சிறுகதைகள்
-
Oct- 2022 -17 October
இளநகை – கமலதேவி
பத்துநாட்களுக்கு மேலாக தினமும் சாயங்காலம் வரும் மழை இன்றும் தப்பாமல் வந்து கோலத்தை நனைத்து அழித்துக் கொண்டிருந்தது. பக்கத்துவீட்டு ஓட்டுக்கூறையில் இருந்து வழிந்த நீர்த்தாரைகள் சாக்கடையில் கலந்து மறைந்தன. மழையைப் பார்த்தபடி வாசல்படியில் பால்காரனை எதிர்பார்த்து அமர்ந்திருந்தேன். வித்யாவின் கணவர் சதீஸ்…
மேலும் வாசிக்க -
16 October
FiCoFE – மால்கம்
தலைமைச் செயலகம். காலை 9 மணிக்கு மேல் பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலர்களுக்கு மத்தியில் திடீரென பதற்றம் அதிகரித்திருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காவலர்கள் மத்தியில் இருந்த பரபரப்பு எதுவுமின்றி ஊடகவியலாளர்களின் அறை அமைதியாக இருந்தது. அறையின் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பேசும் மின்…
மேலும் வாசிக்க -
1 October
போத்து – சிவகுமார் முத்தய்யா
தனபால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். விடிந்தும் விடியாத காலைப் பொழுது. கொல்லைப் புற மரங்களில் அமர்ந்து கும்பலான நார்த்தை குருவிகள் விடியலை அறிவித்துக் கொண்டிருந்தன. வாசலில் திடீரென்று ஒரு அழுகையுடன் கூடிய பெண் குரல் கேட்டது. திடுக்கிட்டு எழுந்து வெளியே வந்தான்.…
மேலும் வாசிக்க -
1 October
ஏடிஎம் காவலாளி – வாஸ்தோ
மனிதனுக்கு மனிதன் உதவுவது இல்லை என்று பலரும் புலம்பக் கேட்டிருப்போம். ஒருசில சமயங்களில் நாமே கூட புலம்பியும் இருப்போம். இருப்பினும் முகமறியா ஒருவருக்கு உதவும் எண்ணம் நமக்குள்ளே தோன்றுவதில்லை. ஏனெனில் நாம் தான் ஏற்கனவே மனிதர்களோடு இருக்கும் நம்பிக்கையைத் தொலைத்து விட்டிருக்கிறோமே.…
மேலும் வாசிக்க -
1 October
அடைக்கலம் தருவதும் மனம் லயிப்பதுமான என் வீடு – எம்.எம். நௌஷாத்
1 தன்னைக் கவிதாயினி என்றழைக்கும்படி அவள் கேட்டுக் கொண்டாள். நான் ‘திருமதி கவிதாயினி’ என்றழைத்ததும் அவள் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருந்தாள். ‘ஆனால், வாஸ்தவத்தில் நான் கவிதாயினி அல்லள். எனக்கு கவிதை எழுத வராது. வாழ்க்கையில் ஒரேயொரு கவிதையையே நான் எழுதியிருக்கிறேன்’ என்று சொன்ன…
மேலும் வாசிக்க -
1 October
பழி – தேவிலிங்கம்
“கோகுலத்துப் பசுக்கள் எல்லாம் கோபாலன் பேரைச்சொல்லி நாலு படி பால் கறக்குது ராமாயி”, என ராமர் கோவில் ஸ்பீக்கரில் பாடல் அலறியது. மார்கழி மாதத்து அதிகாலைப் பனி நாசிக்குள் சென்று முதுகுத் தண்டுவரை குளிர்ச்சியான குறுகுறுப்பாய் மெல்ல ஊடுருவிக்கொண்டிருந்தது. படுத்துக்கொண்டே, வரிசையாக…
மேலும் வாசிக்க -
1 October
வேதனைக்கு வாக்கப்பட்டவர்கள் – நித்வி
“லேய், காமுட்டாப் பயலே எப்புடிப் போற?” – என்று என்னை இடிக்க வந்தவாறு சென்ற பைக்காரனை திட்டிக்கொண்டே அறுபது வேகத்தில் ஆண்டிபட்டி கானாவிலக்கு சாலையில் சென்று கொண்டு இருக்கிறேன். ஆக்சிலேட்டரை முறுக்கினேன் வண்டி அறுபதில் இருந்து தாவி எண்பதைத் தொட்டது. வேக…
மேலும் வாசிக்க -
Sep- 2022 -16 September
ஊரும் மனிதன் – ராம்பிரசாத்
ஒரு சலனம் தோன்றி நான் கண் விழித்தேன். இருளாக இருந்தது. வாயைத் திறந்தேன். இப்போது உருவங்கள் தெரியத்துவங்கின. நீல வானம் ஒரு போர்வை போல் மூடிக்கொண்டிருக்க, மரங்களும், செடிகளுமாக அந்த வனாந்திரம் வளர்ந்திருந்தது. நான் வீற்றிருந்த மலைச் சிகரமும் அதைச்சுற்றியிருந்த காடும்…
மேலும் வாசிக்க -
16 September
குதிரைப் பந்தயம் – பத்மகுமாரி
ஊரே உறங்கிப்போயிருந்தது. அவளுக்கு பொட்டுத் தூக்கம் கூட வரவில்லை. கண் அநியாயத்திற்கு காந்தியது (எரிச்சல் தந்தது). புரண்டு புரண்டு படுக்க, ஒரு சிறு நொடி கண் அயர்ந்தது. மீண்டும் விழித்துக் கொண்டது. மனம் உறங்காமல் எப்படிக் கண் உறங்கும்? மனம் தான்…
மேலும் வாசிக்க -
16 September
அருள் வாக்கு | ஸ்வர்ணா
நடுராத்திரியில் கதவு தட்டும் ஓசை கேட்டு விழித்த ஜெயா பயத்துடன் கதவருகே சென்றாள். அவளது அப்பாவை மருத்துவமனையில் அனுமதித்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. அப்பாவிற்கு ஒத்தாசையாக அவளது அம்மாவும் அங்கேயே தங்கிவிட்டிருந்தாள். தனியே வீட்டிலிருந்த ஜெயாவிற்கு பயம் மேலிட கதவருகே நின்று…
மேலும் வாசிக்க