கவிதைகள்
-
Feb- 2026 -10 February
ஆஷா ஞானமரியம் கவிதைகள்
வேலி பராமரிக்கவோதண்ணீர் ஊற்றவோவேலி போடவோயாருமில்லை என்றுதெரிந்துதான்முட்களால் வேலிஅமைத்துவிட்டுபூக்கிறதுகள்ளிச்செடி. * பெயர் தொலையாமல்ஆவணங்களில்ஒட்டிக்கொண்டுவருகிறதுஓடிப்போன அப்பனின்பெயர். * ஒப்பனை உதிர்ந்து போனஇலைகள்சருகாக மாறுவதைவேடிக்கை பார்த்துக்கொண்டேபூக்களால் ஒப்பனைசெய்கிறதுஇலையுதிர் காலத்தைக்கடந்து வந்த மரம். * விளையாட்டு கோடி மலர்கள்அவன் வருகைக்காககாத்திருக்கின்றனஎன்று தெரிந்தும்பனித்துளியைகாதலோடு உருக வைத்துவிளையாடிக் கொண்டிருக்கிறான்சூரியன். *…
மேலும் வாசிக்க -
10 February
அன்றிலன் கவிதைகள்
காற்றில் துருப்பிடிக்கும் வயதைக் கண்டுபிடித்தல் முதன் முதலில்எனது வயதை அறியமுதலாம் வகுப்பு ஆசிரியர்இடக்காதை வலது கையால்தலை மீது வைத்துத் தொடக் கூறினார் சிலருக்கு எனது காது போலவேஇருந்தும்அதைத் தொட முடியாதெனவயதைக் குறைத்துக் கொண்டனர் எங்கோவொரு இடத்தில்வயதுயாருக்கேனும் துருத்தியபடியிருக்கிறதுமுன்போ அல்லது பின்போ. வரைகட்டத்…
மேலும் வாசிக்க -
Jan- 2026 -10 January
கரிகாலன் கவிதைகள்
ரகசியச் சுடர்~ஒரு ரகசியம் அவ்வளவு அற்புதமானதுஇந்தப் பகல் பிரகாசமாக இருந்ததுஎனக்குள் எந்த மர்மத்தை ஒளித்துவைத்திட முடியும்?என்பதுபோல் அதற்கொரு திமிர்ஆற்றின் போக்கில் நீலமேகம்மிதந்து செல்கிற பகலிதுபளிங்குபோல துலக்கமுறும்இப்பகலால் என்ன சுவாரஸ்யம்?கிளைகள் மீது மஞ்சள் கொன்றைகள் மலரும் பகற்பொழுதில்ஒரு மரத்தின் ரகசியம்வேர்களாக இருக்கின்றனமறைந்துகிடக்கும் கருணையின்…
மேலும் வாசிக்க -
10 January
பத்மகுமாரி கவிதைகள்
ஒன்றும் அவசரமில்லை ○ பத்திரப்படுத்தியிருக்கிறேன் யாருக்கும் கையளிக்க விரும்பாத ஒரு சொல்லை தொலைக்கவும் மனமில்லை அத்தனை சுலபமில்லை அறிந்தே தொலைதல் சத்தமில்லாமல் வெளியேறிட அவசியமாக இருக்கிறது நான் மட்டுமே அறிந்து வைத்திருக்கும் பெருமழையின் வருகை காத்திருக்கிறேன் சொல்லப்படாத அவகாசத்தை நம்பி ○○○…
மேலும் வாசிக்க -
10 January
ச.சக்தி கவிதைகள்
பகலில் மழை இரவில் நட்சத்திரங்களின் வருகை இப்பொழுது நான் யாருடனாவது பேச வேண்டும் குழந்தைகள் வரைந்த நிலவின் நிழலில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறது நான் எழுதப்போகும் ஒரு கவிதைக்கான சொற்கள் நூறு. * ”நாளைக்கு வா சந்திக்கலாம்” என்கிறாய் இன்றைய இரவை என்ன…
மேலும் வாசிக்க -
10 January
ப.மதியழகன் கவிதைகள்
புத்தனுக்கு ஏதோ நடந்துவிட்டது! தனித்திருத்தல் பழகிவிட்டால் வேறு எந்தப் பிரிவைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை எனது இழப்பு ஒவ்வொன்றும் உனது வெற்றிக்கான வாய்ப்புகளை மேலும் சாத்தியமாக்குகிறது மனிதனாக இருப்பது வெட்கக்கேடானது சாதாரணப் பறவை தனது அலகினால் இவ்வுலகத்தை கறைபடுத்த இயலாது அதிகார…
மேலும் வாசிக்க -
10 January
இளையவன் சிவா கவிதைகள்
மன்னித்து விடுகையில் இறக்கையாகிப் போகும் மனதைப் போல மன்னிப்பைக் கோருகையில் கனத்துக் கிடக்கும் பாறாங்கல் மனதை உங்களின் ஒற்றைப் புன்னகையோ ஒரு துளிக் கண்ணீரோ லேசாக்கி விடலாம் கேட்பதும் யாசிப்பதும் எளிதென முடிந்த பின் கொடுப்பதற்கு மட்டும் கொம்பு சீவி நிற்பதேன்?…
மேலும் வாசிக்க -
10 January
மோனிகா மாறன் கவிதைகள்
அந்த முதல் மழை மழைக்காலப் பின்மதியம் ஒன்றில் பசிய வண்ணப் பூக்கள் சொரியும் காஞ்சிர மரத்தடியில் நின்றிருந்தோம் தூரத்து மேகங்கள் கருமைகொள்ள வீசும் காற்றில் இலைகளும் கிளைகளும் சுழன்றசைய தரையெல்லாம் புழுதியும் சருகுகளும் சுழன்றெழுந்து மழைக்கு அச்சாரமிடுகின்றன வெம்மை தணிந்து இடியோசையுடன்…
மேலும் வாசிக்க -
10 January
விஜி ராஜ்குமார் கவிதைகள்
எத்தனிப்பு எதற்கான எத்தனிப்பு இவையனைத்தும்? முயற்சியின் முடக்கங்களில் தேங்கி திணறி மீட்டுக்கொண்டு செல்லும் ஒன்றாய் ஏதிருக்க இயலும் இங்கு? நட்பா காதலா உறவா காலமா நானா இல்லை இங்கில்லாத எங்குமிருக்கும் ஏதோ ஒன்றா ஒன்றில்லாத பலவா நிகழ்தகவுகளின் இடுக்குகளில் வழிந்தோடுகிறது காரணம்…
மேலும் வாசிக்க -
10 January
ராஜேஷ்வர் கவிதைகள்
அதீதத்தின் குறியீடு மார்புக்கு நடுவிலிருந்து ஒரு அங்குலம் கீழே கசியத் துவங்குகிறது ருசியற்ற பசி கசியும் பசியை வாரியெடுத்து உண்டு செரிக்கிறது மேற்கில் ஒரு உலகம் காற்றின் ஊடற்ற திசைகளில் எல்லாம் தன் குடல் பரப்பியும் கசிந்தபாடில்லை ஒரு துளி ஈரம்…
மேலும் வாசிக்க