கதைக்களம்
-
Mar- 2024 -21 March
அன்பின் கொடிகள் – யாத்திரி
அது டைரி அல்ல. கோடுபோட்ட ஒரு குயர் நோட். தரமற்ற சாணித்தாளினால் ஆனது. அதன்மீது இன்க் பேனா வைத்து எழுதப்பட்டு இருந்ததால் மை தீற்றல்கள் ஒவ்வொரு எழுத்தை சுற்றியும் பசும்ரோமங்கள் போலப் படர்ந்திருந்தது. முகப்புப் பக்கத்தில் சொர்ணலதாவிற்கு என்று எழுதப்பட்டு இருந்தது.…
மேலும் வாசிக்க -
21 March
இரும்பு மனிதர்கள் – எஸ்.மைக்கேல் ஜீவநேசன்
விசாரணை அறையில் அமர்ந்திருந்தான் சண்முகம். அந்த தொழிற்சாலையின் மையத்தில் நான்கு பக்கமும் கண்ணாடிகளால் தடுக்கப்பட்ட அறை அது. தவறு செய்பவர்கள் மட்டுமே அந்த அறையில் இருப்பார்கள். அனைவரும் அதை காணும்படி அமைக்கப்பட்டுள்ளது.பொது.மேலாளர் முன்புதான் விசாரணை நடக்கும். பொது.மேலாளர் தவிற மற்ற அனைவருக்குமே…
மேலும் வாசிக்க -
Aug- 2019 -28 August
மாயக் குதிரை
அது சிவப்பு நிற ஏழு… அதற்கு கண்களும் உதடுகளும் இருந்தன. பனியில் சறுக்கிக்கொண்டே வந்து இவளைக் கடந்துபோயிற்று. வெள்ளைவெளேரென்ற பனியில் கருஞ்சிவப்பாய் அது போவதைப் பார்க்கப் பரவசமாக இருந்தது. சற்று தொலைவு போய் திரும்பி வந்தது. எங்கிருந்தோ மேலும் இரண்டு ஏழுகள்…
மேலும் வாசிக்க -
28 August
தாழம்பூ
இடத்தை மாற்றிக்கொண்டால் துக்கமும் ஆறக்கூடும் என்ற நப்பாசையே, மது தன்னுடைய ஊருக்கு வரும்படி என்னை அழைத்தபோது அவளது வேண்டுகோளை ஏற்கச்செய்தது. ஆனால், எங்குபோனாலும் காயம்பட்ட மனத்தையும் கூட்டிக்கொண்டுதான் போகமுடிகிறது. புதிய இடத்தில் சற்று தணிந்தாற்போலிருந்த ஞாபகங்கள் ஓரிரு நாட்களிலேயே உள்ளுக்குள் குமுழியிடத்…
மேலும் வாசிக்க -
28 August
மலைகள் இடம்பெயர்ந்து செல்வதில்லை!
முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மைதிலியை வவுனியாவில் கண்டேன். சந்தையில் மரவள்ளிக் கிழங்குகளைப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள். காலம் அவளை உருக்குலைத்திருந்தது. என்றாலும், மேடிட்ட நெற்றியில் வெளேரெனத் தெரியும் பிறை வடிவிலான தழும்பையும், கண்களையும் அதனால் ஒன்றுஞ் செய்யமுடியவில்லை. தற்செயலாக நிமிர்ந்தவள் என்னைப்…
மேலும் வாசிக்க -
Jun- 2019 -12 June
முட்கள் நகர்கின்றன
கயல்விழி தான் பொம்முவை அறிமுகப்படுத்தினாள். பொம்முவை என்றில்லை, பட்டுநூல் ஆபரணங்கள் செய்யும் கீர்த்தியை, பெங்கால் காட்டன் விற்கும் லோகேஷை, ஹைதராபாத் முத்துகள் கொண்டு வரும் நாயுடுவை …இப்படி யோசித்துக் கொண்டே போனால் தனக்குத் தெரிந்தவர் எல்லோரையும் கயல்விழி தான் அறிமுகப்படுத்தியிருப்பாளோ எனத்…
மேலும் வாசிக்க -
May- 2019 -16 May
தலைப்பிரட்டைகள்
அறை முழுவதும் அந்த சொல் சிதறிக்கிடப்பதாகவே உணர்ந்தேன். ஒவ்வொரு முறையும் அச்சொல் மனதில் எழும்போதெல்லாம் விரல் விட்டு எண்ணியிருந்தால் ஒருவேளை படிப்படியாக சொற்கள் மறைந்து எண்ணிக்கை மட்டும் எஞ்சியிருக்கக்கூடும். அச்சொல்லிற்கென தனித்தவொரு உருவம் மூண்டிருப்பதை சமீப நாட்களாக நான் கவனித்துவருகிறேன். அதற்கென…
மேலும் வாசிக்க -
8 May
கனவு காணும் உலகம்
தர்மு ஒரு கடின உழைப்பாளி – ரக்சி ஓட்டுனன். காலையில் பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்பி வைத்துவிட்டு, மதியத்துடன் வேலையை ஆரம்பிப்பான். இரவு இரண்டு மணிக்குள் வீடு திரும்பிவிடுவான். அன்று தனது கடைசிப் பிரயாணி ஒருவரை விமானநிலையத்திலிருந்து அவரது வீட்டில் இறக்கிவிட்டு, தனது…
மேலும் வாசிக்க -
Apr- 2019 -16 April
“நிராகரித்தலின் கனவு”- ஸ்ரீதேவி மோகன்
சுற்றித் தூங்கிக்கொண்டிருப்பவர்களைப் பார்க்கும் பொழுது சற்றுப் பொறாமையாக இருந்தது. இரவு நேரப் பேருந்து பயணம்.தூக்கத்தைக் கூட வற்புறுத்தி வரவழைக்க வேண்டிய வாழ்க்கையை நினைத்துக் கொஞ்சம் சலிப்பு தட்டியது.நரகம் என்று வேறொன்றும் இல்லை. தூக்கம் வராத இரவுகள் தான் அவை.தூக்கமற்ற இரவுகளாலே நிறைந்திருக்கிறது…
மேலும் வாசிக்க -
5 April
தாகம்
வருஷங் கூடி தீபாவளிக்கென்று மட்டும் வெறும் நூறு ரூபாய்தான் நான் அவனுக்குக் கொடுத்திருக்கிறேன். அதற்கு மேல் என்னவோ எனக்கும் கை வந்ததில்லை. அவனும் மேற்கொண்டு கேட்டதில்லை. “ரொம்பச் சந்தோசம் சார்…” இவ்வளவுதான் அவன் வார்த்தை. துளி மனக்குறை இருக்காது அதில். இத்தனைக்கும்…
மேலும் வாசிக்க