந்தது.
தோழர், வணக்கம்.. கடந்த 12 ஆண்டுகளாக தேவகோட்டை, தே பிரித்து மேனிலைப்பள்ளியில் வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றச் செயலாளராகவும் காரைக்குடி வள்ளுவர் பேரவை, வீறுகவியரசர் முடியரசனார் அவைக்களம் அமைப்புகளிலும் செயலாளராகப் பணியாற்றி வருகிறேன். பள்ளியில் மாணவர்களின் சிற்றிதழ், ஹைக்கூ கவிதை நூல், ஆசிரியர்களின் சிற்றிதழ், கட்டுரைநூல் உள்பட 10 நூல்களை வெளியிட்டுள்ளேன்.. என் மாணவர்கள் 9 பேர் சுட்டிவிகடன் மாணவப் பத்திரிகையாளர்களாகச் செயல்பட்டுள்ளனர். எங்கள் பள்ளியில் தங்கள் வாசகசாலையைத் தொடங்க முடியுமா? வழிமுறைகள் என்னென்ன? என் அலைபேசி எண்: 9842589571.