சிறுகதைகள்
-
Jan- 2024 -5 January
பாட்டும் தாளமும் – கமலதேவி
மேற்கு சன்னல் வழி அந்தி வெளிச்சம் தம்பூராவின் தண்டுகளாகத் தரையில் வீழத்தொடங்கியது. வெளியே தோட்டத்தில் கணேஷ் செடிகளுக்கு தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தான். பறிக்காமல் விடப்பட்டிருந்த மிச்ச மலர்களும் உதிர்ந்தன. வெயில் குறைந்து மழை நாட்கள் தொடங்கும் காலம். வானம் வெளிச்சமும் மங்கலுமாக…
மேலும் வாசிக்க -
5 January
மர பீரோ – ஆத்மார்த்தி
1 கவிதா ரேடியோவைத் திருகிக் கொண்டிருந்தாள். ‘கொர் புர்’ரென்று சப்தம் வந்ததே ஒழிய வேறொன்றும் கேட்பதாயில்லை. கண்ணன் அடுத்த மாதம் புது ரேடியோ வாங்கித் தருகிறேன் என்று சொல்லியிருந்தான். “பென் டிரைவ் மெமரி கார்டுன்னெல்லாம் வந்திட்ட பெறகும் இப்பிடி ரேடியோதான் வேணும்னு…
மேலும் வாசிக்க -
5 January
சித்திர புத்திரன் – கலாப்ரியா
ஒரு காலத்தில் ஊரே மங்கம்மா சாலை செங்கல் திட்டு அய்யனார் கோயிலை ஒட்டித்தான் அமைந்திருந்தது. அப்போதெல்லாம் சுற்று வட்டாரத்தில் யார் வீடு கட்ட செங்கல் ஏற்றி அந்த வழியே சென்றாலும் அந்த அய்யனார் கோயிலில் ஒரு கல்லாவது போட்டு விட்டுப் போக…
மேலும் வாசிக்க -
5 January
பச்சை நண்டு – சரவணன் சந்திரன்
பூங்காவனம் பழைய படகுத் துறைமுகத்தில் தெரிகிற கடலையே வெறித்துப் பார்த்து அமர்ந்து கொண்டிருந்தாள். கரிய நிறத்தில் அன்றைக்குக் கிடந்தது கடல். அவள் காலடியில் பச்சை நண்டுகள் ஓலைப் பெட்டிக்குள் இருந்து மேலே ஏற முயன்று கொண்டிருந்தன. அதைக் ‘கட்டு நண்டு’ என்றும்…
மேலும் வாசிக்க -
5 January
தொடரி – எம்.எம்.தீன்
மூன்றாவது ரவுண்டை ஓடி முடித்து நனைந்து உடலோடு ஒட்டிய டீ சர்ட்டை தூக்கி உதறி காற்றை நெஞ்சுக்குள் ஊதியபடி மனோ சார் கேலரியில் அமர்வதையே பார்த்து கொண்டிருந்தான் தங்கையா என்ற தயா. எப்போதும் அதிகாலையிலேயே விழித்துக் கொள்கிறது விளையாட்டு மைதானம். எல்லா…
மேலும் வாசிக்க -
5 January
கவிதையும் கடல்வாழ் உயிரினமும் – சித்துராஜ் பொன்ராஜ்
கவிதை எழுதுவதுகூட கடினமாகிப் போயிருந்தது. கண்ணதாசன் குறுகலான படுக்கையில் சாய்ந்தபடி கைத்தொலைப்பேசித் திரையில் வார்த்தைகளை வெவ்வேறு விதமாய்ப் பிரித்துப் பிரித்து மூன்று வரிகளைத் தட்டச்சுச் செய்தான். பின்பு மெல்லிய சலிப்போடு திரையின் அடிப்பகுதியை ஆள்காட்டி விரலால் பலமாகக் குத்திக் குத்தி அவற்றை…
மேலும் வாசிக்க -
Dec- 2023 -20 December
கவளம் – காளிப்ரஸாத்
கதிர்வேலன் தன் இருக்கையைவிட்டு எழுந்து தண்ணீர் குடிப்பதற்காகச் சென்றான். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குளிர்ச்சியாகவும் சூடாகவும் இதமாகவும் மூன்று நிலையில் வைத்திருக்கும் இயந்திரம் ஓரமாக வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து கீழே பார்த்தபோது சாலையின் அடிமுதல் நுனிவரை தெரிந்தது. எங்கும் வாகனங்கள். பேருந்து முதல் மிதிவண்டி…
மேலும் வாசிக்க -
20 December
Bon Voyage – கே. முகம்மது ரியாஸ்
எனது கடைசி சவாரியை தஞ்சோங் கத்தோங்கில் முடித்துவிட்டேன் அதன் பயணி சில்லரையில்லாமல் மீதம் இருந்த இரண்டு வெள்ளியை அன்பளிப்பாகத் தந்தார். இந்நாளின் முடிவில் ஒரு அன்பளிப்பு தந்த கடவுளுக்கு நன்றி. அன்பளிப்பு தந்த எனது கைகளுக்கு முத்தமிட்டாயா என்று கடவுள் என்னிடம்…
மேலும் வாசிக்க -
19 December
அம்மு – ஆமினா முகம்மத்
அவளை இந்த நிலையில் இன்று, இங்கு சந்திப்பேன் என நினைக்கவே இல்லை. “தற்கொல இஸ்லாத்துல ஹராம்னு மட்டும் இல்லைன்னா என்னைக்கோ செத்துப் போயிருப்பேன் க்கா” கடைசியாய் இப்படித்தான் என்னை அதிர்வுகளுக்குள் நிறுத்திவிட்டு விடைபெற்றாள். அவள் சொல்லிச் சென்று பத்து வருடங்களுக்கும் மேலாகி…
மேலும் வாசிக்க -
19 December
விடுவிப்பு – கா.சிவா
ஊரிலிருந்தவர்கள் அனைவரும் அந்த மரத்தினருகில் கூடியிருந்தார்கள். மகளின் இரண்டாவது பிரசவத்திற்காக புதுக்கோட்டைக்குச் சென்ற ராமய்யா, திருப்பூரில் மகனை போலீஸ் பிடித்ததால் சென்ற மணியன், இரண்டு ஆண்டுகளாக கட்டிலை விட்டு இறங்காத சுப்பம்மா ஆகியோர் மட்டும் வரவில்லை. பள்ளிக்கு விடுமுறை தினம் என்பதால்…
மேலும் வாசிக்க