இணைய இதழ்

  • May- 2023 -
    6 May

    அகமும் புறமும்; 20 – கமலதேவி

    காதலெனும் ஔி கவிதை:1 மாவென மடலும் ஊர்ப பூவெனக் குவிமுகில் எருக்கங் கண்ணியும் சூடுப மறுகி னார்க்கவும் படுப பிறிது மாகுப காமங்காழ் கொளினே குறுந்தொகை: 14 பாடியவர்: பேரெயின் முறுவலார் திணை: குறிஞ்சி தலைவன் கூற்று. நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகையில்…

    மேலும் வாசிக்க
  • 6 May

    வங்காளிக் கதைகள் (இரண்டாம் தொகுப்பு) தமிழில்: சு.கிருஷ்ணமூர்த்தி – வாசிப்பனுபவம் – அமில் 

    வங்காள  சிறுகதைகள்  என்ற மொழிபெயர்ப்பு சிறுகதைகளின்  இரண்டாம் தொகுதியை  வாசித்தேன். சு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மிகச் சிறப்பாக அதை மொழிபெயர்த்திருக்கிறார். வாழ்வோடு  மிக  நெருக்கமான சிறுகதைகள்.  எதேச்சையாக நூலகத்தில் இருந்து எடுத்து வந்து வாசித்ததுதான் இந்த நூல். ஆனால் இந்த இரண்டாம் தொகுப்பை…

    மேலும் வாசிக்க
  • 5 May

    பல’சரக்கு’க் கடை; 18 – பாலகணேஷ் 

    கற்றுக் கொண்டவையும் பெற்றுக் கொண்டவையும்! மர்மத்தின் முடிச்சை மறுநாள் காலையில் அவிழ்த்தார் சுரேஷ் ஸார். “கணேஷ், இப்ப கொஞ்ச நாளா நாங்க சீரியல், சினிமான்னு பிஸியாயிட்டதால நாவல்களை எழுதறதில்ல. ஒரு கேஸட்ல டிக்டேட் பண்ணிக் குடுத்துடுவோம். என் மிஸஸ் ஜெயந்தி அதை…

    மேலும் வாசிக்க
  • 5 May

    கடலும் மனிதனும்; 38 – நாராயணி சுப்ரமணியன்

    மிதக்கும் நகரங்கள் மனித வரலாற்றில் சில வர்க்கப் போக்குகள் விநோதமானவை. விமானம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னால் தூர தேசங்களுக்குச் செல்லவேண்டுமானால் கப்பல் பயணம் மட்டும்தான் ஒரே வழி. வான்வழிப் பயணம் சாத்தியமானபின்பு அந்த நிலை மாறியது. தங்களது நேரத்தையும் வசதியையும் பொறுத்து மக்கள்…

    மேலும் வாசிக்க
  • 5 May

    பெருவெளியில் விட்டெறியப்பட்ட கவிதை – மீரான் மைதீன்

    பல அர்த்தங்களிலும் ஒரு சூஃபியின் மனம் என்பது பெண்மையின், தாய்மையின் மனம் போன்றதுதான். இதனோடு படைப்பு மனமும் கலைமனமும் இசைவு கொண்டிருந்தால் அது மேலுமொரு ஆனந்த அனுபவமாகிவிடுகிறது. சில படைப்புகளை வாசிக்க நேர்கையில் அதன் மைய ஓட்டம் நமக்குப் புலப்படும்போது நாம்…

    மேலும் வாசிக்க
  • 5 May

    கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்

    யார் நீங்கள்? அனைத்திலிருந்தும் வெளியேறிவிட குடியிருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் கட்டிட வாசல் மட்டுமே வழி அல்ல தெருக்கள் சந்துகள் சாலைகள் நெடுஞ்சாலைகள் என எங்கெங்கும் நெரிசல் துரோகம் ஃபிராடுத்தனம் கூச்சல் குழப்பம் வெளியேறுதல் நிகழ்ந்தது முன்னர் வனத்திலிருந்து வெளியேறுதல் நிகழ்கிறது பின்னர் வனம்…

    மேலும் வாசிக்க
  • 5 May

    செ.புனிதஜோதி கவிதைகள்

    அகோரத்தின் பசி உங்கள் தனிமையை எங்கே தொலைப்பதென அறியாமல் அங்கே தொலைத்திட வந்தீர்கள் பலநாட்களாக வெறுமையோடு கரம்குலுங்கிக் கொண்டிருந்தவன் நீங்கள் அடித்து விளையாடும் அழைப்பு மணி உடலெங்கும் ஊறும் புழுவின் நமைச்சல் வெறுமையும் தனிமையும் அகோர உருவமெடுக்கும் புயல் என்பதை அப்போது…

    மேலும் வாசிக்க
  • 5 May

    தென்றல் கேசட் கடை – ந.சிவநேசன் 

    நான் பேருந்து நிலையத்தில் இறங்கியபோது இருட்டத் தொடங்கியிருந்தது. சுராஜுக்கு போன் அடித்தேன். வந்து கொண்டிருப்பதாகச் சொன்னான். சுராஜ் என் முகநூல் நண்பன். அவனுடனான பழக்கத்தினால் மீண்டும் பதினெட்டு வருடங்கள் கழித்து ஆத்தூர் மண்ணில் கால் வைப்பதை நினைத்தால் புல்லரிப்பாக இருந்தது. இரயில்வேயில்…

    மேலும் வாசிக்க
  • 5 May

    அனுராதா பசு,  ஈமுக்கோழிகள் மற்றும் பீற்றர் பன்றிகள் – மோனிகா மாறன்

    ஒரு சின்ன மட்டடார் வேனில் அந்த பெரிய பறவைங்க ரெண்டும் அற்புதராஜ் ஐயா வீட்டுக்கு வந்து இறங்கிய போது ஊரே வேடிக்கை பார்த்தது.  “ஐயோ..நெருப்புக்கோளியா?” “இது இன்னாடி இத்தா தண்டி இருக்கு. எம்மாம் ஒசரம்” – நாலடி ஒயரமான பிடுகு தாத்தன்…

    மேலும் வாசிக்க
  • 5 May

    தாமரைபாரதி கவிதைகள்

    அழுக்காறு உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்பதை திடீரென மறையும் அந்திமேகமாய் காற்று கொண்டுவரும் குளிர்ச்சியால் வருடாதீர் எனது உயரத்தை உங்களால் ஒருபோதும் தாங்கமுடிவதில்லை என்பதை மறைமுக உதாசீன மழையாகப் பொழியாதீர் உங்கள் வரையறைக்குள் வரமுடியாத என்னை வலுக்கட்டாயமான சிரித்த முகத்துடன் வரவேற்க…

    மேலும் வாசிக்க
Back to top button