இணைய இதழ்

  • Feb- 2025 -
    18 February

    யாரவன் – ச.ஆனந்தகுமார்

    இப்படி நடக்குமென கனவிலும் நினைத்ததில்லை. அதெப்படி இவ்வளவு சுவாதீனமாக எந்த பதட்டமும் இன்றி ஒருவன் இப்படி செய்து விட முடியும்? அவனுக்கு இந்தப் படம் முதலிலேயே பரிச்சயப்பட்டிருக்க வேண்டும். சரியாக படத்தின் கிளைமாக்ஸ்கிற்கு ஐந்து நிமிடம் முன்பு மிக  சாதாரணமாக அது…

    மேலும் வாசிக்க
  • 18 February

    சுழல் – ந.சிவநேசன்

    1 கட்சிக்கொடிகள் நாட்டப்பட்ட  வாயிலைக் கடந்து நாங்கள் உள்ளே நுழைய முயன்றபோது ஆர்கே செய்தித்தாள் பார்த்தபடி ஹாலில் அமர்ந்திருந்தார். எங்கிருந்தோ அவசரமாக ஓடி வந்த ஒருவன் எங்களை போகக்கூடாதெனத் தடுத்தான்.”ஐயா முக்கியமான வேலையா இருக்காரு. யாரும் பாக்க முடியாது” என்றான் காத்திரமான…

    மேலும் வாசிக்க
  • 18 February

    சலிப்பாறுதல் -பிறைநுதல்

    முன்னங்கால்களும் பின்னங்கால்களும் தனித்தனியாகக் கட்டப்பட்டு இந்தப்பக்கம் நால்வரும் அந்தப்பக்கம் நால்வரும் இழுத்துப் பிடிக்க, தனியாக இருவர் மூக்கணாங்கயிற்றையம் கழுத்துக்கயிற்றையும் இழுத்துப் பிடிக்க மல்லாந்த நிலையில் ஒரு பக்கமாக தலைசாய்த்து உயிரைவிட்டது மாடு. அறுபட்ட கழுத்திலிருந்து பீய்ச்சியடித்த இரத்தம் ஒரு பாத்திரத்தில் பிடிக்கப்பட்டது.…

    மேலும் வாசிக்க
  • 18 February

    உடற்கூடுகள்– ராம்பிரசாத்

    எரித்ரா கிரகத்தை நெருங்கிக்கொண்டிருந்தது விண்கலன். ஆடா, ஜலேனி இருவரும் நீள் உறக்கத்திலிருந்து எழுந்து ஒளி வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்த விண்கலன், மெல்ல மெல்ல வேகங்குறைந்து கிரகத்தில் தரையிறங்கத் தயாராவதை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்கள். “உன்னைப் பற்றிச் சொல்லேன். மெளனமாக வேலை பார்ப்பது என்னவோ…

    மேலும் வாசிக்க
  • 18 February

    இளிவரல் – அகரன்

    காற்றோட்டமில்லா மந்தமான ஒரு மத்தியான வேளை அது. லாவண்யாவைக் காண வந்த அஞ்சலி கையில் ஒரு நெகிழிப்பை நிறைய சாக்லெட், பிஸ்கட்களுடன் கொஞ்சம் பழங்கள் சகிதமாய்க் காலிங்பெல் அழுத்தினாள். காலிங்பெல் சத்தம் கேட்டு வெளிர் நீலவண்ண நைட்டியுடன் வாசலுக்கு வந்த லாவண்யா…

    மேலும் வாசிக்க
  • 18 February

    அவரா இவர்? – கண்ணன் விஸ்வகாந்தி

    மகள் சாத்விகாவின் குரலில் ‘நீ நின்ன திருக்கோலம்’ அன்றைய காலையில் அமிர்தமாக இருந்தது. அர்ச்சகரிடம் அனுமதி வாங்கிய பிறகு பெருமாளின் முன்பு பாடும் பாக்கியம் கிடைத்தது. பெருமாள் அலங்காரங்களுடன் பட்டாடை அணிந்து, தலையில் கிரீடத்துடன், ஜொலித்தார். நானும் மனைவியும் கண்களை மூடி…

    மேலும் வாசிக்க
  • 18 February

    அகம் கரைந்தால், அகம் இனிக்கும் -கமலா முரளி

    ”ஷீலு, எனக்குத் தண்ணி வேணும்” ஸ்டாண்ட் அப் காமெடி இரைச்சலின் ஊடே, நவீன் குரல் கொடுத்தான். ஷீலு சமையலறையில் கவனமாக இருந்தாள். இரண்டாவது முறை :”ஷீலு, தண்ணி குடு” ஷீலுவுக்கு எரிச்சல். இரண்டு வேளைக்கான உணவைத் தயார் செய்த பின், தானும்…

    மேலும் வாசிக்க
  • 18 February

    பத்மகுமாரி கவிதைகள்

    துண்டிப்பின் தொடர்தல் யாருமற்ற தோணிஎடை பிடித்து வைத்திருக்கிறதுஇறங்கிப் போன பாதங்களின் வெதுவெதுப்பை இல்லாமையின் ரணத்திலிருந்துசீழ்பிடித்து வழியும் உதிரத்திற்குள்ஏக்கத்தின் துர்நாற்றம் தடமழித்திடும் நாவுகழுத்து தாழ்த்தி சரணடைகிறதுகத்தரிக்கோல் விளிம்புகளின் நடுவே தொடர்தலின் துண்டிப்பை இலகுவாக்கபோதுமானதாகயில்லைவெறும் இரண்டு முனைகள் முளைத்துப் பெருக வேண்டும்எண்ணிலடங்காதவை. **** காலத்தின்…

    மேலும் வாசிக்க
  • 18 February

    தேன்மொழி அசோக் கவிதைகள்

    காதலால் ஆள்பவன் கத்தியைக்க காட்டி மிரட்டினாலும்வந்த வழி திரும்புவதில்லைஇந்தக் கொடூரக் காதல்வாழ்ந்துதான் பார்ப்போமேயெனஊனோடு புகுந்துஆளையே கொன்றுவிடுகிறதுஒன்றும் புரியாதது போலவேடிக்கை பார்க்கும்என் புரியாத புதிரோனேஇது நியாயம்தானா?* தேனேதிரவியமேதெம்மாங்குப் பாட்டேயெனகொஞ்சியதெல்லாம் போதும்உண்மையைச் சொல்லித் தொலையேன்எப்படி எந்தவொரு தருணத்திலும்என் மேல் கோபப்பாசி படியாமல்தெளிந்த நீரைப் போலவே…

    மேலும் வாசிக்க
  • 18 February

    கே.ரவிஷங்கர் கவிதைகள்

    1970 பேட்ச் டென்த் ஸ்டாண்டார்டு தியாகுவின் தியாகம் சீனுவை நெகிழ்வோடுபார்த்து தியாகு தேங்கஸ் சொல்லசீனு வெட்கப்பட்டுதலைகுனிந்துநோ மென்ஷன் என்றான்டிரடிஷனல் மேரேஜ் பொருத்தம் பார்முலாவும்சயன்ஸும் மிக்ஸ் ஆகி இருந்ததுதியாகுவிற்கு பிடித்துப் போனதுகாதல் கைகூடுவதற்குஇவ்வளவு லகுவானரூட் எனக்குத் தெரியாமல்போனது வருத்தம்தான்நேதாஜி தெரு ஏல சீட்டுவிடோ…

    மேலும் வாசிக்க
Back to top button